• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • National Tourism Day 2021 : இன்று தேசிய சுற்றுலா தினம் : இந்திய பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் துறையின் வரலாறு..

National Tourism Day 2021 : இன்று தேசிய சுற்றுலா தினம் : இந்திய பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் துறையின் வரலாறு..

சுற்றுலா

சுற்றுலா

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்கு முந்தைய நாளான ஜனவரி 25ம் தேதி நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

  • Share this:
 ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25ம் தேதி தேசிய சுற்றுலா தினமாக (National Tourism Day) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் பன்முக கலாச்சாரத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இதை ஏன் ‘சுற்றுலா’ (Tourism) தினம் என்று அழைக்கிறார்கள்.

ஏனென்றால், பயணம் என்பது வெறுமனே ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவினரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதாகும். இதற்கிடையில் உள்ள சுற்றுலா என்பது ஒரு பெரிய துறையாகும், இது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் குடிமக்களின் பயணத்திற்கு காரணமாக அமைகிறது. பிற நாடுகளிலிருந்து நம் சொந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வழிநடத்துவது போன்றவை அடங்கியுள்ளன. இது ஒரு பூக்கும் தொழில் மற்றும் வல்லுநர்கள் சொல்வது போல் வளர்ச்சியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள துறை ஆகும்.

தேசிய சுற்றுலா தின வரலாறு (History)

இந்த தினம் எந்த ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும், 1948 ஆம் ஆண்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா போக்குவரத்துக் குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் பிராந்திய அலுவலகங்கள் டெல்லி மற்றும் மும்பையில் நிறுவப்பட்டன.



மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951ல், கொல்கத்தா மற்றும் சென்னையிலும் அதிக அலுவலகங்கள் சேர்க்கப்பட்டன. சுற்றுலா தொடர்பான ஒரு தனிப்பட்ட துறை 1958 ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. இதற்கு துணை ஜெனரல் தலைமை தாங்கினார்.

தேசிய சுற்றுலா தினம் 2021: முக்கியத்துவம் (Significance)

உலகெங்கிலும் உள்ள சமூகத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாவை ஒரு அத்தியாவசிய துறையாக அங்கீகரிப்பதற்காக மத்திய அரசு இந்த நாளை நிறுவியது.

ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பல்வேறு கலாச்சாரங்களுடன் ஒரு உன்னதமான வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் முன்னிலைப்படுத்த சுற்றுலா தான் சிறந்த வழி. இதன் மூலம், சிறப்புமிக்க இடங்கள் வகிக்கும் பங்கைப் பற்றி நாட்டில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்த முடியும்.



நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் சுற்றுலாத்துறை: (Contribution to growth)

இந்தியா ஒரு மாறுபட்ட புவியியல், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் திருவிழாக்கள் கொண்ட நாடாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இது உள்ளூர் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நேரடியாக பங்களிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசிய சுற்றுலா தின தீம்: (Theme)

இந்த ஆண்டு, தேசிய சுற்றுலா தினத்தின் தீம் 'தேகோ அப்னா தேஷ்' அதாவது நம் தேசத்தை காணுங்கள் என்பதாகும். கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு போடப்பட்டதால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே இந்த வருடம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 22 வரை, சுற்றுலா அமைச்சகம் இந்த தீம் தொடர்பான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதனுடன், அவர்கள் நம் நாட்டின் மாறுபட்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளனர்.



உலக சுற்றுலா தினம் (World Tourism Day)

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அங்கீகரிக்கப்பட்ட உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தீம் மற்றும் அணுகுமுறை வேறுபட்டு காணப்படும்.

சுற்றுலா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்: (Interesting Facts about Tourism)

* சுற்றுலாத்துறை 7.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார பங்களிப்புடன் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழிலாகும்.
* உலகில் 10 வேலைகளில் 1 சுற்றுலாவை ஆதரிக்கிறது. இது உலக வேலைவாய்ப்புகளில் 99% ஆகும்.
* உலகின் சிறந்த சுற்றுலா தலங்களை கொண்ட நாடுகள் பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், சீனா மற்றும் இத்தாலி ஆகும்.


* உலகின் எல்லா சுற்றுலா இடங்களை பொறுத்தவரை, சுற்றுலா பயணிகள் துபாயில் அதிகபட்ச பணத்தை செலவிடுகிறார்கள்.
* சுற்றுலாவை பொறுத்தவரை ஜப்பானில் உள்ள ஒசாகா எனும் இடம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இடமாகும்.
* தொற்றுநோய்களின் போது இந்த துறை குறைந்த அளவை எட்டியதால் 2021 ஆம் ஆண்டில் சுற்றுலாவின் நிலை மாற உள்ளது. இருப்பினும், உலகளவில் அதிக தாக்கத்துடன் இது மீண்டும் வெளிவரும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: