Home /News /special-articles /

பாடம் 5 | வாழ்நாள் கற்றல்

பாடம் 5 | வாழ்நாள் கற்றல்

அனுபவங்கள் : திருமணம் என்னும் பழுத்த அனுபவத்தை பெறும் முன் சின்ன சின்ன அனுபவங்கள் மூலம் உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் குடும்பம் என்னும் கோட்டையில் ஆட்சி செய்ய முடியும். அந்த அனுபவத்தை பெற்றுவிட்டேன் என நினைத்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள்.

அனுபவங்கள் : திருமணம் என்னும் பழுத்த அனுபவத்தை பெறும் முன் சின்ன சின்ன அனுபவங்கள் மூலம் உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் குடும்பம் என்னும் கோட்டையில் ஆட்சி செய்ய முடியும். அந்த அனுபவத்தை பெற்றுவிட்டேன் என நினைத்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள்.

"நமக்குக் கற்றுக்கொள்வது என்பது பெரும்பாலும் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதும், திரும்ப செய்வதும், ஒத்திகை பார்ப்பதுமாக இருக்கிறது"

  • News18
  • Last Updated :
அமெரிக்காவின் ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் மிகவும் புகழ்பெற்றவர். ‘அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை’ கையெழுத்திட்ட  உறுப்பினர்களில் ஒருவரான அவர், ஒரு முன்னணி எழுத்தாளர், பதிப்பாளர், அரசியல் தத்துவஞானி , அரசியல்வாதி, ஃப்ரீமேசன், போஸ்ட் மாஸ்டர், விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், நகைச்சுவையாளர், சமூக ஆர்வலர் மற்றும் இராஜதந்திரியென பன்முகங்களை கொண்டிருந்தார் .

தேசத்தின் கலகம் நிறைந்த, போரின் காலங்களில், பல்வேறு துறைகளில் தளர்வில்லாது தொடர்ந்து ஆர்வமும் , அவர் அந்த முயற்சிகளில்  தனித்தன்மை அடைந்ததும் நமக்கு ஒரு ஆச்சரியம். அவர் மட்டுமல்லலாது, பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் இதுபோன்றதொரு அமைப்பு மீண்டும் மீண்டும் வருவதைக் காண்கிறோம். வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற இந்த ஒரு பண்பு அவர்களிடம் ஊன்றியிருப்பது தெரிகிறது.

நமக்குக் கற்றுக்கொள்வது என்பது பெரும்பாலும் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதும்,  திரும்ப செய்வதும் , ஒத்திகை பார்ப்பதுமாக இருக்கிறது. ஒரு ஆசிரியரின் மூலம் பாதுகாப்பான சூழலில் இந்த கற்றல் நமக்கு நடக்கிறது . ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவழித்து அதைக் கற்றுக் கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொண்ட பிறகு, நாம் எல்லாம் கற்றுக் கொண்டுவிட்டோம் என்ற மனநிலையில்தான் இருக்கிறோம். அடுத்த சில பத்தாண்டுகளுக்கு , நம்மீது செய்யப்பட்ட ஆரம்ப முதலீட்டிலிருந்தே நம் வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கிறோம். ஒரு நாள் நாம் வேலையிலிருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்று , நம் குழந்தைகள் நம்மை கவனித்துக்கொள்வார்கள் (தேவைப்பட்டால்) என்றும் , அவர்களும் அதே வழியில் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தொழில்துறையை  கூர்ந்து நோக்குபவராக இருந்தால், COVID-19 நம்மைத் தாக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங்  , 3D அச்சிடுதல், பிக் டேட்டா மற்றும் டீப் நியூரல் நெட்வொர்க் ஆகியவை மிக வேகமாக வளர்ந்து வந்தன. இந்த வளர்ச்சியின் பிரமிப்பிலிருந்து நாம் பலர் இன்னும் வெளிவரவில்லை. COVID-19 க்கு பிந்தைய காலத்தில் இவை மேலும் துரிதப்படுவதோடில்லாமல் , புதிய தொழில்துறை வாய்ப்புக்கள் economies of scale, specialization மற்றும் precision ஆகியவையால் ஆதிக்கம் செலுத்தபடலாம். உயிர்வாழ்வதற்கும், நம் வேலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், நாம் அனைவரும் நிலையான கற்றலில் இருந்து (இப்பொழுதைய நடைமுறை) வாழ்நாள்  கற்றலுக்கு நம் மனநிலையை மாற்ற வேண்டும்.

முன்னோக்கி செல்லும் வழியைக் காட்ட, பெஞ்சமின் பிராங்க்ளின் சுயசரிதை விட சிறந்த வழிகாட்டி எதுவுமில்லை. தனது அதிகாலையின் முதல் ஒரு மணிநேரத்தை வாசிப்பு, எழுதுதல் மற்றும் பரிசோதனைக்காகயென தியாகம் செய்வதன் மூலம் தனது பலதரப்பட்ட ஆர்வத்தைத் கற்றுணர்ந்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த குவிப்பான நாட்டம் அவர் தொட்ட எல்லாவற்றிலும் தனித்துவத்தை அடைய உதவியது. ஒரு சிறந்த நாடகத்தைப் போலவே, அவர் கற்றுக்கொண்ட அனைத்தும் பல்வேறு காலங்களில் ஒன்றிணைந்து அவரை ஒரு அறிவார்ந்த தேர்ந்த அரசியல்வாதியாக மாற்றின. அதனால்தான், சாதனையாளர்கள் சுய உந்துதல் இல்லை என்ற காரணத்தால் எந்த நேரத்திலும் தம் வாழ்க்கையை ஸ்தம்பிக்க அனுமதிக்காது தங்களை மேம்படுத்துவது , புதிய பழக்கங்களை வளர்ப்பது என்று 50களின் பிற்பகுதியில் கூட இருப்பதைக் காண்கிறோம். இதனால்தான் தொழில்முனைவர் எலோன் மஸ்க் 40 வயதிற்குள் ராக்கெட் அறிவியல், பொறியியல், இயற்பியல், சூரிய சக்தி முதல் மற்ற சக்தி துறையென பல்வேறு துறைகளில் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்களை உருவாக்கியுள்ளார் என்பதில் ஆச்சரியமில்லை.

  • இந்த lockdown'ஐ பயன்படுத்துவது எவ்வாறு ?


இந்த lockdown'ஐ இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படலாம் - ஒரு நல்ல பொழுதுபோக்கிற்கான இடைவெளி அல்லது ஒரு திருப்புமுனைகாண இடைவெளி. ஒரு காரியத்தை முன்பு நாம் குறைவாகச் செய்ததை விட இப்போது அதிகமாக செய்வது ஒரு நல்ல இடைவெளியாக  இருக்கக்கூடும். அதிகமான டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது (முன்னெப்பொழுதையும் விட இப்போது இருக்கும் channelகளால்  நாம்  கெட்டுப்போகிறோம்), நம் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள விஷயங்களை பற்றி சமூக ஊடக செய்தியிடல் மற்றும் கருத்துரைத்தல் செய்கிறோம் (பெரும்பாலும் டொனால்ட் டிரம்பின் தலைமுடியின் நிறம் அல்லது காவல்துறையினரிடமிருந்து யாரோ ஒருவர் அடிவாங்கியது பற்றி) . இது எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் நாம் யோசிக்காமல் இதைச் செய்துகொண்டிருக்கலாம் . நான் இப்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறேனா? என்பதும் , வெளிப்புற சக்திகள் என் வாழ்க்கையை கட்டுப்படுத்த இன்னும் எவ்வளவு காலம் அனுமதிப்பேன்? என்பதும், கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை எனும் பரிசில் சிறந்ததை நான் எடுத்துக்கொண்டுள்ளேனா? என்பதும் நம்மில் பெரும்பாலோருக்கு தனியே  உட்கார்ந்து கேட்டுக்கொள்ள கடினமாக உள்ளது. நம் திருப்திக்கு இவற்றிற்கு பதில் கிடைத்தவுடன், நம் வேலையை துவங்கலாம் . இதில் இந்த விருப்பம் சிறந்ததா அந்த விருப்பம் சிறந்ததா என்பது போன்ற எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கையிலிருந்து உங்களுக்கு வேண்டியது என்னது என்பதுதான் முக்கியம் .

உங்களுக்கான இந்த இடைவெளி உண்மையான திருப்புமுனையாக பயன்படுத்தப்படலாம் என நான் தாழ்மையுடன் பரிந்துரைக்கிறேன். நீங்கள் நீண்ட காலமாக படிக்காத அந்த புத்தகங்கள் (ஆனால் அதை வாங்கி குவித்து வைத்துள்ளீர்கள்), நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய பொழுதுபோக்கு, யோகா அல்லது நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பிய கிரியா, அல்லது ஆன்லைன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பிய புதிய திறனாகவோ இருக்கலாம். அல்லது, மற்றவர்களை விட உங்களைப் பற்றி நீங்கள் அதிகமாக அஞ்சுவதால் இப்போது வரை எழுதாமல் போன உங்கள் முதல் புத்தகம் அல்லது நீங்கள் எப்போதும் இயக்க விரும்பிய அந்த திரைப்படத்திற்கான முதல் திரைக்கதையாக இருக்கலாம். சில நாட்களுக்கு முயற்சித்து, நீங்கள் மிகப்பெரிய சிரமத்துடன் திரும்ப திரும்ப தொடங்குவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்களே கூட உணராமல் மெதுவாக அந்ததடத்திற்குள் வந்து , அது , உங்களுக்கு இயல்பாக மாறக்கூடும். நம்மில் சிலருக்கு, இந்த காலங்களில் நாம் ஆரம்பிக்கும் செயல்களோ , பொழுதுபோக்குகளில்  ஏதேனும் ஒன்றோ நம் வாழ்வாகவோ , உண்மையிலேயே வாழ்க்கை மாற்றும் விஷயமாகவோ மாறக்கூடும். உண்மையான வாழ்க்கை தொடங்கியதும், நம் வாழ்க்கையை மறுதொடக்கம் செய்ய நாம்  தயாராக இருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், நம்முடைய ஒரு மணிநேரத்தை நம் புதிய ஆர்வத்திற்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருப்போம் .

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உண்மையைப் பாருங்கள் - ஒவ்வொரு மாதமும் அமேசான் மற்றும் நெட்ஃபிக்ஸ் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கில் ஆடைகளுக்காகவும், ​​இன்னும் பல ஆயிரங்களை உணவகங்களிலும் செலவு செய்யும்போது, ​​நாம் ஏன் புதியது ஏதாவது செய்ய மட்டும் இருமுறை யோசிக்கிறோம்? மக்கள் தலைவரான டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு திறமையான வீணை  கலைஞராக இருந்ததோடில்லாமல் , தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தனது ஆழ்ந்த படைப்பு திறனை உணர்வதற்கும் அதிகாலையில் வாசித்து வந்தார் .ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் ஒரு வயலின் விசிறியாக தான் தன்னுடன் அதிக நேரம் இணைந்திருக்க வயலினுடன் தனது நேரத்தை செலவழித்தது ஆச்சரியப்படுவதற்கில்லை . சில நேரங்களில், ஆச்சரியப்படும்படி, நம்  இரண்டாம் நிலையில் உள்ள விருப்பங்கள் நமது முதன்மை விருப்பங்களையும்  தூண்டிவிட்டோ அல்லது வழிநடத்தியோ செல்லும்.

வாருங்கள், நம் வீணையையும் வயலினையும் கண்டுபிடிக்கும் நேரம் இது. அதை விரைவாகச் செய்வோம்!

இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
Published by:Sankar
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி