குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

மாதிரிப் படம்

குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றி பெற்றதை கூர்ந்து கவனிக்கவேண்டிய அவசியம் உள்ளது.

  • Share this:
1985-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்ததைக் கருத்திக் கொண்டு 2015-ம் ஆண்டு காங்கிரஸ் நேர்மறையான எண்ணத்தில் இருந்தது. அதற்கு ஒருவருடத்துக்கு முன்னர் 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, குஜராத் மாநில அரசியலிருந்து விலகினார். அதனால், குஜராத் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்ற படேல் சமூக மக்களின் போராட்டம் பா.ஜ.கவின் முக்கிய வாக்கு வங்கியாக இருந்த படேல் சமூக வாக்குகளை இழக்க நேரிட்டது. அதன்அடிப்படையில், குஜராத்தின் கிராமப்புற பகுதிகளில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. நகர்புறங்களில் பா.ஜ.கவின் செல்வாக்கைக் குறைத்தது.

1980-ம் ஆண்டு பா.ஜ.க முதன்முதலாக வெற்றிபெற்ற ராஜ்கோட் நகரில் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமபலத்தை எட்டின. தாலுகா பஞ்சாயத்தில் பா.ஜ.க 67 சீட்டுகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தநிலையில், காங்கிரஸ் 134 சீட்டுகளைக் கைப்பற்றியது. மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க வெறும் 6 மாவட்டங்களை மட்டும் வென்றது.

அடுத்து 2017-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், நிறைய தொகுதிகளில் கிராமப் புறங்களில் காங்கிரஸ் வென்றது. 2015-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்றவெற்றி 2017 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது.

மீண்டும் வந்துவிடுவோம் என்ற காங்கிரஸின் நீண்ட கால நம்பிக்கையை 2021-ம் ஆண்டு நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் சிதைத்துவிட்டது. நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் பெரும்பாலும் எதிர்பார்த்த அளவிலே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை வித்தியாசம், பா.ஜ.க எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.

ஜாம்நகர், வதோதரா, பாவ்நகர், அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் பா.ஜ.க வென்ற வார்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மொத்த வார்டுகளின் எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. சூரத்தில் தோல்வியடைந்த வார்டுகளில் வென்று மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் வென்ற வார்டுகளின் ஒப்பிடும்போது பா.ஜ.க 10 மடங்கு அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கவனிக்கக் கூடியது. காங்கிரஸ் அனைத்து மாவட்ட பஞ்சாயத்துகளிலும் தோல்வியடைந்துள்ளது. தாலுகா பஞ்சாயத்துகளிலும் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பின் மூலம் குஜராத் மாநில மக்கள் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். இந்தத் தீர்ப்பின் மூலம், குஜராத் மக்கள் நரேந்திர மோடியுடன் உறுதியாக நிற்கின்றனர் என்பதை முதல் மற்றும் மொத்தச் செய்தியாக தெரிவிக்கின்றனர்.

பிரதமருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல, பிரதமர் மோடிக்கு எதிரான எந்த பிரச்சாரத்துக்கும் மக்கள் தண்டனை கொடுக்கின்றனர். மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ச்சியாக பேசிவந்தது குஜராத்தில் வேலை செய்யவில்லை.

குஜராத் மக்களின் பார்வையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கபதற்கான தகுதியுடன் இல்லை என்பது மற்றொரு செய்தியாக இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மக்களுக்கு பணி செய்யக் கூடிய வாய்ப்பு வரும்போது காங்கிரஸ் கட்சி மக்களால் பாராட்டப்படுவதில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அவர்களது தொகுதியில் பார்க்க முடியவில்லை. 2015 மற்றும் 2017 தேர்தல்களில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்ட அம்ரேலி தொகுதியில் எந்த நல்ல மாற்றங்களும் ஏற்படவில்லை. இன்னும் சாலை வசதிகள் இன்றிதான் உள்ளது. அம்ரேலி தொகுதி, அதிகமாக கிராமப் புற பகுதிகளைக் கொண்ட தொகுதி.

படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதி. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, பா.ஜ.க எழுந்துகொள்வதற்கு போதுமானதாக இருந்தது. மேலும், தன்னுடைய செயல்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்துகொண்டது. நகர்புறத் தலைவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று தங்களுடைய வளர்ச்சித் திட்டத்தை மக்களிடம் கூறும்போது, கிராமப்புற தலைவர்கள் களஅளவில் தீவிரமாக பணி செய்தனர். அசாமில் குஜராத் வர்த்தகர்கள் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்தது குஜராத்தில் காங்கிரஸ் மீது கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குஜராத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு பெரும் மரியாதை இருக்கிறது.

குஜராத்தின் கிராமப் புறப் பகுதிகளில் ஏராளமான சிறிய விவசாயிகள் இருக்கும்போதிலும், குஜராத் மக்கள் வேளாண் சட்டங்களை எப்படி பார்க்கின்றனர் என்பதையும் இந்தத் தேர்தல் வெற்றி உணர்த்தியுள்ளது. கூட்டுறவுத்துறையை முதலில் அரவணைத்துக்கொண்ட மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்று. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது வறட்சி பாதிப்பு வாய்ப்புகள் கொண்ட மாவட்டங்களான குட்ச், பன்ஸ்கந்தா ஆகிய மாவட்டங்கள் விவசாயத்தில் சிறப்பாக பங்காற்றின.

அப்போதைய முதல்வர் மோடியின் முன்னெடுப்பால் குஜராத் மாநில விவசாயிகள் ஒப்பந்த விவசாயத்தில் வெற்றிகரமாக இருந்தனர். சந்தைகளில் விளைபொருள்களுக்கு சிறந்த விலையைப் பெற்றனர். நீர்பாசனத்துக்கு எளிமையான வழிகளைப் பெற்றனர். தீவிர வேளாண் எதிர்ப்புச் சட்டப் பிரச்சாரம் குஜராத்தில் எடுபடவில்லை. டெல்லி அரசியலுக்கு மோடி சென்றுவிட்டப் பிறகும், குஜராத்தின் அரசியல் களத்தில் பா.ஜ.கவால் ஆதிக்கம் செலுத்தமுடிகிறதென்றால் அவருடைய ஆட்சிக் காலத்தில் அமைப்பு ரீதியாக சாதித்ததற்கான அடையாளங்கள் அவை.

காமராஜருக்குப் பிறகு தமிழ்நாடு, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு ஆந்திரா, விலாஸ்ராவ் தேஷ்முக்குக்குப் பிறகு மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி அழிந்தது என்பதை நாம் பார்த்துள்ளோம். எதிர்மறையாக குஜராத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி உயர்கிறது. அது, மோடி அமைப்பை ரீதியாக மேதை என்பதற்கான சாட்சியம். வழக்கமான அரசியல் ஞானம் என்பது முக்கிய நியமனங்கள் அனைத்தும் சாதி ரீதியாக வழங்கப்படுவது.

சி.ஆர்.படிலை மாநில பா.ஜ.க தலைவராகக் கொண்டுவந்ததன் மூலம் மோடி அதனை மாற்றியமைத்தார். சி.ஆர்.படில் எந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும் இல்லை. இருப்பினும், அவர் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த ஆற்றல் அதிகமானது. இதுதான் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு உதவியது. நம்முடைய அரசியல் வகுப்புகளில் முக்கிய கற்றுக்கொள்ள வேண்டியவை என்று குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி.

கட்டுரையாளர்: ஜப்பான் கே.பதக் (கட்டுரையாளர் மூத்த செய்தியாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவர். கட்டுரையின் கருத்துகள் அவருடைய கருத்துகள்)



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: