வறுமையிலும் பழமை மீது பாசம் கொண்ட தாத்தா!

பணம் மற்றும் நாணயம் சேர்பதில் வல்லவர் என நினைத்தால் அஞ்சல் தலைகள் சேர்பதிலும் இந்த முதியவர் கில்லாடியாக உள்ளார்.

வறுமையிலும் பழமை மீது பாசம் கொண்ட தாத்தா!
மாணிக்கம்
  • News18
  • Last Updated: February 19, 2019, 3:16 PM IST
  • Share this:
மதுரையைச் சேர்ந்த 60 வயதான மாணிக்கவேல் உபயோகத்தில் இருந்து வந்த பழைய நோட்டுக்கள், நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகள் என 40 லட்சத்திற்கும் மேல் சேர்த்து வைத்துள்ளார்.  

மதுரையில் உள்ள முதியவர் மாணிக்கத்தை நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் தொடர்ப்புக்கொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது, “எனக்கு கிட்டத்தட்ட 40 வருடங்களாக பழைய ரூபாய் மற்றும் நாணயங்களை சேர்பதில் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் என்று சொல்வதை விட வெறி என்றே சொல்லலாம். பிரிட்டிஸ்காரர்கள் அடித்து நாம் உபயோகித்த பணத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்திய அனைத்து நாணயங்களும் என்னிடம் உள்ளது.”எனக் கூறினார்.

பழமையான 100 ரூபாய் நோட்டுமேலும் இவர் ஒரு பிரோ முழுவதுமே பழைய நாணயங்கள் மற்றும் பழைய பணத்தை சேர்த்து வைத்துள்ளதை பற்றி கூறினார்.

மேலும் நமது நாடு சுதந்திரம் பெற்றதலிருந்து இதுவரை வெளியிட்ட அனைத்து அஞ்சல் தலைகளையும் இவர் வைத்துள்ளார்.  இவைகளின் தற்போதைய மதிப்பு 15 லட்சத்திற்கு மேல் என்று மாணிக்கம் கூறுகிறார்.

ஸ்வாரஸ்யமான பணத் தாள்கள்:வெள்ளியில் ஆன பல தலைவர்களின் உருவம் பொறித்த 150 ரூபாய் நாணயங்களும்  1000 ரூபாய் நோட்டுகளும் வைத்துள்ளார்.  1835-ம் ஆண்டிலிருந்து கிழக்கிந்தியா வெளியிட்ட நாணயங்களும் இவரிடம் உள்ளது.

அத்துடன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பிலான ஓட்டை நாணயங்கள், பித்தளை காசுகள் என அனைத்தும் இவரிடம் உள்ளது. மேலும் பழைய மன்னர்கள் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களையும் வைத்துள்ளார். இந்த அனைத்து நோட்டுகளையும் தற்போதைய தலைமுறை பார்த்திருக்க  வாய்ப்பு இல்லை என்றார்.

பழமையான வெளிநாட்டு நோட்டுகள்


வெளிநாட்டு நாணயங்கள்

பழமையான வெளிநாட்டு நோட்டுகள்


நமது நாட்டின் பழைமைகளை காப்பற்றி வைத்திருக்கும் மாணிக்கம் வெளிநாட்டினையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டில் புழக்கதிலிருந்த பழைய நாணயம் மற்றும் நோட்டுக்களையும் வைத்துள்ளார். 5-ம் ஜார்ஜ் மற்றும் 7-ம் ஜார்ஜ் ஆகியோர் வெளியிட்ட விலை மதிப்புள்ள நாணயங்களும் இவரிடம் உள்ளது.

பழமையான வெளிநாட்டு நோட்டுகள்


மேலும் இங்கிலாந்து ராணி உருவம் பொறித்த பழமை வாய்ந்த வெள்ளி நாணயத்தையும் இவர் வைத்துள்ளார். சுமார் 40 லட்சத்திற்கு மதிப்புள்ள பழைய பணம் மற்றும் நாணயங்கள் வைத்திருந்தாலும், இவர் ஏழ்மை நிலையில்தான் உள்ளார்.

ஏழ்மையான மாணிக்கம்

தினந்தோறும் மதுரை கிழமாரட் வீதியில் வெங்காய விற்பனை செய்து வருகிறார். இவரை சந்தித்து இந்த ரூபாய் மற்றும் நாணயங்களை விலைக்கு கேட்கிற போதும் கூட இவர் சொல்கிற வார்த்தை அது நமது பழமை விற்பனைக்கு அல்ல. எனது தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும்தான் என்றும் அவை பார்வைக்கே தவிர விற்பனைக்கு அல்ல என்றும் கூறுகிறார்.

பழைய 10 ரூபாய் நோட்டுகள்


மேலும் மாணிக்கம் “என் வறுமை எனக்கு சிறிது என் பழைமையே எனக்கு பெரிது” என்று கலங்கிய கண்களோடு கூறுகிறார்.

மாணிக்கத்தின் அடுத்த முயற்சி

இனி மாணிக்கம் தனது அடுத்த முயற்சியாக பள்ளி கூட குழந்தைகளுக்கு இந்த நாணயங்களை காட்டி வராலாற்றை எடுத்துரைத்து, அவர்களின் செவிகளுக்கு விருந்து படைக்க போவதாகா கூறுகிறார்.

Also see... அதிமுக - பாமக கூட்டணி எப்படி உண்டானது.. 
First published: February 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்