சோனியா காந்தியிடம் அவமானம்; 18 மாத சிறை; பழிக்குப் பழி வாங்கிய ஜெகனின் வெற்றிப் பயணம்

ஜெகன்மோகன் ரெட்டி

அந்த யாத்திரையின் நோக்கம் குறித்து விளக்க முயற்சித்த நேரத்தில் ஆத்திரடைந்த சோனியா காந்தி, நாற்காலியில் இருந்து எழுந்து, விஜயலெட்சுமியின் பேச்சை நிறுத்தச் சொன்னார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2010-ம் ஆண்டின் மத்தியில் மறைந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயம்மா என்று அழைக்கப்படும் விஜயலெட்சுமி, அவரது மகள் ஷர்மிளா ரெட்டியுடன் ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர், நேரடியாக ஜன்பத்திலுள்ள அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குச் சென்றார். அவர்கள், பதற்றமாக இருந்தனர்.

சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்திக்கு ராஜசேகர ரெட்டி நெருக்கமானவர் என்பதால் விஜயலெட்சுமியும் அவரது மகளும் சோனியா காந்தியிடமிருந்து நல்லதொரு வரவேற்பை எதிர்பார்த்தனர். ஆங்கிலேயர் கால கட்டடமான சோனியா காந்தி இல்லத்துக்குள் அவர்கள் நுழைந்த அந்த நேரத்தில் அவர்களுடைய நம்பிக்கை தரைமட்டமானது. முதலில், அவர்கள் 10-15 நிமிடங்கள் காத்திருக்கவைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இறுக்கமான முகத்துடன் உணர்ச்சியற்று சோனியா காந்தி அவர்களை வரவேற்றார்.

சம்பிரதாயமான பேச்சுகளுக்குப் பிறகு, நேரத்தை வீணாக்காமல் சோனியா காந்தி விஷயத்துக்கு வந்தார். ஜெகன் மோகன் ரெட்டி மேற்கொண்டிருக்கும் ’ஒடர்பு’ யாத்திரையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று விஜயம்மாவிடம் வலியுறுத்தினார் சோனியா காந்தி.

சோனியா காந்தி


ஆந்திரப் பிரதேசத்தில் விமான விபத்தில் எதிர்பாரத விதமாக, மரணமடைந்த ராஜசேகர ரெட்டியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டி, அந்த யாத்திரையின் பாதிநிலையில் இருந்தநேரத்தில் அந்த யாத்திரை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தினார் சோனியா காந்தி.

சோனியா காந்தியின் செயலால் அதிர்ச்சியடைந்த விஜயலெட்சுமி, அந்த யாத்திரையின் நோக்கம் குறித்து விளக்க முயற்சித்த நேரத்தில் ஆத்திரடைந்த சோனியா காந்தி, நாற்காலியில் இருந்து எழுந்து, விஜயலெட்சுமியின் பேச்சை நிறுத்தச் சொன்னார்.

அதிர்ச்சியடைந்த மற்றும் அவமானப்படுத்தப்பட்ட விஜயலெட்சுமி மற்றும் அவரது மகள் ஷர்மிளா ரெட்டி இருவரும் சோனியா காந்தியின் இல்லத்திலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றனர். அவர்கள், பதிலடி கொடுப்பதற்கு உறுதி எடுத்தனர். தனது, அம்மாவும் சகோதரியும் அவமானப்படுத்தப்பட்ட செய்தி ஜெகன் கேட்டவுடன் அவர் கோபமடைந்தார்.

அவருடைய நண்பர்களிடம், உறவினர்களிடமும் காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து காங்கிரஸை அழிப்பதன் மூலம், நன்றியில்லாத ஆணவமிக்க காந்தி குடும்பத்துக்கு பதிலடி கொடுக்கப்போகிறேன் என்று ஆவேசமாக கூறினார்.

தனது தந்தையான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஜெகன்மோகன் ரெட்டி. குறைந்தபட்ச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சுற்றி இருந்த குழு, ஜெகன்மோகன் ரெட்டி வாய்ப்பு வழங்கவேண்டாம் என்று அறிவுரை செய்தனர்.

