• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..” - கருணாநிதியின் காந்தக் குரலில் மயங்கிய ஓர் கடைகோடி தொண்டரின் உணர்வு

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..” - கருணாநிதியின் காந்தக் குரலில் மயங்கிய ஓர் கடைகோடி தொண்டரின் உணர்வு

கருணாநிதி

கருணாநிதி

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகத்தைப் பார்த்தபோது கலங்கி கண்ணீர் வடித்தேன்.

  • Share this:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் மு.கருணாநிதியின் நினைவுநாள் இன்று. இந்நாளில் கருணாநிதியின் பேச்சால் கவரப்பட்ட கடைகோடி தொண்டர், 80 வயதைக் கடந்த முதியவர் ஜெயராஜ் தமது உணர்வை நம்மோடு பகிர்ந்தார்.

சேலம் மாவட்டம் இரும்பாலையைச் சேர்ந்த முதியவர் ஜெயராஜ் கூறுகையில், “திமுக எனும் அரசியல் பேரியக்கம் பேரறிஞர் அண்ணாவால் தெடங்கப்பட்டு தமிழக அரசியலில் வேறூன்றி வளர்ந்து, விழுதுவிட்டு விருட்சமாய் நிற்கிறது. அந்த மரத்தை தன் மரணம் வரையில் நீரூற்றி பாதுகாத்து வளர்த்து, அதை பார்த்து ரசித்தவர் கலைஞர். அவரின் சாதுர்யம் மிக்க ஆளுமையைப் பார்த்து ரதித்தவன் நான். நான் கட்சியின் எந்த பொறுப்பிலும் இருந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவரின் செயலால், பேச்சால் கவரப்பட்டவன். எங்கள் பகுதிக்கு அவர் வந்து பேசும்போதெல்லாம் தவறாமல் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வேன்.

“கலைஞரின் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற கரகரத்த அந்தக் காந்த குரலைக் கேட்கும்போது மனதிற்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கும். அடுக்கு மொழியும், நகைச்சுவை தெறிக்கும் கர்ஜனை மிக்க பேச்சும் கேட்போரை சுண்டி இழுக்கும். கருணாநிதி மேடையில் பேசும்போது, அங்கே திரண்டிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்றாலும், அந்த பேச்சு சத்தம் காதுகளில் பல நாட்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவரை நாங்கள் கருதி வந்தோம். பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி நிறுவனராக 75 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள், திமுக தலைவராக 50 ஆண்டுகள் என பொதுவாழ்வில் ஓய்வே இல்லாமல் பணிபுரிந்தவர்.

கருணாநிதி


கருணாநிதி போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியையே சந்தித்ததில்லை, திமுக ஆட்சியைப் பிடிக்காதபோதும் தளர்வின்றி உழைத்தவர். தன் வாழ்நாள் முழுவதும் கட்சியைக் கட்டிக்காத்தவர். 18 வருஷம் முதலமைச்சராக இருந்தவர். முதன் முதலில் அவர் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டது 1957 என நினைக்கிறேன். அப்போதிலிருந்து கடைசி மூச்சு வரை சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார் கலைஞர். அவர் ஒருமுறைகூட தேற்றதில்லை.

காண கிடைக்காத கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்குவாராம். எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதியின் பேச்சு அவ்வளவு பிடிக்கும் என்று சொல்வார்கள். ஏன், ஜெயலலிதா கூட, ‘கருணாநிதியின் பேச்சு முறை பிடிக்கும்’ என்று கூறியதாகச் சொல்வார்கள். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர் எடுக்கும் அறிவாற்றல் மிக்க முடிவுகளை கண்டு எத்தனையோமுறை வியந்திருக்கிறேன்.

Must Read : Karunanidhi : சமூக நீதியை நிலை நிறுத்த அரசு திட்டங்களை முன்னெடுத்த கருணாநிதி!

ஜெயராஜ்


என் ரத்த உறவுகள் இறந்தபோது கூட நான் அவ்வளவு துயரம் அடைந்ததில்லை. கலைஞர் என்ற அந்த ஆலமரம் சாய்ந்துவிட்டது என்று அறிந்தபோது, இந்த உலகமே இருண்டு போனதைப்போல தோன்றியது. துக்கம் தொண்டையை அடைத்தது. சிறுபிள்ளேயைப்போல நான் தேம்பித்தேம்பி அழுதேன். நான் மட்டுமல்ல எங்கள் குடும்பமே அழுதது. ஏன், தமிழ்நாடே அழுததை டி.வி.யில் பார்த்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த சந்தனப் பேழையில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகத்தைப் பார்த்தபோது எவ்வளவு பொருத்தமான வாசகம் என்று எண்ணி பெருமிதமும், துக்கமும் கலந்த உணர்வுடன் கண்ணீர் வடித்தேன். இப்போதும் கலைஞரின் பேச்சுகளை என் பேத்தியின் செல்போனில் பார்த்து அவ்வப்போது ரசிக்கிறேன்.” என்று கூறி கண்கலங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: