முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / பாடம்-7: விதிகளை மதிப்போம்; கொரோனாவை வீழ்த்துவோம்

பாடம்-7: விதிகளை மதிப்போம்; கொரோனாவை வீழ்த்துவோம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • 2-MIN READ
  • Last Updated :

இன்று நமது மாண்புமிகு பாரத பிரதமர் அறிவித்த நாடு முழுவதற்குமான lockdown'னின் எட்டாவது நாள். SARS COVID-19'ன் மூன்றாம் கட்ட பரவுதலையும் (சமூகம் மூலமாக ),  மக்களின் நடமாட்டத்தை தடுக்கவும், இந்த அசாசாதாரண நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்மில் பெரும்பாலோர் இந்த lockdown'னை லேசாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ள வாரமும் இதுதான். நீண்ட காலமாக சந்திக்காத ஒரு நண்பரை விசாரிக்கவோ அல்லது முக்கியமாக ஒரு வாரம் வீட்டில் தங்கியிருக்கும் நம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவோ நாம் அவர்களை சந்திக்க முயற்சி செய்யலாம்.

நாம் ஒரு மனிதராக, முக்கியமாக சமூக விலங்காக இருப்பதாலும், இது நம் இயல்பாக  இருப்பதாலும் அது நடக்கக்கூடும். அடுத்த இரண்டு வாரங்களுக்கும் வீட்டிலேயே தங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதற்கும், நினைவுபடுத்துவதற்கும் இது ஒரு நல்ல தருணம் என்று நான் நினைத்தேன்.

SARS COVID-19 ஐ கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்?

  1. இது ஒரு வேகமாக பரவுகிற ஒரு தொற்றுநோய். உலகம் முழுவதும் பரவியுள்ள இதன் தரவைப்(தகவலை) பார்த்தால், அதன் தீவிரம் மற்றும் வேகம் குறித்து நமக்கு ஒரு தெளிவு கிடைக்கக்கூடும். ஜனவரி 22, 2020 அன்று, இந்த வைரஸ் சுமார் 555 பேரை (சீனாவில்) பாதித்தது, நேற்று (மார்ச் 31,2020) நிலவரப்படி, இது சுமார் 7,20,100 க்கு தொற்றியுள்ளது. இந்த பரவல் 70 நாட்களில் நடந்துள்ளது. ஏறக்குறைய 4% இறப்பு விகிதத்துடன் சுமார் 34,041 பேர் இறந்துள்ளனர். நம் நாடான இந்தியாவிலோ, 32 இறப்புகளுடன் 1,400 பேருக்கு இது வந்துள்ளதை நாம் காண்கிறோம். அதுமட்டுமல்லாது, கடந்த சில நாட்களாக வேகமாக பரவுவதையும், மேலும் சமூக பரவுதலுக்கான அறிகுறிகளையும் இவைசுட்டிக்காட்டுகின்றன. எனவே, நமது சுகாதார உள்கட்டமைப்பை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்காது, அடுத்த சில வாரங்களில் இந்த பரவலைக் குறைப்பதுமிகவும் முக்கியமானது. ஓரிரு நாடுகளில் மருத்துவ பரிசோதனைகளாய்தொடங்கியிருந்தாலும், இதற்கான தடுப்பூசியையோஅல்லது சிகிச்சையோ  நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. செப்டம்பர் மாத தொடக்கத்தில் மனித சோதனைகளைத் தொடங்குவதற்கான பாதையில் இருப்பதாக பார்மா கம்பெனி ஜான்சன் & ஜான்சன் நேற்று அறிவித்திருந்தனர். எனவே, அடுத்த சில மாதங்களுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நம்மை முயற்சித்து பாதுகாக்க வேண்டும்.

இந்த வைரஸ் நீண்ட காலம் நீடிக்கும். இவ்வைரஸ் காற்று, பிளாஸ்டிக், எஃகு, அட்டைப் பெட்டிகள் மற்றும் நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் நீண்ட காலம் நீடிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. ஒழுங்காக சுத்திகரிக்கப்படாத எந்தவொரு பொருளின் மீது கை வைக்காமல் இருப்பதும், பயணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம்.

இது வயதானவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கிறது. நாம் அனைவரின் வீட்டில் வயதானவர்கள் இருப்பதால், சமூக தூரத்தை கடைபிடிப்பது நமக்கு மிக முக்கியமானது. இந்த வைரஸின் நோய் கடத்தியாக நாம் செயல்பட்டு அதை அவர்களுக்கு நாம் ஒருவேளை பரப்பலாம். அது மனிதாபிமானமற்றதாக இருக்கும்.

பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

சமூக ஊடகங்களும் நம் உலகமும் COVID-19 ஐ தடுப்பதற்கான ஆலோசனைகள் நிறைந்தவை. ஆனால் ஒரு அறிவுரை மீண்டும் மீண்டும் சொல்லப்படுபொழுது, அதை ஒரு நச்சரிப்பாகவும், ​​அதை லேசாகவும் நாம்  எடுத்துக்கொள்வோம். நம் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் நம் அனைவரையும் ஆளாக்க உபயோகித்தது அதே அறிவுரைதான். சாலையின் விதிகளை நாம் கீழ்ப்படிய வேண்டும் இல்லையேல் விபத்தை சந்தித்து, சந்தேகமின்றி அதற்கான  விலையை  கொடுக்கிறோம்.

வலிமைமிக்க இந்த இயற்கைக்கு முன்னால் நாம் வெறும் மனிதர் மட்டுமாதலால் இந்த இயற்கையின் விதிகளை மதிக்க வேண்டும், இல்லையென்றால் நாம் இறந்துவிடுவோம். அதேபோல், COVID -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான விதிகளுக்குக் கீழ்ப்படிந்து மதிக்க வேண்டும். இந்த வைரஸ் ஒரு பணக்காரனுக்கும் ஏழை மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முற்படுவதில்லை - அனைவரையும் சமமாக பாதிக்கிறது; அந்த நபர் அரச தலைவரா அல்லது நாட்டின் பிரஜையா என்பதைப் பார்க்கவில்லை - இது பிரிட்டிஷ் பிரதமரையும் பாதித்தது; இத்தாலி, ஸ்பெயின் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸில் பல முதன்மை பராமரிப்பு ஊழியர்களாகிய மருத்துவர்களை கொன்றுவிட்டது.

எனவே, கவனத்துடன் சமூக இடைவெளியை பராமரித்து, அடிக்கடி கைகளை கழுவி, வீட்டிற்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் எவரையும் வீட்டை மாசுபடுத்த அனுமதிக்காது. மேலும், வெளி இடத்திற்கும் சென்று மாசுபடாமல் இருந்து; நம் வீட்டின் லக்ஷ்மன் ரேகாவைக் கடக்காமல் (மாண்புமிகு பாரத பிரதமர் சொன்னதுபோல்) தெருவிலோ அல்லது தொலைபேசி கம்பங்களை தொடாமல் தொற்றுநோய் வராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் தினசரி நடைமுறைகளில் இருந்து விலக வேண்டாம். சலிப்பு ஏற்பட்டு, நாம் முட்டாள்தனமான செயல்கள் எதையாவது செய்ய ஆரம்பிக்கலாம்.

தலைசிறந்த PPEs (Personal Protective Equipments) இருந்தும், பாதிக்கப்படுவோம் என்று தெரிந்தும் அசாதாரணமான அபாயங்களை எடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து முதன்மை பராமரிப்பு ஊழியர்களுக்கும் (மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள்), நீர், மின்சாரம், கழிவுநீர், கழிவுகளை அகற்றுவது, சுகாதாரம் போன்ற நமது அத்தியாவசிய சேவைகளை இயக்குவதற்காக தொடர்ந்து பணியாற்றும் காவல்துறையினருக்கும் (ஆண், பெண்) ஒரு அமைதியான பிரார்த்தனையை செய்வோம். இதைச் சேர்த்து, நம் உணவை வந்து வழங்கும் இணையவழி நிறுவனம், நம் பால் மற்றும் தெருவோர மளிகை கடையினருக்கும் நாம் பிரார்த்தனையை செய்வோம். அவர்கள் அனைவரும் அசாதாரணமானவர்கள், அவர்கள் நம்  முழு நன்றியுணர்வுக்கு தகுதியானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தீங்கிற்கு உள்ளாகி நமக்கு சேவை செய்கிறார்கள் .

இப்போது, ​​முன்னைவிட நம் வாழ்வில் லக்ஷ்மன் ரேகாவைக் கடக்காது, வீட்டில் தங்குவதற்கும், அவசரகால பயணங்கள் அனைத்தையும் நிறுத்துவதற்கும் இது சரியான நேரம். உண்மையான கீழ்ப்படிதலுடனும் தேசபக்தியுடனும் நம்மை வைத்திருப்பதே நாம் நம் தேசத்திற்கு நம்மிடமிருந்து அது கோரும் நேரத்தில் வழங்கக்கூடிய பங்களிப்பு ஆகும்.

ஜான் டி ராக்பெல்லர் கூறியது போல், “ஒவ்வொரு உரிமை ஒரு பொறுப்பையும் ; ஒவ்வொரு வாய்ப்பு, ஒரு நன்றிக்கடனையும்; ஒவ்வொரு உடைமை, ஒரு கடமையும் குறிக்கிறது ”

நம் நாட்டிற்கான நமது பொறுப்பு, நன்றிக்கடன் மற்றும் கடமையைக் காண்பிப்போம். அது இப்போது அவ்வனைத்தையும் கோருகிறது.

Also see:

First published:

Tags: CoronaVirus