• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • தன்னலம் கருதாத உதவிகள்: பிரதமர் மோடியின் தெரியாத பக்கங்கள்!

தன்னலம் கருதாத உதவிகள்: பிரதமர் மோடியின் தெரியாத பக்கங்கள்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அரசியலில் ஆக்ரோசமானவராகவே பிரதமர் மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆக்ரோசத்துக்குள் மென்மையான, கனிவான ஒரு முகமும் மோடிக்கு உண்டு. தான் செய்த உதவிகள் குறித்து வெளிப்படையாக பேச என்றுமே அவர் விரும்பியது இல்லை

  • Share this:
பிரதமர் மோதி யார் மீதும் பிரியம் இல்லாதவர், யாருடைய இழப்பும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் என்பது போன்ற பிம்பத்தை அவரது அரசியல் எதிரிகளும் தொழில்முறை விமர்சகர்களுக்கு உருவாக்கியுள்ளனர். ஆனால், மோடியின் கண்ணீரில் கூட அரசியல் செய்யும் இத்தகைய விமர்சகர்கள் உருவாக்கியுள்ள பிம்பத்துக்கு மிகவும் தொலைவில் உள்ளது அவரது உண்மை முகம்.

லட்சக்கணக்கான மக்களுக்கு அதிகாரப்பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் உதவியாக இருப்பதை மோடி  பலமுறை நிரூபித்துள்ளார். துன்பத்தில் துவழும் மக்களின் பக்கம் அவர் நின்றுள்ளார். மோடியின் இந்த பக்கம் குறித்து கூற ஆயிரம் கதைகள் உண்டு, ஆனால் அவை அபூர்வமாகவே பொதுவெளியில் பகிரப்படும். மோடியும் இத்தகைய உதவிகளை வெளியில் காட்டிக்கொள்ள என்றுமே விரும்பியது இல்லை. உலகம் எவ்வாறு எடுத்துக்கொள்ளும், மோடி என்ன நினைப்பார் என்பதாலேயே, அவரால் பலன் அடைந்த பலரும் இதனை பொதுவெளியில் தெரிவிப்பது இல்லை.

தொலைக்காட்சி வர்ணனையாளரும் நிருபருமான ரூபிகா லியாகத், பிரதமர் மோடி தனக்கு எழுதிய கடிதத்தை இணைத்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். கடினமான நேரத்தில் தன் பக்கத்தில் இருந்ததற்காக நன்றி எனவும் மோடியை அவர் பாராட்டி இருந்தார்.  ரூபிகா லியாகத்தின் தாயார் ஃபாத்திமா லியாகத்துக்கு கடந்த மே 2ம் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.  அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், உதய்பூரில் உள்ள பாராஸ் ஜேகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஈகை திருநாளான மே 14ம் தேதி , புதிய எண்ணில் இருந்து ரூபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. குழப்பான நிலையில் அழைப்பை ஏற்ற அவர் பேசுவதற்கு முன்பாகவே எதிர் தரப்பில், பிரதமர் மோடி அவருடன் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபிகாவின் பேசிய மோடி, ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது தனது தாயாரின் நிலை குறித்து அவரிடம் ரூபிகா எடுத்து கூறியுள்ளார்.

அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட மோடி, அவரது தாயார் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனடியாக தனது தொலைபேசியை ஃபாத்திமாவிடம் அளித்த ரூபிகா, பிரதமர் மோடி மறுமுனையில் இருப்பதாக கூறியுள்ளார். பேசக்கூடிய நிலையில் ஃபாத்திமா இல்லாதபோதும், பிரதமர் மோடி அழைப்பில் இருப்பதை தெரிந்துகொண்டு அவர் பேசினார். நோயை எதிர்த்து விரைவில் குணமடைவீர்கள் என்று மோடி ஃபாத்திமாவுக்கு நம்பிக்கை ஊட்டினார். அனைத்து உதவிகளையும் செய்வதாக ரூபிகாவுக்கு மோடி உறுதியளித்தார்.

சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மோடி

அதன் பின்னர் ரூபிகாவுடன் மோடி பேசவில்லை; எனினும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரூபிகாவை அவ்வப்போது தொடர்புகொண்டு அவரது தாயாரின் நிலை குறித்து கேட்டறிந்தனர். தேவையான மருந்துகள், தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஃபாத்திமா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் மருத்துவர்களை எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்  குலேரியா போன்றவர்கள் அவ்வப்போது தொடர்புகொண்டு ஃபாத்திமாவின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இத்தகைய தலைசிறந்த மருத்துவர்கள், ஃபாத்திமாவுக்கு உதவுவதை அறிந்து உதய்பூர் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் ஃபாத்திமா 26 நாட்களில் உயிரிழந்தார்.