ஆனால், சோனியா காந்தி, அவரது குடும்பத்துக்கு நெருக்கமான மக்கள் செல்வாக்கு இல்லாத கே.ரோசய்யாவை முதல்வராக கொண்டுவந்தார். ஆனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ராஜசேகர ரெட்டியுடன் குடும்பத்துடன் இருந்தனர். இந்த வாய்ப்பை, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் பயன்படுத்திக் கொண்டார். தனி தெலங்கானா மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி தெலங்கானா பகுதிகளில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

ஜெகன் மோகன் ரெட்டி


வலிமையற்ற ரோசய்யாவின் தலைமையால் ஆந்திர அரசியலில் ஸ்திரமற்றத் தன்மை நிலவியது. இந்தப் போராட்டத்தால் அச்சம்கொண்ட காங்கிரஸ் அரசு, ஆந்திர மாநில மக்களிடமும் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் ஆலோசனை செய்யாமல் உடனடியாக ஆந்திரப் பிரதேசத்தை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்கு பதிலாக கிரண் குமார் ரெட்டியை முதல்வராக நியமித்தது காங்கிரஸ். 1947-ம் ஆண்டிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தில் வலுவாக இருந்த காங்கிரஸ், அழிவுப்பாதை அந்த இடத்தில்தான் தொடங்கியது.

காங்கிரஸிலிருந்து வெளிவந்த ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடப்பா எம்.பி பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன், அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றார். இது, காங்கிரஸுக்கு எச்சரிக்கை மணியை எழுப்பியது.

ஜெகன்மோகன் ஏற்கெனவே வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தவர். ஊடகங்களுக்கு நெருக்கமானவர். அவர், பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். சொத்துகுவிப்பு விவகாரத்தில் ஜெகன்மோகனும், அவரது நெருங்கமானவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஜெகன்மோகனின் உறவினர்கள், இதற்கு காரணம் சோனியா காந்திதான் இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

ஹைதராபாத்திலுள்ள சான்சாலகுடா சிறையில் ஜெகன் மோகன் 18 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். செப்டம்பர் 2013-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இது அவருக்கு கடுமையான காலகட்டம். அவர், சிறையில் இருந்த காலக்கட்டத்தில் அவருடைய அம்மா, சகோதரி மற்றும் மனைவி பாரதி ரெட்டி ஆகியோர் கட்சி மற்றும் தொழிலைப் பாதுகாத்தனர்.

சோனியா காந்திக்கு அஞ்சிய ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர், அவரது குடும்பத்தினரிடம் இடைவெளியை மேற்கொண்டனர்.

அந்தக் காலக்கட்டம் மிகவும் கடுமையான காலகட்டம் என்று ஜெகன் மோகன் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறையிலிருந்து ஜெகன்மோகன் வெளியில் வந்தபோது, ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலை பெரும் மாற்றமடைந்திருந்தனர். தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதுதான் அப்போதைய பிரச்னையாக இருந்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி இருந்த இடம் தெரியாமல் இருந்தது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆறு மாதத்தில் வர இருந்தது.

தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெகன் மிகக் கடுமையான போரட்டத்தை முன்னெடுத்தார். ஆனால், அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி கைகூடவில்லை. ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டிக்கு போட்டியாக இருந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். நம்பிக்கையையும் உறுதியையும் இழக்காத ஜெகன் மோகன் ரெட்டி கட்சி மீண்டும் கட்டமைத்தார். மறுபுறம், சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவை கையாண்டு வந்தார்.

மோடி, அமித்ஷாவுக்கு கீழ் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களின் போட்டிகள் உருவம் மாறின. நாடு முழுவதும் இருக்கும் சூழல்களை ஜெகன்மோகன் ரெட்டியின் பிரச்சாரம் யுக்திகளைக் கையாள்வதற்கு ஒருவர் வேண்டும் என்று கருதினார்.

அவர், கவனம் ஐ.பேக்கைச்(I-PAC)சேர்ந்த பிரசாந்த் கிஷோர் நோக்கிச் சென்றது. இந்த பிரசாந்த்தான், 2014-ம் ஆண்டு நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தையும், 2015-ம் ஆண்டு நிதிஷ் குமாரின் தேர்தல் பிரச்சாரத்தையும் கையாண்டனர். இரண்டு தேர்தல்களிலும் அவர்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றனர்.

டெல்லியிலுள்ள செய்தியாளர் நண்பரின் மூலம், பிரசாந்த் கிஷோரைத் தொடர்பு கொண்டார் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால், ஜெகன்மோகனுக்காக கிஷோர் வேலை செய்ய விருப்பம் காட்டவில்லை. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணிக்கான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட கிஷோருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதன்பின்னர், ஜெகனின் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு கிஷோர் ஒப்புக்கொண்டார். ஹைதராபாத்துக்கு வந்திறங்கிய கிஷோரின் ஐ-பேக் குழு ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான கட்டத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு ஆண்டுகளாக ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் பிரச்சாரத்தையும் யுக்தியையும் கையாண்டனர்.

அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தில் அவருக்கு ஆதரவை அதிகரிக்க ஜெகன்மோகன் ரெட்டி நடைப்பயணத்தை மேற்கொண்டார். ஆந்திரா முழுவதும் 13 மாவட்டங்களில் 341 நாள்களில் 3,648 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். இது அவருக்கு மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தித் தந்தது. இந்த பாதயாத்திரையின்போது, விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் அவரைக் கொல்வதற்கு முயற்சி நடந்தது. அதில், சிறிய காயத்துடன் அவர் தப்பினார்.

மக்களவைத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்று காரணம் கூறி பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியில் வந்தார் சந்திரபாபு நாயுடு. அதன்பிறகு, தெலங்கானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திதது தெலுங்கு தேசம்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் முதன்முறையாக, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திதது. சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பர்கள் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைக்க அறிவுரை கூறினர். அதனை, சந்திரபாபு நாயுடு ஏற்கவில்லை. ஆந்திர மக்கள் தனக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு தர முடிவு செய்துவிட்டன் என்று கூறி ஜெகன்மோகன் ரெட்டியும் தனித்து போட்டியிட்டார். வாக்காளர்கள் அவரை ஏமாற்றவில்லை. இந்த வெற்றி யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஜெகன்மோகன் ரெட்டி கூட, இத்தனை பெரிய வெற்றியை நினைத்துப் பார்க்கவில்லை.

மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்துக்கான பொறுப்பை எடுத்திருக்கிறார். பிரிவினையால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு தேவையானவற்றை ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்று அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது ஜெகன் மோகன் ரெட்டி முன்பு இருக்கும் மிகப் பெரிய சவால். அமராவதியை புதிய தலைநகரமாக அவர் முழுமையாக மாற்றவேண்டியுள்ளது. ஆந்திராவின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்பதை ஜெகன் உறுதியாக நம்புகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் அழிவுக்குப் பக்கத்திலிருந்து மீண்டெழுந்து வெற்றியை அடைந்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுத்து, ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, ஜெகனின் அரசியல் செல்வாக்கை சுருக்க முயற்சி செய்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் இந்திய அரசியலில் நிலைத்திருப்பதற்கு தடுமாறுகின்றனர். இருந்தபோதிலும், சோனியா காந்தி, ராகுல் காந்தியை மன்னிக்கத் தயாராக இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஜெகனுக்கு நெருக்கமானவர்கள் ஓய்.எஸ்.ஆர் காங்கிஸின் வெற்றியை இது புனித நீதி என்றார். சிலர், இது ஆந்திராவுக்கான சாபம் என்கிறார்கள்.

கிறிஸ்த்துவத்தைப் பின்பற்றும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு புனித நீதியின் மீது நம்பிக்கை இருக்கலாம், ஒருவேளை சாபத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

Also see:

Published by:Karthick S
First published: