Home /News /special-articles /

10 ரூபா காய்ன் ! செங்கல்பட்டு தாண்டினால் செல்லா காசு..

10 ரூபா காய்ன் ! செங்கல்பட்டு தாண்டினால் செல்லா காசு..

வாசகர் களம்

வாசகர் களம்

வாசகர் பதிவு: நாட்டுல எல்லா பக்கமும் இந்த 10ரூவா பிரச்னை எதோ ஒரு ரூபத்துல சுத்திக்கிட்டு தான் இருக்கு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    (செல்வகுமார், கோவை)

    இந்த 10 ரூபா காச வெச்சுக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே.. எனக்கு சொந்த ஊரு கோயம்புத்தூருங்க.. வேலை விஷயமா அடிக்கடி சென்னைக்கு வந்துபோவேன். நம்மூர்ல பத்து ரூபா காச காட்டுனா எதோ கள்ளநோட்டு நீட்டுறதா நம்மல அப்படி ஒரு பார்வை பார்க்குறாங்க. சென்னையில்தான் இந்த 10 ரூபா காசு செல்லுது. நானும் சென்னைக்கு முதல்ல வரும்போது எல்லாம் டீக்கடையில், பஸ்ல கண்டெக்டர் சில்லறையா 10 ரூபா காசு கொடுக்கும் போது நானும் வாங்குனது இல்ல. எனக்கு காசு வாங்குறதுக்கு ஒன்னும் தயக்கமில்லை. ஆனா அந்த காசு செங்கல்பட்டு தாண்டுனா செல்லுறது இல்லை. அதான் பயமே.

    அப்படியே கையில் இந்த 10 ரூபா காசு கிடைச்சாலும் சென்னையில் அதை செலவழிச்சுட்டு தான் ஊரு பக்கம் போறது. 2 வாரம் முன்னாடி மச்சான் தாரு வீட்டுக் கல்யாணத்துக்கான திருச்சிக்கு போயிட்டு ஊருக்கு வந்தேன். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து காந்திபுரம் போற பஸ்ல ஏறுனேன். திங்கள்கிழமை காலையில நல்ல கூட்டம் பஸ்ல. காலேஜ் படிக்கிற பசங்கதான் பஸ்ல நிறைய பேர் இருந்தாங்க. எல்லாம் ஊருக்கு போயிட்டு வந்திருப்பாங்க போல.

    பஸ்ல ஒரு பையன் 20ரூவா டிக்கெட்டுக்கு 500 நீட்டுனாரு. காலையில முதல் நடை 500 ரூவா நீட்டுனா நான் எங்க சில்லறைக்கு போறதுன்னு கண்டெக்டர் சத்தம் போட்டார். அந்த பையன் ஜோப்புல தொலாவி 10ரூவா நோட்டு ஒன்னும் காசு ஒன்னும் 20 ரூவா நீட்டுனாரு. ரூவா நோட்டு வாங்கிட்டு வேற காசு இருக்கான்னு தேடிப்பாருப்பா கண்டெக்டர் மறுபடியும் சொன்னார். அதான் 20ரூவா இருக்கே அப்புறம் என்ன. பையன் துடுக்கா பேசுனாரு.. 10 ரூவா காசு யாரு வாங்குறான்னு திரும்ப கண்டெக்டர் கேட்க. பஸ்ல தாங்க கொடுத்தாங்க நான் வாங்கிட்டு வரலையா 500 ரூபாய்க்கு சில்லறை இல்லைங்கிறீங்க. 10 ரூவா காசும் வாங்க மாட்டேங்கிறீங்க அந்தப்பையன் படிக்கட்டுல இருந்து எகிற..

    Read More : 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை தண்டனை! இந்திய தண்டனைச் சட்டம் சொல்வது என்ன?

    காலையிலே ராவடி பண்ணாதீங்க... நான் கொடுத்தா இங்க யாரும் வாங்குறது இல்லை. முன்னால ஆவது டெப்போல, பேங்க்-ல கொடுத்து மாத்துனோம். இப்ப டெப்போல வாங்குறது இல்லை. நான் என்ன மூட்டை கட்டி வீட்டுக்கா கொண்டு போறதுன்னு பேசிக்கிட்டே டிக்கெட் கொடுத்துட்டு போனாரு.. என்கிட்ட இதான் நா இருக்குன்னு அந்தப்பையனும் சொல்லிட்டு நின்னாரு.. காந்திரபுரத்தில் சில்லறை வந்தா தர்றேன் இல்லை இறங்கும்போது பாத்துக்கலாம்ன்னு அவரு டிக்கெட் நீட்டிட்டு போனாரு.. எல்லா பக்கமும் இந்த 10ரூவா பிரச்னை எதோ ஒரு ரூபத்துல சுத்திக்கிட்டு தான் இருக்கு.

    (இது வாசகர் பதிவு. இது போன்ற உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு அனுப்பலாம். கட்டுரைகளையும்  கூட அனுப்பி வைக்கலாம். உங்கள் படைப்பை, பதிவை இந்த லிங்கை கிளிக் செய்து அனுப்பவும். )

    ஆசிரியர் குழுவால் பரிசீலித்து தகுந்த கட்டுரைகள், படைப்புகள் நியூஸ்18 தளத்தில் பதிவாகும். 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Ten rupees coin, Vasagar Kalam

    அடுத்த செய்தி