மோடி குறித்த பிற இஸ்லாமியர்களின் எண்ணமும் ரூபிகாவின் அனுபவமும்

இந்த நிகழ்வு மூலம் மோடியின் புதிய முகத்தை ரூபிகாவும் அவரது சகோதரி, தந்தை ஆகியோர் அறிந்துகொண்டனர். சவூதி  இளவரசர் இந்திய வந்தபோது அவரை வரவேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு நிகழ்ச்சியின்போதுதான் பிரதமர் மோடியை ரூபிகா முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தார்.

பிரதமர் மோடியை கண்டு இஸ்லாமியர்கள் பயப்படுவதாகவும் இஸ்லாமியர்களின் எதிரி மோடி என்றும் பொதுவாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் நேரெதிராக ரூபிகாவின் குடும்பம் கடும் இன்னலில் சிக்கியிருந்தபோது மோடி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.எந்த மோடி இஸ்லாமியர்களின் வில்லனாக சித்தரிக்கப்பட்டு வருகிறாரோ அந்த மோடிதான் ஃபாத்திமா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவினார்.

ரூபிகாவின் தாயார் மறைவுக்கு கடிதம் அனுப்பிய மோடி

ரூபிகாவின் தாயார் மறைந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை அனுப்பினார். ஃபாத்திமா குறித்துமட்டுமல்ல , அந்த குடும்பத்தினரின் வலிக்கு மருந்து போடும் விதமாக அந்த கடிதம் அமைந்திருந்தது. . பிரதமர் மோடியின் இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன் என ரூபிகாவின் தந்தை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.  பிரதமர் மோடி தனது பரபரப்பான வேலைகளுக்கு இடையேயும் தங்களுக்கு கடிதம் எழுதுவார் என்றோ பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதாரன குடும்பத்தினரான தங்களுக்கு உதவுவார் என்றோ அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதையடுத்து பிரதமருக்கு பதில் கடிதம் எழுதிய ரூபிகா, தங்கள் குடும்பத்தினருக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம் என்றும், பரபரப்புகளுக்கு இடையேயும் எனது தாயாரின் நிலை குறித்து அறிந்து உதவியதாகவும் தெரிவித்தார்.

சத்தம் இல்லாமல் உதவிகளை செய்பவர்

மோடியின் உதவும் குணத்தை பறைசாற்ற இந்த ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, இது போல் ஆயிரம் நிகழ்வுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை, ஏனெனில் பிரதமர் மோடியிடம் தங்களது நெருக்கத்தை காட்டவே இதுபோன்ற கதைகள் உருவாக்கப்படுவதாக பிறர் எண்ணிக்கொள்வார்களோ என அவர்கள் தயங்குகின்றனர்.  . பிரதமர் மோடியும் இத்தகைய உதவி குறித்து வெளிப்படையாக எப்போதும் அறிவித்துக்கொள்வதில்லை இவற்றைப் பற்றி பகிரங்கமாகக் குறிப்பிடவில்லை. அவர் எதையும் வெளியில் குறிப்பிடாமல் மக்களுக்கு உதவுகிறார். ஆனால் அவரது உதவியைப் பெற்றவர்கள், அதை ஒருபோதும் மறக்க முடியவில்லை.

தற்போது தகவல் ஆணையராக பணியாற்றிவரும் உதய் மஹூர்கரும் இத்தகைய அனுபவங்களை பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடியை 30 ஆண்டுகளாக தெரியும். உதய் மஹூர்கரின் மனைவி ஸ்மிதா  கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டார். சராசரி ஆக்சிஜன் அளவு 95 என்ற நிலையில், ஸ்மிதாவின் ஆக்சிஜன் அளவு 55க்கும் குறைவாக சென்றது. டெல்லி மருத்துவமனையின் நிலை மோசமாக இருந்ததால் இது குறித்து பிரதமரின் பி.ஏ.வுக்கு உதய் தெரிவித்தார். இந்த தகவல்கள் உடனடியாக மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 5 நிமிடத்தை உதய் மஹூர்கரை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஏ.கே.சிங் ஆகியோர் தொடர்புகொண்டனர். ஏப்ரல் 7ம் தேதி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் ஸ்மிதா அனுமதிக்கப்பட்டார். 19 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஸ்மிதா குணமடைந்து வீடு திரும்பினார். இடைப்பட்ட நாட்களில் பிரதமர் மோடி இரண்டு முறையும் பிரதமர் அலுவலகம் அவ்வப்போதும் உதய் மஹூர்கரை தொடர்புகொண்டு ஸ்மிதாவின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

கடந்த ஆண்டு உதய் மஹூர்கரின் தந்தை உயிரிழந்தபோதும் பிரதமர் மோடி உடனடியாக அவரை தொடர்புகொண்டு பேசினார். உதய் தந்தையின் மறைவு தொடர்பாக இரங்கல் கடிதத்தையும் அவருக்கு எழுதி அனுப்பினார்.

கொரோனா நேரத்திலும் பலரை அழைத்து பேசிய மோடி

ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில், பிரதமர் மோடி ஆயிரத்துக்கு மேற்பட்டோரை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். இவர்களின் பலர் மிகவும் சாதாரணமானவர்கள், இவர்களை அழைத்து பேசுவதால் அரசியல் ரீதியாக மோடிக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை.  ஆனாலும், பல ஆண்டு பழக்கம் காரணமாகவே மோடி அவர்களை எல்லாம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.  தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்த ஜேம்சத்பூரைச் சேர்ந்த  சங்க் பரிவார் அமைப்பின் தொண்டருக்கு அவர் உதவியுள்ளார், குஜராத்தில் மட்டும், பவீன்பாய் ஒட்டியா, முகுந்த்ராவ் தியோபங்கர், பகீரத்பாய் தேசாய் மற்றும் ஹரிஷ்பாய் ராவல் என சங்க் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பலரையும் மோடி அவ்வப்போது தொடர்புகொண்டு அவர்களின் நிலை குறித்து விசாரிப்பது உண்டு.

தனதுடன் ஓரே சித்தாந்தத்தை பகிர்ந்துகொள்வர்களுக்கு மட்டுமே அவர் உதவுவதில்லை. அவரது சித்தாந்தத்தற்கு தொடர்பு இல்லாத, அதே சமயம் இன்னலில் உள்ள நபர்கள் குறித்து தெரியவந்தால் பிரதமர் மோடி நேரடியாகவே அவர்களை தொடர்புகொண்டு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாக உறுதி அளிப்பார்.

 

தன்னை விமர்சிப்பவர்களின் உடல்நலனிலும் அக்கறை கொண்டவர்

டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஆங்கில தினசரியில் பணியாற்றி வருகிறார். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர் அவர். எனினும், ஒருமுறை அவர் தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரது நிலை குறித்து சக பத்திரிக்கையாளர் மூலம் மோடிக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், ஒருநாள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது, பிரதமர் மோடி பேச விரும்புவதாக எதிர்முனையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் பேசிய மோடி, உடல்நலம் குறித்து விசாரித்தோடு மட்டுமல்லாமல் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

மக்களை ஆச்சரியப்படுத்தும் மோடியின் உணர்திறன்

அந்த பத்திரிக்கையாளரை மேலும் பலமுறை மோடி தொடர்புகொண்டு பேசியுள்ளார். தனது பரபரப்பான சூழலிலும் எப்படி மோடிக்கு தொலைபேசியில் அழைத்து பேச நேரம் கிடைக்கிறது என்பதை மோடியின் விமர்சகரான அந்த பத்திரிக்கையாளரால் அறிந்துகொள்ளவே முடியவில்லை. இந்திய பிரதமர் ஒருவர் பத்திரிக்கையாளரை அழைப்பேசியில் அழைத்து பேசுவது என்பது தினசரி நிகழ்வதல்ல. சொல்லப்போனால், அந்த பத்திரிக்கையாளருக்கு பிரதமரிடம் அழைப்பு வந்தது அதுவே முதல்முறை. இந்த அழைப்பு, நோயை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடக்கூடிய தைரியத்தை அவருக்கு அளித்தது. பிரதமர் மோடியிடம் இருந்து வந்த அந்த அழைப்பு அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது.  இன்று உலகின் தனக்கான முக்கிய இடத்தை மோடி செதுக்கியுள்ளதால், தன்னை போன்ற ஒரு பத்திரிக்கையாளரின் உதவி அவருக்கு தேவையில்லை என்பது அந்த பத்திரிக்கையாளருக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. இருந்தும் பிரதமர் அவரை தொடர்புகொண்டு பேசியது குறித்து அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஏழை குழந்தைகளின் நலனிலும் அக்கறை கொண்டவர் மோடி

நாட்டின் மதிப்புமிக்க பதவியில் உள்ள மூத்த பத்திரிக்கையாளரும் இதுபோன்ற சந்தர்ப்பத்தை எதிர்கொண்டதுண்டு. தனது மனைவின் உடல்நலன் குறித்து அவர் கவலைப்பட்டு வந்த நிலையில், இது குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு சென்றது. உடனடியாக அவரை தொடர்பு கொண்ட மோடி பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெறும்படி கூறியுள்ளார்.

அந்த மூத்த பத்திரிக்கையாளர் பெங்களூரு சென்று யோகா ஆராய்ச்சி மையத்தை அடைந்தபோது, பிரதமர் மோடியின் உத்தரவுப்படி அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்ததை அறிந்துகொண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது போன்று பலருக்கும் மோடி பரிந்துரைகள் வழங்கியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும் இதில் அடங்கும். அந்த குழந்தையின் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் மோடி ஏற்றுக்கொண்டார். அந்த ஆராய்ச்சி மையத்தில் குழந்தையை அனுமதிக்க வைத்து சிகிச்சை அளிப்பது மூலம் மோடிக்கு எந்த அரசியல் லாபமும் இல்லை.. ஆனால், தனது விமர்சகர்களுக்கு எப்போதும் மூர்க்கமாகவே இருக்கும் மோடியின் மென்மையான மற்றும் கனிவான பக்கம் குறித்து காட்டுகிறது.

ஊடக துறையின் மூத்த நபரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய மோடி

தனது மென்மையான பக்கம் மூலம் மக்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும் பழக்கம் மோடிக்கு உண்டு. அப்படிதான், தனது தீவிர விமர்சகர் ஒருவரை மோடி ஆச்சரியப்படுத்தினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவரான அந்த ஊடகவியலாளர் இடதுசாரி சிந்தனை உடையவர். ஒருமுறை பெரிய பொழுதுபோக்கு ஊடகத்தின் ஆசிய தலைவராக அவர் முயன்றபோது, அவருக்கு ஏற்பட்ட தடங்கல் அனைத்தையும் மோடி தீர்த்து வைக்க முயன்றார். அந்த ஊடகவியலாளரின் தந்தை மறைந்தபோது அவரை உடனடியாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்களில் மோடியும் ஒருவர். ஊடக துறையின் மிகப்பெரிய நபராக இருந்தபோதிலும் பிரதமர் மோடி தன்னை தொடர்புகொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

பிரதமர் ஆனது பின்னர் என்றில்லை, பாஜக தொண்டராக, குஜராத் முதல்வராக இருந்தபோதே மோடியிடம் இத்தகைய மென்மையான குணம் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் உதவியபோதும் இது குறித்து ஒரு வார்த்தை கூட அவர் வெளியே கூறியதில்லை. அத்தகைய மக்களின் பாதுகாவலராகவே அவர்களுடன் மோடி இருந்தார்.

குஜராத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரை காப்பாற்ற விமானத்தை அனுப்பிய மோடி

கடந்த 2004ம் ஆண்டு தனது உயிரை காப்பாற்ற நரேந்திர மோடி ஆற்றிய முக்கிய பங்கினை அகமதாபாத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான நிர்னே கபூரால் எப்போதும் மறக்க முடியாது. 2001ம் ஆண்டு நிலநலக்கம் காரணமாக குஜராத்தின் குட்ச் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. குட்ச்சின் மாவட்ட தலைநகரான புஜ் பகுதியில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய நிலை குறித்த செய்தியை சேகரிப்பதற்காக நிர்னே கபூர் அங்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள தனது மருத்துவரை நிர்னே தொடர்புகொண்டபோது, புஜ் பகுதியில் உள்ள மருத்துவரை தொடர்புகொள்ளும்படி ஆலோசனை வழங்கியுள்ளார். எனினும் நிலைமை மேலும் மோசமடைந்தது. நிர்னே மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பது புஜ் பகுதியைச் சேர்ந்த மருத்துவருக்கு தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கு வசதி இல்லை என்பது நிர்னே பணியாற்றும் ஊடகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த ஊடகத்தின் தலைமை ஆசிரியர் ராஜத் சர்மாவுக்கு மோடியை என்கு தெரியும் என்பதால் அவரை தொடர்புகொண்டு நிலைமை குறித்து விளக்கியுள்ளார்.

உடனடியாக அகமதாபாத்தில் இருந்து மருத்துவர் உபகரணங்கள், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவுடன் கூடிய விமானம் புஜ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் நிர்னேவை அகமதாபாத் அழைத்து வந்து ஸ்டெர்லிங் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. நிர்னே நலம் பெற்ற பின்னர், அவரை தொடர்புகொண்ட மோடி, அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் உடல் நலனில் அக்கறை செலுத்தும்படி அறிவுறுத்தினார். மோடி தக்க சமயத்தில் செய்த உதவி காரணமாகவே தான் உயிர் பிழைத்ததாக அவர் முழுமையாக நம்புகிறார்.

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கும் மோடி

மார்ச் 30,2004ம் ஆண்டு அப்போதைய துணை பிரதம மந்திரி அத்வானி, காந்தி பிறந்த இடமான குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தனது யாத்திரையை தொடங்கினார். யாத்திரையின் 2வது நாளில் ஹிம்மத்நகரில் உள்ள சபர்காந்தாவில் கடைசி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் வெயில் அதிகமாக இருந்த நிலையில்,  நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். அத்வானி ஹிம்மத்நகர் வருவதற்கு முன்பே நான் அங்கு சென்றடைந்தேன். ஆனால், அத்வானி தனது நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பாகவே என் நிலை மோசமடைந்தது. அப்போது, நிகழ்ச்சியில் நான் இல்லாததால், இது குறித்து விசாரிப்பதற்காக மோடியின் உதவியாளர் ஓம் பிரகாஷ் என்னை தொலைபேசியில் அழைத்தார். எனது நிலை குறித்து அவரிடம் கூறினேன். அவர் உடனடியாக மோடியிடம் தெரிவித்தார். என் நிலை குறித்து கேட்டறிந்த மோடி, கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார்.

எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. சிலர் என்னை தோளில் தூக்கிக்கொண்டு போவது மட்டும் எனக்கு நினைவில் இருந்தது. கண் விழித்து பார்த்தபோது, அதிகாலை 3 மணி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். 10 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டேன் என அங்கிருந்த செவிலியர் கூறினார்.

2010ம் ஆண்டில், இந்த நிகழ்வு குறித்து நான் மறந்துவிட்டேன். அப்போது, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷ தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பிரஃபுல் படேல் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். குளிர்கால கூட்டத்தொடரின்போது பிரஃபுல் படேலை நான் சந்தித்தபோது, இதற்கு முன்பு உங்களை பார்த்ததில்லை என்று கூறினேன். அதற்கு அவர், 6 ஆண்டுகளுக்கு முன்பே உங்களை பார்த்துள்ளேன் என்று கூறினார். எனக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. பின்னர் அவரே, பழைய சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.

2004ம் ஆண்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எனது அறையில் மயக்கம் அடைந்து கிடந்திருந்தார். பிரஃபுல் படேல்தான் என்னை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார், அதிகாலை 2 மணிவரை மருத்துவமனையில் அவர் காத்திருந்தார். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர் அங்கிருந்து சென்றுள்ளார். பிரதமர் மோடியிடமும் என் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.  இவை குறித்து இதற்கு முன்பு நான் தெரிவித்ததே இல்லை. அவ்வாறு நான் செய்திருந்தால், மோடிக்கு ஆதரவாக என்ன தெரிவித்தாலும் பாவம் என்னும் பிரச்சாரமாக இது கருதப்பட்டிருக்கும். தற்போது மோடி பெரிய உயரத்துக்கு சென்றுவிட்டார். இந்த நிகழ்வுகள் எதுவும் அவரை பாதிக்காது. ஆனால், மோடி ஆக்ரோசமான அரசியல்வாதி மட்டுமல்ல துன்பத்தில் துவண்டு இருப்பவர்களுக்கு உதவும் கனிவான இதயம் கொண்டவர் என்பதை லட்சக்கணக்கான மக்கள் அரிய இவை உதவலாம்.

(தமிழில்: முருகேஷ்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: