பிரதமர் மோடி தனக்கு வாக்களிக்காதவர்களின் பேச்சையும் கேட்க வேண்டும்: தன் புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி அறிவுரை

மோடி- பிரணாப். | கோப்புப் படம்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் அமர்வது என்பது அந்த நாடாளுமன்றத்துக்கே ஒரு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகும். நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக தங்கள் இருப்பின் மூலம் தாக்கம் செலுத்தினர்.

 • Share this:
  குடியரசுத் தலைவராக இருந்த காலத்தின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய  The Presidential Years 2012-2017 என்ற தனது நூலில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கும் விதமாக,  மறுக்கும் குரல்களையும் தனக்கு வாக்காளிக்காதவர்களின் பேச்சுக்களையும் மோடி கேட்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிரணாப் முகர்ஜி தனது 84வது வயதில் காலமானார். பிரசிடென்ஷியல் இயர்ஸ் என்ற தலைப்பில் அவர் தன் குடியரசுத் தலைவர் கால அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

  அந்தப் புத்தகத்தில் மோடி அரசை விமர்சிக்கும் விதமாக அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தன் முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்கான பொறுப்பில் இருந்து  தவறி விட்டது. இது வருந்தத் தக்கது. எதிர்க்கட்சிகளும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதில் சமபங்கு வகித்தன.

  பிரதமர் நாடாளுமன்றத்தில் அமர்வது என்பது அந்த நாடாளுமன்றத்துக்கே ஒரு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகும். நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக தங்கள் இருப்பின் மூலம் தாக்கம் செலுத்தினர்.

  2வது ஐந்தாண்டு கால ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தனக்கு முன்னோடிகளாக இருந்தவர்களிடமிருந்து அகத்தூண்டுதல் பெற வேண்டும். தெளிவான வெளிப்படையான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். பிரதமர் மோடி மறுக்கும் குரல்களை, எதிர்ப்புக் குரல்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் அதிகம் பேச வேண்டும்.

  நாடாளுமன்ற அவையை தன் பார்வைகளைக் கருத்துக்களைப் பேசி எதிர்க்கட்சிகளையும் மக்களையும் திருப்தி படுத்த வேண்டும்.

  ஆட்சி செய்வதற்கான தார்மீக அதிகாரம் பிரதமரிடம் உள்ளது. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த நிலை என்னவென்பது பிரதமரின் செயல்பாடுகளை பிரதிபலிப்பது.

  மன்மோகன் சிங் ஆட்சி கூட்டணியைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தியதால் நிர்வாகம் பாதித்தது. மாறாக நரேந்திர மோடி எதேச்சதிகார பாணியில் முதல் 5 ஆண்டுகளில் ஆட்சி நடத்தி அரசு, நீதித்துறை மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையே கசப்பான சூழ்நிலைகள் உருவாகக் காரணமானார்.

  மக்களின் வாக்களிக்கும் தெரிவு யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அனைத்து மக்களுக்காகவும்தான் செயல்பட வேண்டும்.

  மன்மோகன் சிங் ஆட்சி செய்த போது எதிர்க்கட்சித் தலைவரிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். தேஜகூ தலைவர்களையும் அவர் ஆலோசித்தார். பிரதமர் என்பவர் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழும்போது மக்களவையில் இருக்க வேண்டும்.” என்று தன் நூலில் தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: