• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • ரஜினி ரசிகர்கள் அரசியலில் இறங்க வழிவகுத்த ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி ரசிகர்கள் அரசியலில் இறங்க வழிவகுத்த ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி

ரஜினி

ரஜினி அரசியல் களத்தில் இறங்கவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்க உள்ளனர்.

  • Share this:
ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரின் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்குவதற்கு ரஜினி மக்கள் மன்றம் பச்சை கொடி காட்டியுள்ளது.

ரஜினி ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அரசியல் கட்சி தொடங்குவதாக கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அதிரடியாக அறிவித்து அரசியல் களத்தில் பரபப்பை ஏற்டுத்தினார் ரஜினி. பின்னர் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப் போவதில்லை என்று அதே மாதம் இறுதியில் அறிவித்தார். இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ரஜினி வீட்டிற்கு முன்பும் மற்றும், சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி ரஜினி அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் ரஜினி தமது நிலையை தெளிவாக தெரிவித்துவிட்டார் எனவே அவரை வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க... ரஜினி மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

இதனைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று பச்சை கொடி காட்டியுள்ளது. அதே சமயம் ரஜினி ரசிகர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எண்ணி இருந்த நிலையில், இலவு காத்த கிளியாகிப் போனது ரஜினி ரசிகர்களின் கனவு. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, இனி போராடியும் பயனில்லை என்பதையும் அறிந்தனர். எனவே, வேறு அரசியல் கட்சிகளில் இணையத் தொடங்கினர். இந்த நிலையில்தான் ரஜினி மக்கள் மன்றமே முன்வந்து ரசிகர்களுக்கு வழிகாட்டியுள்ளது.

 

மேலும் படிக்க... ரஜினி ரசிகர்கள் வேறு கட்சிகளில் இணைந்துகொள்ளலாம் - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ரஜினி ரசிகராகவும், அதே சமயம் அரசியல் பணிகளிலும் ஈடுபட இந்த அறிப்பு வழிவகுத்தாலும், ரசிகர்கள் நேரடியாக ரஜினியின் தலைமையில் அரசியல் பணியாற்ற முடியவில்லையே என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வெளியான ரஜினி மக்கள் மன்றத்தி இந்த அறிவிப்பு, அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

அதே சமயம், ரஜினி அரசியல் களத்தில் இறங்கவில்லை என்றாலும்,  ரஜினி ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்க உள்ளனர் என்பது  உறுதியாகி இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: