ஆஃப்கானிஸ்தானில் அரசுப்படைகள் மற்றும் தாலிபான்களுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர், அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், ஆனால் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று கூறி உள்ளார்.
தோல்வியடைந்த நாடு என்ற வரிசையில் ஆப்கானிஸ்தான் இருக்கும் போது 2014-ல் அஷ்ரப் கனி ஆப்கானை மறுகட்டுமானம் செய்ய அதிபராக்கப்பட்டார். ஆனால் இவரால் தலிபான்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழலையும் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்பு ஆப்கான் படைகளை ஓட ஓட விரட்டிய தலிபான்கள் இப்போது ஆப்கானிஸ்தானத்தையே கைப்பற்றினர். இது தொடர்பாக அஷ்ரப் கனி கூறும்போது, “தங்களது வாள் மற்றும் துப்பாக்கிகளின் தீர்ப்பில் தலிபான்கள் வெற்றி கண்டனர். இப்போது இவர்கள் நாட்டு மக்களின் கவுரவம், சொத்து, தற்காப்பு ஆகியவற்றுக்கு பொறுப்பாளியாவார்கள்” என்று கூறியுள்ளார்.
அஷ்ரப் கனியை ஓரங்கட்டி அமெரிக்கா தலிபான்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை:
9/11 தாக்குதலுக்குப் பிறகு பின் லேடனைப் பிடிக்க எத்தனித்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் ஊடுருவின, ஜார்ஜ் புஷ் இதற்கான உத்தரவை இட்டார். அதன் பிறகு தலிபான்களுக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது, ஆனால் அதன் பிறகு அமெரிக்க சிவில் சமூகங்கள், அறிவுஜீவிகள், கட்சிகள், அரசியல்வாதிகள் என்று பலரும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் கஷ்டப்படுவதற்கு எதிராகவும் உயிரிழப்புகளுக்கு எதிராகவும் குரல்கள் வலுக்கத் தொடங்கின.
இதனையடுத்து தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது, ஆனால் அதிபர் அஷ்ரப் கனியைப் புறக்கணித்து விட்டு தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியது. இதனையடுத்து அமெரிக்கா அப்படியே அத்ரதையாக ஆப்கானை விட்டு வெளியேற தலிபான்கள் கை ஓங்கியது. அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
அஷ்ரப் கனியை வெறும் ‘பொம்மை’ என்று வர்ணித்தது தலிபான். இவரும் தன்னுடைய சிலபல தொலைகாட்சி உரைகள் மூலம் மக்களிடம் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்.
அஷ்ரப் கனி சாதாரணப்பட்டவர் அல்ல:
2014-ல் ஆப்கான் அதிபராவதற்கு முன்பாக வெளிநாட்டில் அவர் ஒரு கல்விப்புலம் சார்ந்த அறிவாளி, தோல்வியடைந்த நாடுகளின் பொருளாதார ஆய்வு நிபுணராக இருந்தவர். 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தானத்தை மறுகட்டமைப்பு செய்யும் கனவுடன் திரும்பினார்.
நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்தவர். 1980களில் ஆப்கானிஸ்தானை சோவியத் ரஷ்யா ஆக்ரமித்திருந்த போது அஷ்ரப் கனி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பொருளாதார பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
1991-ல் உலக வங்கியுடன் இணைந்து பணியாற்றினார். ரஷ்ய நிலக்கரி துறையின் நிபுணரானார். பிறகு 2001-ல் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகு காபூலுக்கு ஐநா சிறப்பு ஆலோசகராக வந்தார்.
அஷ்ரப் கனியின் பங்களிப்பு:
ஹமித் கர்சாய் அரசில் சக்தி வாய்ந்த நிதியமைச்சராக இருந்தார் அஷ்ரப் கனி. 2002 முதல் 2004 வரை இந்தப் பதவியில் இருந்தார். ஊழலுக்கு எதிராக கடும் பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.
அறிவாளியான அஷ்ரப் கனி புதிய கரன்சியையும் புதிய வரி முறையையும் கொண்டு வந்தார். செல்வந்த வெளிநாட்டு ஆப்கானியர்கள் நாடு திரும்ப ஊக்குவித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் காலத்திலிருந்து ஆப்கான் வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆனால் குண ரீதியாக ஒரு மாதிரியானவர், யாரும் இவரை அண்ட முடியாது, அணுக முடியாது, மிகுந்த கோபக்காரர், சட்டென யாரிடத்திலும் கோபத்தைக் காட்டக் கூடியவர் என்று இவருடன் 30 ஆண்டுகாலம் பழகிய எழுத்தாளர் அகமது ரஷீத் கூறுகிறார்.
வயிற்றுப் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகே அஷ்ரப் கனியினால் முழு உணவை அருந்த முடியாது. ஸ்னாக்ஸ் மட்டுமேதான் அவரது உணவு.
2014-ல் அதிபரான போது நான் ஒதுங்கிய தனிப்பட்ட வாழ்க்கையை வாழ மாட்டேன் என்றார், ஆனால் செய்ததெல்லாம் அரண்மனையில் தனித்த வாழ்க்கைதான் வாழ்ந்தார், மக்களிடமிருந்து அன்னியமானார். இன்று தலிபான்கள் நாட்டை பிடித்ததற்கு அஷ்ரப் கனி காரணம் என்று மக்களின் கோபத்தை அவர் சந்திப்பார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள் சிலர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்போது தலிபான்களின் எழுச்சியில் நாட்டை விட்டே வெளியேறினார். ஒரு அறிவாளியின் அரசியல் வீழ்ச்சியின் கதை என்று தான் இதை வர்ணிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban