தற்கொலையை செய்தியாக்குவதில் ஊடகங்களின் பொறுப்புகள் என்ன? ஆய்வறிஞர்கள் வழிகாட்டுதல்கள்

தற்கொலையை செய்தியாக்குவதில் ஊடகங்களின் பொறுப்புகள் என்ன? ஆய்வறிஞர்கள் வழிகாட்டுதல்கள்
மாதிரிப் படம்
  • Share this:
மருத்துவர் ஃபாரக் கித்வாய் எழுதிய ’தற்கொலை செயல்பாடு- ஆபத்தில் உள்ளவர்களின் மதிப்பீடு’(Suicidal Behaviour – Assessment of People at Risk) என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் தற்கொலை குறித்து ஊடகங்களில் செய்தியாவது குறித்து எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருக்கும் சில அறிவுரைகள் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான தற்போது செய்தியாக்கலில் தொடர்புபடுத்த முடிகிறது.

செய்தித்தாள்கள், படங்கள், தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகும் தற்கொலை குறித்த செய்திகளைப் பார்த்து அதுபோன்று தற்கொலைகள் நடக்கும் வாய்ப்பு இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தற்கொலை மரணங்களை ஊடகங்கள் நாடகத்தன்மையுடன் வசிகரிக்கும் வகையில் செய்தியாக அளிப்பதன் மூலம் தற்கொலைகள் அதிகமாகியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளது.

ஒருவருடைய வாழ்க்கையை மிகவும் துயரகரமாக முடித்துகொள்ளும் வழியாக தற்கொலை கருதப்படுகிறது. தற்கொலை என்பது நாகரீக சமூகத்துக்கு சவால் மிகுந்த ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 8,50,000 தற்கொலை மரணங்கள் நடைபெறுகின்றன. 1,50,00,000 கோடி தற்கொலை முயற்சி நடைபெறுகின்றது. தற்கொலை செயல்பாடு என்பது உலகளவிலான முக்கிய மக்கள் சுகாதார பிரச்னை என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.


தற்கொலை எண்ணம் பெரும்பாலும் இளைஞர்களை எளிதில் பாதிக்கிறது. உலகளவில் 15-35 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்களில் மூன்று முக்கிய காரணங்களாக தற்கொலையும் உள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு தற்கொலை என்பது தெளிவற்ற ஒன்றாகத்தான் இருக்கிறது என்று சமூக அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாங்கள் மரணிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை. பாதிக்கப்படக்கூடிய ஒரு நபருக்கு தற்கொலை செய்வதால் ஊடகங்கள் மூலம் விளம்பரம் கிடைக்கும் என்பது அவர்கள் தற்கொலை செய்வதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.

இந்தியாவில் தற்கொலை குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் எத்தகைய தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த ஆய்வில் பற்றாக்குறை உள்ளது. தற்கொலை எண்ணப் பரவல் இருத்தலை, மனநல ஆராய்ச்சியாளர்கள், சமூக அறிவியல் அறிஞர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள் அங்கிகரித்துள்ளனர்.

ஒரு தற்கொலை அல்லது தற்கொலை செயல்பாட்டின் மீது அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலோ அவர்களது உறவினர்களாலோ அல்லது ஊடகங்கள் மூலமோ வெளிச்சம் கொடுக்கும்போது தற்கொலைகளை அதிகப்படுத்தும் என்பதை தற்கொலை எண்ணப் பரவல் குறிக்கிறது.ஊடகச் செய்திகளின் விளைவாக நடைபெறும் தற்கொலை எண்ணப் பரவலின் ஆபத்தை, தற்கொலைகள் குறித்து ஊடகங்கள் உண்மையான மற்றும் குறைவான அளவு செய்திகள் வெளியிடுவதன் மூலம் குறைக்க முடியும் என்று அமெரிக்கா, பிரட்டனில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. தற்கொலை செய்திகள் திரும்பத் திரும்பவும், நீண்ட நேரமும் ஒளிபரப்புவது தற்கொலை எண்ணப் பரவலை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மனநல வல்லுநர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டால் தற்கொலைகளை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணப் பரவல் உருவாவதற்கு ஊடகங்கள் தொடர்ச்சியாக வழிவகுக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் நேரடியாக பரவுவதைவிட ஊடகங்கள் மூலம் செல்வாக்கு செலுத்துவது வேகமாக பரவுவதை அதிகரிக்கும்.

நடத்தை எண்ணப் பரவல்( behavioural contagion theory) கோட்பாட்டின்படி, ஒரு தனிநபருக்கு ஒரு குறிப்பிட்ட நடத்தையை செய்துபார்க்க வேண்டும் என்ற எண்ணம் முன்னரே இருந்திருக்கும். அது வேறு ஒருவிஷயத்தை தவிர்ப்பதன் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. அதனால், நல்ல விஷயங்களும் தீய விஷயங்களும் இருக்கலாம்.

தற்கொலை செய்திகளுக்கு ஊடகங்கள் மிக அதிக அளவுக்கு வெளிச்சம் கொடுக்கும்போது தற்கொலை செயல்பாடுகள் அதிகரித்துள்ளது என்பதற்கு மேற்கத்திய கல்விநிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் ஏராளமான ஆவணங்கள் உள்ளன.

ஊடகங்கள் மற்றும் தற்கொலை சூழலில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உள்ள கருத்துகளின் மூலம் மக்கள் எப்படி உலகைப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை விளக்கும் கல்டிவேஷன் கோட்பாட்டை(Cultivation theory) நாம் பார்க்க வேண்டும்.

தற்கொலை செயல்பாடுகள் மற்றும் ஊடகங்களின் தற்கொலைகள் குறித்த சித்தரிப்பைப் பொறுத்தவரை தற்கொலை குறித்த கற்பனையற்ற ஊடகச் செய்திகளுக்கும், கற்பனை கலந்த ஊடகச் சித்தரிப்புக்கும், உண்மையான தற்கொலைக்கும் இடையிலான இயல்பான உறவை ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த ஆய்வுகள் சமூகக் கற்றல் கோட்பாட்டின்(social learning theory) அடிப்படையிலானது. தொலைக்காட்சிகள் பார்ப்பதன் மூலம் பார்வையாளர்களுக்கு நடத்தையைவிட மனப்போக்கில் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பாலான மக்களிடம் நடத்தைகள் மாடல்களை கவனிப்பதன் மூலம் அமைகிறது. ஒருவரை சாயல் செய்வது என்பது பல்வேறு காரணிகள் மூலம் அமைகிறது. ஒரு முன்மாதிரியின் குணாதிசயம்,

பி.பி.சி தயாரிப்பாளர்களுக்கான வழிகாட்டியில், ‘மதிப்புகள், தரம் மற்றும் கோட்பாடுகள் பகுதியில் கீழ்கண்ட விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ‘தற்கொலை என்பது சட்டம் தொடர்பான செய்தி. ஆனால், தற்கொலை தொடர்பான உண்மையான செய்தி அறிக்கை மற்றவர்களை ஊக்கப்படுத்தும். செய்தியாளர்கள் இந்தச் செய்திகளை வசிகரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறைவான அளவே விவரிக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட முறை வழக்கத்துக்கு மாறாக இருந்தால் தற்கொலை செய்துகொண்ட விவரத்தை தெளிவாக வரையறுக்கவோ, கிராபிக் பயன்படுத்தி அதனை விவரிக்கவோ கூடாது. சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியது.

ஒரு நபரின் அறிவாற்றல், அணுகுமுறை, உணர்ச்சிகள் மீது ஊடகத்தின் தற்கொலை சித்தரிப்பின் விளைவை உளவியல் ரீதியில் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். தற்கொலை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான முக்கிய வழியாக ஊடகங்கள் இருக்கிறது. ஊடகங்கள் பார்வையாளர்களைத் தூண்டுகிறது.

ஊடகங்களுக்கான வழிகாட்டு வழிமுறைகள்

தற்கொலையை நிறைவுபெற்ற தற்கொலை அல்லது நிறைவுபெறாத ஒன்று என்று குறிப்பிடுங்கள்

தற்கொலை என்பது பெரும்பாலும் வெவ்வேறுவிதமான மனநோயின் சிக்கலாகும். அதில் பல குணப்படுத்தக் கூடியது என்பதைக் குறிப்பிடுங்கள்.

உதவி மையங்களின் எண்களைக் குறிப்பிடுங்கள்

அபாய அறிகுறிகளையும், எச்சரிக்கை குறியீடுகளையும் விளம்பரப்படுத்துங்கள்

உயிரிழந்தவர்களின் புகைப்படங்களையும், தற்கொலை கடிதங்களையும் ஒளிபரப்பாதீர்கள்

தற்கொலை செய்துகொண்ட முறையை விவரிக்கவேண்டாம்

எளிமையான வழிமுறைகளை கொடுக்காதீர்கள்

தற்கொலையை கொண்டாடும் வகையில் செய்தியாக்காதீர்கள்

மதம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை பயன்படுத்தாதீர்கள்

தற்கொலை என்பது பிரச்னைக்கான தீர்வு என்பது போன்று செய்திகளை வெளியிடாதீர்கள்

தற்கொலைக்கு கதாநாயக பிம்பம் அளிப்பது கூடாது
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading