Home /News /special-articles /

OPINION | விவசாயிகள் போராட்டம் தூண்டப்பட்டு நடைபெறுகிறதா?

OPINION | விவசாயிகள் போராட்டம் தூண்டப்பட்டு நடைபெறுகிறதா?

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எந்த நோக்கம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது என்பது முக்கியமாகிறது.

  கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவில் நம்பமுடியாத காட்சியாக அமைந்துள்ள போராட்டத்தைப் பார்த்துவருகிறோம். இந்த கடும் குளிரிலும் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்துவருகிறது. அதனை வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய பொருள்களின் மீது ஆதிக்கம் செலுத்திவரும் இடைத்தரகர்கள் முறை தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.

  அதுதான் ஆர்வமாக உள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயி அல்லது வேறு யாரேனும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை இடைத்தரகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள்? கூடுதலாக இந்தச் சட்டங்கள் விவசாயிகள் அவர்களது விளைபொருள்களை விற்பதற்கு ஏற்கெனவே இருக்கும் எந்த வாய்ப்புகளை பறிக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  முதலாவதாக, இந்த சீர்திருத்த சட்டவடிவை எல்லாருமே வரவேற்றார்கள் என்பது நமக்குத் தெரியும். 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், இதனை ஒத்த வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. பஞ்சாப்பில், ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதியும் அதனை ஒத்து இருந்தது. விவசாயிகள் அவர்களது விளைபொருள்களை இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கு அனுமதி வேண்டும் என்று இந்திய விவசாயிகள் சங்கம் எப்போது வலியுறுத்திவந்தது. இப்படி இருக்க இந்தப் போராட்டங்கள் எங்கிருந்து வந்தன?

  இந்தக் கேள்வியை அதன் தலைப்பகுதியை நோக்கித் திருப்புவோம். அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள் இந்தச் சீர்திருத்தங்களை நீண்ட காலமாக ஒப்புக்கொண்டிருந்தால் முந்தைய அரசுகள் ஏன் இதனை நிறைவேற்றவில்லை? ஏனென்றால் இங்கே சக்திவாய்ந்த அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அதுவே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு எதிர்ப்பு உருவாக்குவதற்கு போதுமான சக்தியாக இருக்கிறது. மண்டிகள் மற்றும் இடைத்தரகர்கள் செயல்பாட்டு முறை ஆழமாக இயங்குகிறது. தசாப்தங்களாக அது பின்னோக்கி செல்கிறது. இந்தியச் சூழலில், அந்த அமைப்புகள் உள்ளூர் அதிகாரவர்க்கங்களுடன் பிணைந்து இயங்குகின்றன. இதில், ஏதேனும் ஒரு அமைப்பு இழுக்கப்படும்போது அது அரசியல் கட்சிகளின் அமைப்புகளை மிரட்டுகிறது.

  இது நீண்ட காலமாக இந்தியாவில் இதுபோன்று நடைபெறுகிறது. எல்லா உள்நாட்டு விவகாரங்களும் சிறிய விவகாரங்களோ அல்லது பெரிய விவகாரங்களோ சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியா ஒரு தேசம் தழுவிய நெருக்கடியில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். நீட், ஜே.இ.இ தேர்வு எல்லாருக்கும் நியாபகம் இருக்கும். தற்போதைய விவசாயிகள் போராட்டமும் அதே காலடி தடத்தில்தான் நடைபெறுகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட இந்தப் போராட்டத்துக்கு ஆள்களைச் சேர்க்க தடுமாறுகின்றனர். இருப்பினும், 36 பிரிட்டன் எம்.பிகளின் ஆதரவைப் பெற்றுள்ளனர். கனடா பிரதமரின் ஆதரவைக் கூட பெற்றுள்ளனர்.

  இந்தப் போராட்டத்தை யார் தலைமையெடுத்து முன்னெடுக்கிறார்? இதனால் யார் பயனடைகிறார்கள் என்பதை நாம் கேட்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் சுத்தியல் மற்றும் அரிவாள் சின்னம் கொண்ட பேனர்கள் அதிக அளவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் பாதிபேர் வேளாண்துறையைச் சார்ந்து இருக்கின்றனர். ஒருவேளை அவர்களுக்கு அரசியல் அடையாளம் தேவைப்பட்டால் அவர்கள் உண்மையில் கம்யூனிஸ்ட்களாக மாறலாம். நீண்ட காலத்துக்கு முன்பே கம்யூனிஸ்ட் அவர்களுக்கான ஆதரவை இழந்திருக்கவேண்டாம்.

  போராடுபவர்களின் எண்ணிக்கை என்பது விவாதம் அல்ல. இந்தப் போராட்டத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை நீங்கள் குறிப்பிடும் தொகுதியின் அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது. இந்தியாவின் பாதி மக்கள் தொகை என்பது 60 கோடியை நெருங்கும். ஒருவேளை 60 கோடி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பதை உணர்ந்தால் இந்த நாடு உடனடியாக மிகப்பெரிய குழப்பத்தை எதிர்கொண்டிருக்கும். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தற்போது ஏழு மாதங்கள் ஆகின்றன. ஆனால், பத்தாயிரம் போராட்டக்காரர்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும், அவர்கள் அனைவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆனால், உலகம் முழுவதுமுள்ள செய்தித்தாள்களில் இடம்பெறுவதற்கு இந்த அளவிலான கூட்டம் போதுமானது. உண்மையில் அதுதான் குறிக்கோளாகத் தெரிகிறது.

  இதன்மூலம் பலனடைபவர்கள் யார்? சீனாவை விட இந்தியாவில் நாம் சில சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் ஜனநாயக நாடு. அதன் காரணமாக, விட உலகம் முழுவதுமுள்ளவர்கள் சீன அரசின் நோக்கத்தைவிட நம்மை நம்புகின்றனர். இந்தியாவில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இடமில்லை என்று உலகம் நம்பவேண்டும் என்று சீனா விரும்புகிறது. அவர்கள் நாட்டைப் போன்றே நம்முடைய நாடும் சர்வாதிகாரத் தன்மைக் கொண்டது என்று நிரூபிக்க விரும்புகிறது. இந்தியாவுக்கு சீனாவுக்கு இடையில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்று மக்கள் கருதினால் நாம் அந்த வாய்ப்பை முழுமையாக இழந்துவிடுவோம்.

  வெளிநாட்டுச் சதி இருக்கிறது என்ற பெயர் அவப்பெயரை உருவாக்கும். கடந்த காலங்களில், அரசு அவர்களுடைய தவறுகளை மறைப்பதற்கு வெளிநாட்டின் சதி இருப்பதாக கூறியுள்ளது. அதனால், அவர்கள் அடிக்கடி வெளிநாட்டின் சதி இருப்பது என்று கூறுவது ஓநாய் அழுவது போன்று இருப்பது கூறுகிறார்கள்.

  (கட்டுரையாளர் அபிஷேக் பானர்ஜி, கணிதவியலாளர். கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள்)
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published:

  Tags: Farm act, Farmers Protest

  அடுத்த செய்தி