2020-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 யூடியூபர்கள்

2020 ஆம் ஆண்டில் அனைவராலும் பயன்படுத்தப்படும் யூடியூப் தளத்தில் அதிக பணம் ஈட்டிய யூடியூபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் அனைவராலும் பயன்படுத்தப்படும் யூடியூப் தளத்தில் அதிக பணம் ஈட்டிய யூடியூபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

 • Share this:
  இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி தற்போது யூடியூபர் என்பதையே முழுநேர வேலையாக செய்துவருகின்றனர். தற்போது அனைவருக்கும் சொந்த வீடு இருக்கிறதோ இல்லையோ, சொந்தமான யூடியூப் சேனல் இருக்கிறது.இதில் அவர்களின் அன்றாட வாழ்க்கையை vlog என்ற பெயரில் காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை உள்ள நிகழ்வுகளை பதிவிட்டு மில்லயன் லைக்ஸ்களை பெறுகின்றனர்.

  அதுமட்டுமில்லாமல் உணவு, பேஷன், டெக்னாலஜி என பல துறைகளில் வீடியோ பதிவிடுகின்றனர்.அதும் இந்த கொரோனா காலத்தில் யூடியூப் சேனலின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.ஒருவர் பதிவிடும் வீடியோவை பார்வையாளர்கள் பார்க்கும் எண்ணிக்கையை பொருத்து அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் யூடியூப் தளத்தில் அதிக பணம் ஈட்டிய யூடியூபர்களின் பட்டியல் இதோ.

  1.ரியான் காஜி  ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் யூடியூபில் அதிக வருமானம் ஈட்டிய பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.இவர் புதிய பொம்மைகள் பற்றி ரிவ்யூ கொடுப்பது,அறிவியல் சோதனைகள் செய்வது, இப்படி குழந்தைகளை கவரும் வகையில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிடுவார்.இவரின் யூடியூப் சேனலுக்கு 41.7 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூதல் 2020 ஆம் ஜூன் மாதம் வரையிலான வருமானத்தின்படி ரியான் 29.5 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு ரூ.217 கோடியாகும்.2019 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட யூடியூபர்கள் பட்டியலிலும் இவரே முதல் இடம் பிடித்தார்.

  2.ஜிம்மி டொனால்ட்சன்  ஜிம்மி தனது யூடியூப் சேனலில் நகைச்சுவை மற்றும் சகாச வீடியோக்களை பதிவிடுவார்.இவரின் யூடியூப் சேனலுக்கு 47.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.இந்த ஆண்டு 24 மில்லியன் டாலர் சம்பாதித்து ப்போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.177 கோடியாகும்.

  3.டியூட் பெர்ஃபெக்ட்  57 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட டியூட் பெர்ஃபெக்ட் சேனலில் 5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து நடத்துகின்றனர். நகைச்சுவை மற்றும் சாகச வீடியோக்களை பதிவிடுவார்கள்.இந்த ஆண்டு 23 மில்லியன் டாலர் சம்பாதித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.169 கோடியாகும்.

  4.ரெட் & லிங்க்  ரெட் ஜேம்ஸ் மற்றும் சார்லஸ் லிங்கன் ஆகிய இருவரும் நடத்தும் நடத்தும் யூடியூப் சேனலில் 41.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.இவர்களின் யூடியூப் சேனலில் வரும் டாக் ஷோவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு என்று தான் கூற வேண்டும்.ஃப்போர்ப்ஸ் கணக்கீட்டின்படி இந்த ஆண்டு 20 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.147 கோடியாகும்.

  5.மார்க்கிபிளேயர்  8 ஆண்டுகளாக இருக்கும் இந்த யூடியூப் சேனலில் 27.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.இந்த சேனலை மார்க் ஃபிஷ்பேச் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த ஆண்டு தனது யூடியூப் சேனலில் பதிவிட்ட வீடியோ மூலம் 19.5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.
  இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.144 கோடியாகும்.

  6.பிரெஸ்டென் அர்ஸ்மெண்ட்  கேமிங் தொடர்பான வீடியோக்களை பதிவிடும் இந்த யூடியூப் சேனலில் 33.4 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.ஃப்போர்ப்ஸ் வெளியிட்ட இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூடியூபர்கள் பட்டியலில் 6 வது இடம் பிடித்து 19 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.140 கோடியாகும்.

  7.நாஸ்டியா  அனாஸ்டாசியா ராட்ஸ்கியா என்ற 6 வயது சிறுமி நடத்தும் யூடியூப் சேனலில் 19.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.இந்த சிறுமி தனது யூடியூப் சேனலில் தான் வீட்டில் செய்யும் வேலை மற்றும் கிருமிகளை பற்றி கூறுவது என அனைத்தையும் பதிவிடுகிறார்.இவரின் வீடியோக்கள் அனைத்துமே மிகவும் கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனலாக இருக்கிறது.மேலும் டிக்டாக்கில் 3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று பிரபலமான சிறுமி என்ற பெயரை பெற்றவர்.2020 ஆம் ஆண்டில் யூடியூப் சேனல் மூலம் 18.5 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு ரூ.135 கோடியாகும்.

  8.பிளிப்பி  2014 ஆம் ஆண்டு ஸ்டெவின் ஜான்சன் என்பவரால் தொடங்கப்பட்டது பிளிப்பி என்ற யூடியூப் சேனல்.இதில் குழந்தை போல் வேடமிட்டு ஜான்சன் ’blippi visits the aquarium'மற்றும் ‘learn colors with blippi' போன்ற வீடியோக்கள் மூலம் பயனுள்ளதை குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறார்.27.4 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட இவரின் யூடியூப் சேனல் மூலம் இந்த ஆண்டு 17 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு ரூ.124 கோடியாகும்.

  9.டேவிட் டோப்ரிக்  டேவிட் டோப்ரிக் தனது யூடியூப் சேனலில் 18 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளார்.இவருக்கு டிக்டாக்கில் 24.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.இந்த ஆண்டில் 15.5 மில்லியன் டாலர் சம்பாரித்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.113 கோடியாகும்.

  10.ஜெஃப்ரி ஸ்டார்  அழகு சாதன பொருட்களை வைத்து கலர்ஃபுல்லான வீடியோக்களை பதிவிடும் ஜெஃப்ரி ஸ்டார் யூடியூப் சேனலில் 16.9 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 10வது இடத்தை பிடித்து 15 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.109 கோடியாகும்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: