நீதிபதி லோயா மரண வழக்கு - நீதித்துறையில் கலகத்தை ஏற்படுத்திய வழக்கு

நீதிபதி லோயா மரண வழக்கு - நீதித்துறையில் கலகத்தை ஏற்படுத்திய வழக்கு
நீதிபதி லோயா
  • News18
  • Last Updated: April 21, 2018, 6:57 AM IST
  • Share this:
அருண் ஜேட்லி

நேற்று நீதிபதி லோயா வழக்கு  தீர்ப்பை முழுவதும் வாசித்தேன். நீதிபதி டி.வொய்.சந்த்ரசத் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 114 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 114 பக்க தீர்ப்பு ஒரு விஷயத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பொதுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் பொய் பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதையே இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு சில தேசிய கட்சிகளும், சில ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சில மூத்த வழங்கறிஞர்கள் தங்களை தவறான நோக்கத்தோடு வெளிப்படுத்தி கொண்டனர். ஆனால் இந்த வழக்கு குறித்து சிலபுள்ளி விவரங்கள் சில குழுக்களின் பங்களிப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்ந்து கூறுவதன் மூலம் இதுபோன்ற சில தவறான நிகழ்வுகள் நிகழாமல் இருக்க உதவும் என்று நம்புகிறேன்.


சொராபுதீன் வழக்கில் அமித் ஷா
சொராபுதீன் வழக்கில் அமித் ஷா எந்த ஒரு பங்கும் வகித்ததில்லை. சில மத்திய காவல்துறை அமைப்புகள் மாநில காவல்துறை உதவியுடன் சொராபுதீனை என்கவுண்டர் செய்தனர். 2013-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி இதுகுறித்த விரிவான கடிதத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதினேன். ராமன்பாய் படேல் மற்றும் தஷ்ரதா பாய் படேல் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் அமித் ஷா இணைக்கப்பட்டார் என்பது முதல் கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ராமன்பாய் படேல் மற்றும் தஷ்ரதா பாய் படேல் இருவரும் நில அபகரிப்பாளர்கள்.

இருவரும் அமித் ஷா அலுவலகத்துக்கு சென்று சந்தித்துத்த போது அமித் ஷா சாதாரணமாக சொராபுதீன் கொல்லப்பட்டது குறித்து சில சாதாரண விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  இவர்கள் இருவரும் இதற்கு முன் அமித் ஷாவை சந்தித்தது கிடையாது. ஆனால் அமித் ஷா மீது பொய்யான புகார் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு பின் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி லோயா வழக்கோடு அமித்ஷாவையும் தொடர்புபடுத்தி கொண்டு சென்றனர். ஆனால் உண்மையில் அமித் ஷாவுக்கும் லோயா மரணத்துக்கும் தொடர்பே கிடையாது.கேரவன் பத்திரிகையில் பொய் செய்தி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, நீதிபதி லோயாவுக்கு 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி படி நாக்பூரில் உள்ள ரவி பவனில் நெஞ்சு வலி ஏற்பட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறது. லோயாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது அவருடன் இரண்டு மாவட்ட நீதிபதிகள் உடன் இருந்தனர். அவர்கள் உடனே நீதித்துறையில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு போன்ற செய்து அழைத்தனர். மொத்தம் நான்கு மாவட்ட நீதிபதிகள் லோயாவை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காரிலேயே நீதிபதி லோயாவுக்கு இசிஜி எடுக்கப்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் கொடுக்கப்பட்ட பிறகு சிறப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், இதய சிறப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் நிலைமை மோசமடைந்துள்ளது. அவர் உயிர் அங்கேயே பிரிந்தது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவருக்கு இதய பிரச்னை ஏற்பட்ட போது அவருடன் நான்கு மாவட்ட நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவமனையில் இதய பிரச்னை காரணமாக மட்டுமே இறந்தார்  என்று பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது. பின்பு அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதை அவரது உறுப்பினர்களும் அவருடன் இருந்தவர்களும் இயற்கையான மரணம் என்பதை ஒப்புக் கொண்டனர். உச்சநீதிமன்றமும் அவரது மரணத்தில் வேறு எந்த சந்தேகங்களும் எழாத நிலையில் இயற்கையான காரணத்தினால் நீதிபதி லோயா மரணம் நிகழ்ந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளது.  ஆனால், கேரவன் பத்திரிகை கட்டுரைகளும் மற்றும் விசாரணைகளும் பொய்யான செய்தியை வழங்குவதற்கான பாடப்புத்தகம். இது வதந்தி அல்ல. ஆனால் உண்மையில் பொதுமக்கள் மத்தியில்  சர்ச்சைகளை ஏற்படுத்தும் நோக்கில் பொய் செய்திகளை வெளியிட்டது.

நிறுவன அமைப்பின் சிதைப்பாளர்கள்

பொதுமக்கள் நலனை காக்கும் நோக்கோடு வழக்கறிஞர்கள் கொண்டுவரும் வழக்குகளை  நீதிமன்றம் அணுகி வருகிறது. இந்த அணுகுமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  பொதுநலன் என்பது மாறி நிறுவன அமைப்பின் சிதைப்பாக மாறி வருகிறது. சில பொய்யான வழக்குகளை நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சக வழக்கறிஞர்களோடு கூச்சலில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீதிபதிகளிடமும் மரியாதையில்லாத தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் வதந்தியாக பரவி பின்பு உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதற்கு இரண்டு விஷயங்கள் துணைபோகின்றன. ஒன்று மீடியா. இதுபோன்ற பொய்யான வழக்குகளுக்கு மீடியாவின் வெளிச்சம் அதிகம் படுகிறது. மற்றொன்று காங்கிரஸ்; சில சமயங்களில் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ் சில குறிப்பிட்ட அமைப்புகளுக்குரிய நிலையை எடுத்து வருகிறது. மேலும் காங்கிரஸ் அவர்களது வழக்கறிஞர்கள் மூலமாகவோ அல்லது வேறு வழியாகவோ நிறுவன அமைப்பின் சிதைப்பாளர்களாக தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள விரும்புகிறது. இந்த நடைமுறை மேற்கொள்வதால் ஒரு புதிய வழக்கு முறையை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது.

தகுதி நீக்கம் என்றொரு ஆயுதம்

’இயலாமை’ அல்லது தவறான நடைமுறை என்ற இருவகைகளில் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதி மீது தகுதி நீக்கம் தீர்மானம் கொண்டுவர முடியும். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் தகுதி நீக்கத்தை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஒரு அமைப்பின் கண்ணியத்தை காக்கும் பொருட்டு அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவரை நீக்கம் செய்வதே தகுதி நீக்க நடைமுறை. உள் நிறுவன அமைப்புகளின் பொறுப்புடமையை உறுதி செய்வதற்காகத்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அரசியல் அவைகள்; ஆனால் தகுதிநீக்கம் செய்யும் நீதி அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதி அதிகாரம் அரசியல் அவைகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் நீதிபதியாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் உண்மைகளையும் ஆவனங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். கட்சியின் கொறடாவின் முடிவுக்கு ஏற்பவும் கட்சியின் நிலைக்கு ஏற்பவும் முடிவுகளை எடுக்கக்கூடாது.
First published: April 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading