Home /News /special-articles /

பாடம் 4 | உறவுகள் - பிள்ளை வளர்ப்பு

பாடம் 4 | உறவுகள் - பிள்ளை வளர்ப்பு

”ஒவ்வொரு சிறிய சிறிய பறவையும் பெரியதாக மாறியவுடன் வெளியே பறக்க வேண்டும், அதுதான் விலங்கு ராஜ்யத்தின் விதி”

”ஒவ்வொரு சிறிய சிறிய பறவையும் பெரியதாக மாறியவுடன் வெளியே பறக்க வேண்டும், அதுதான் விலங்கு ராஜ்யத்தின் விதி”

”ஒவ்வொரு சிறிய சிறிய பறவையும் பெரியதாக மாறியவுடன் வெளியே பறக்க வேண்டும், அதுதான் விலங்கு ராஜ்யத்தின் விதி”

  • News18
  • Last Updated :
பெற்றோராக இருப்பது  ஒரு ஆசீர்வாதம். இரண்டு இளைஞர்களின் பொறுப்பில் ஒரு குழந்தையின் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்ற உன்னதமானது எதுவும் இல்லை. ஒரு குழந்தையை நம் வாழிவினுள் வர அனுமதிப்பதன் மூலம் நம் வாழ்க்கை மாறும் போது ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டாகுகிறது. அதே சமயம், குழந்தைகளை வளர்ப்பது, தேவைப்படும்போது நம் நேரத்தை தியாகம் செய்வது, அவர்களுக்கு தேவைப்படும்போது அழுவதற்கு நம் தோள்களைக் கொடுப்பது, அவர்கள் வாழ்க்கையை வரையறுக்கும் தருணங்களில் இருப்பது நமக்குத்  ஒரு பொறுப்பாகும்.

இன்றைய குழந்தைகள், நாளைய பெற்றோர் மற்றும் முக்கியமாக நாடு எந்த வழியில் நகர்கிறது என்பதை தீர்மானிக்கும் குடிமக்கள். உளவியல் ரீதியாக பெற்றோரிடம் இருந்து சற்று தொலைவில் இடத்தில், தனியாக, பெற்றோரின் மேற்பார்வை போதுமானதாக இல்லாது தங்கள் சொந்த சூழலில் குழந்தைகள் வளர்வதும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவது இல்லை என்பதும் மிகுந்த கவலையை உண்டாக்குகிறது. இது நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இருக்கலாம். கிராம வீடுகளைப் போலல்லாமல் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய இடம், அடர்த்தியான நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கையினால் சுருக்கப்பட்டதோடில்லாமல், சிறு  குடும்பங்களே நமது தற்போதைய சமூக வாழ்வில் ஒரு வழக்கமென ஆகிவிட்டன. ஐ.நா.வின்  - ஹவுஸ் ஹோல்ட் & காம்போசிஷன் ரிப்போர்ட் 2019-ன் படி, தம்பதியினர் மட்டுமே உள்ள குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கூடிய தம்பதியினர் இப்போது இந்திய குடும்பங்களில் கிட்டத்தட்ட 50% உள்ளனர். 37% குடும்பங்களுக்கு மட்டுமே ஒன்று அல்லது மேற்பட்ட உறவினர்கள் உள்ளனர், இந்த உறவினர்கள் பெரும்பாலும் தாத்தா பாட்டி போன்றோர். வளர்ந்து வரும் பல குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரைப் போல் தாங்களும் தாத்தா பாட்டிகளுடன்  வாழ முடியாது என்பது வருந்தத்தக்க நிலை. பெற்றோர் இருவரும் பணிபுரியும் இரட்டை வருமானக் குடும்பங்களின் வளர்ச்சியுடன், நம் தொழில்முறை வாழ்க்கை நம் நேரத்தை  வேகமாக ஆக்கிரமித்து வருவதால், நம் குழந்தைகளுக்கான நேரம் என்பது ஆபத்தான முறையில் சுருங்கி வருகிறது.

பல்கலைக்கழக நகரம் ஒன்றில் நான் பணிபுரிந்த போது நடந்தது  இன்னும் நினைவில் உள்ளது- மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, ​​எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தடை - பெற்றோர்களே.

"அது பரவாயில்லை. அது எங்களுக்கு தெரியும், இது கொஞ்சம் பொழுதுபோக்கு. என்ன தீங்கு வந்துவிடப்போகிறது ? ”

"ஒரு முறை மன்னிப்பு அவருக்கு வழங்க முடியுமா? நீங்கள் விரும்பினால், நான் உங்களுடன் யாரையாவது பேச வைக்கட்டுமா”

"ஊடகங்கள் சொல்வது போல் இது உண்மையில் தீங்கு விளைவிப்பதா?"

என்பது எல்லாம் அவர்கள் கேள்விகள்

சிறார் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்நேரத்தில், சிறார் குற்றவாளிகளுக்கும் உடைந்த குடும்பங்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. உடைந்த குடும்பங்களின் பெரியவர்களால் நல்ல பெற்றோராக  இருக்க முடியாது. இந்த குழந்தைகள் வாழ்க்கை பற்றி தங்கள் சொந்த அணுகுமுறை மற்றும் சரி/தவறு தெரியாத உணர்வோடு வளர்கிறார்கள். இந்த தீய சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, கர்நாடகா மற்றும் யுனிசெஃப் கூட்டாக 2013 ஆம் ஆண்டில் மேற்கொண்ட 2,500 சிறுவர்களைக் கொண்ட ஒரு ஆய்வில், 94 சதவீத சிறுவர்களுக்கு பெற்றோர் மேற்பார்வை இல்லை என்று கண்டறியப்பட்டது! உண்மை புரிகின்றதல்லவா?

வாழ்க்கையை சொல்லி கொடுக்கும் பெற்றோரும் பெரியவர்களும் இல்லாத இளம் தம்பதிகளின் உறவுகளில்தான் முறிவு அதிகம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது!​ தனியாக வளர்வதற்கும், நல்ல பெற்றோரால் வளர்க்கப்படுவதற்கும் கடலளவு வித்தியாசம் உள்ளது. இந்த தம்பதிகள் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோராக ஆகும் பொது பிள்ளைகளுக்கு ஒரு பற்றாக்குறை வளர்ப்பே அமைகிறது.

  • என்ன செய்வது? 


பெற்றோராக இருப்பது ஒரு கலை, பெற்றோருக்கு மட்டுமே தங்கள் குழந்தைக்கு எது சரியானது என்பது தெரியும். ஆனால், நாம் அதிக ஈடுபாடுடன் அதற்கு உரிய மரியாதை கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஒரு தொடக்கத்திற்கு நாம் EEE’s (Exposure - வெளிக்கொணர்தல் , Educate - கற்பித்தல் மற்றும் Empower  - சுயமேம்பாடிற்கான அதிகாரம் ) பற்றி சிந்திக்கலாம், சிறப்பாக ஈடுபட முயற்சி செய்யலாம்.

  • வெளிக்கொணர்தல்:


வளர்ந்து வரும் எந்தவொரு குழந்தைக்கும் ஒருதலைப்பட்ச கல்வி வெளிப்பாடு மட்டுமல்லாது முழுமையான ஒரு வெளிப்பாடு தேவை - அதுவே அவர்களின் நற்பழக்கங்களை வெளிக்கொணரும். பஸ் நிறுத்தங்கள், தெரு மூலையில் கடைகள், சந்தைகள், மால்கள் போன்றவற்றில் மட்டுமல்லாது கிராமப்புற இந்தியா, பசியில் வாடுவோர், பணத்தின் சக்தி, ஆன்மிகம், பலதரப்பட்ட , பல வகையான மக்கள் எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு காண்பிக்கலாம். ஒரு ஆர்வமாக ஆரம்பித்து, பின்னர் மற்றவர்களும் உள்ளனர், அவர்களுடைய வாழ்க்கை எத்தகையது என்ற உண்மையான உணர்வு காலப்போக்கில் வளரும். நம் குழந்தைகளை பள்ளிகளும் பின்னர் மாலை பயிற்சிகளும், காலையில் நீச்சல் வகுப்பு / பிற இசை வகுப்பு என்ற இராணுவ விதிமுறைக்கு உட்படுத்தினால், ஒரு நல்ல முழுமையான வளர்ச்சியை இழக்க நேரிடும் . குழந்தைகள் கடுமையான விஷயங்களுக்கு ஆளாகக்கூடாது என்ற இந்த உணர்வு வளர்ந்து வருகிறது, அதை தகர்தெரியாவிட்டால் , நம்முடைய குழந்தைகள் பிரச்சினையை தீர்க்க வல்ல எதிர்கால நற்குடிமக்களாக இருக்க போவது எப்படி?

  • கற்பித்தல்:


என் கருத்துப்படி கல்வி பல பரிமாணங்களைப் பெற்றுள்ளது. அனுபவத்தில் கற்றுக்கொள்வது ஒன்றாகும், அதேபோல் விஞ்ஞானம், வரலாறு போன்றவற்றிலிருந்து கற்றல். நீட் தேர்வுகள் மற்றும் கடுமையான பயிற்சியின் இந்த யுகத்தில், நேர்மை, தைரியம், தயவு, சரியானவற்றிற்காக, அறத்திற்காக நிற்பது மற்றும் பொறுப்பாக இருப்பது பற்றி அறிய நேரம் இல்லை. பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நம் சமூகம் பாதிக்கப்படுவதில்லை - நம்மிடம் அவர்களோ பலர் உள்ளனர். அவர்களிடம் மேலே குறிப்பிட்டுள்ளபடி முக்கியமான பண்புகள் இல்லாமல் போனால்  அவை தாக்கத்தை ஏற்படுத்தாது. இதை அவர்களுக்கு யார் கற்பிப்பது? சந்தேகத்திற்கு இடமின்றி இது பெற்றோர்களே. குழந்தைகளும் சிறு வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து, பெற்றோரின் நடத்தையிலும்  முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களிலும் தங்கள் மாதிரிகளை உணர்கிறார்கள். குழந்தைகளுக்கு முன்னால் தந்தை தாயைத் நிந்திக்கும் போது - நாம் சுய மரியாதையை கற்பிக்கிறோமா? காவல்துறை நம்மை பார்க்காதபோது ஒரு சாலையில் நாம் ஒரு சிவப்பு விளக்கை மீறும் போது - குழந்தைகளுக்கு பொறுப்பாக இருக்க நாம் கற்பிக்கிறோமா? நாம் அநீதியை பொறுத்துக்கொள்ளும்போது, ​​சில சமயங்களில், நம் மேலாளர்களுக்கு எதிராக நிற்காத போது - அறத்திற்காக எழுந்து நிற்க கற்றுக்கொடுக்கிறோமா? இங்கே கற்பித்தல் என்பது சொல்லிக்கொடுப்பது  என்று அர்த்தமல்ல, நம் குழந்தைகள் நம்மிடம் இருந்து உயர்ந்த இலட்சியங்களை உள்ளீர்த்துக்கொள்ள நாம் வாழ்ந்து காட்டுவதே ஆகும்.

  • சுயமேம்பாடிற்கான அதிகாரம் :


ஒவ்வொரு சிறிய சிறிய பறவையும் பெரியதாக மாறியவுடன் வெளியே பறக்க வேண்டும், அதுதான் விலங்கு ராஜ்யத்தின் விதி. வளர்ந்த பறவைகள் பறக்க மறுக்கும்போது, ​​தாய் பறவை அவர்களை வெளியே தள்ளும். தாய் மற்றும் குஞ்சு பறவைகள் உயிர்வாழ இது முக்கியம். அதிகாரம் அளிப்பது என்பது வளர்ப்பது, வழிநடத்துவது மற்றும் நம்புவது. நேரம் வரும்போது, ​​உங்கள் பிள்ளைகள் அவர்களாக இருக்க அனுமதிக்கவும். அவர்களின் தொழில் தேர்வுகளில் தலையிடாதீர்கள் - உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாம் உண்மையில் அவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் இருக்க மாட்டோம் நமக்கு அது தெரியும் என்று நமக்கு நம்பிக்கை இருந்தபோதிலும். அவர்களுடன் நெருக்கமாக இருங்கள், அதே நேரத்தில் அவர்களுக்கான தனிமை நேரத்தையும் அனுமதிக்கவும்.

குழந்தைகள் சுயமேம்பாடிற்கான அதிகாரம் பெறுகிறார்கள் என்பதை உள்ளார்ந்த முறையில் அறிந்தால், தவிர்க்க முடியாத வீழ்ச்சி நிகழும்போது, ​​அவர்களுக்கு நீங்கள் உடன் நிற்பீர்கள் என்ற தைரியத்தினால் மட்டுமே அவர்களால் உயர முடியும் . தவிர அவர்களுக்கு உண்மையில் வேறு எதுவும் தேவையில்லை.

இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
Published by:Sankar
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி