ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

பாடம் 20 | வாழ்வியல் சிந்தனை - ஒரு கண்ணோட்டம்

பாடம் 20 | வாழ்வியல் சிந்தனை - ஒரு கண்ணோட்டம்

பயணங்கள் : தனிமையில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற வேண்டும் என சில ஊர்கள் உங்கள் டிஸ்டில் இருந்தால் அங்கெல்லாம் சென்று வந்து லிஸ்டை முடித்துவிடுங்கள். இதனால் திருமணத்திற்கு பின் இந்த ஏக்கம் இருக்காது.

பயணங்கள் : தனிமையில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சுற்ற வேண்டும் என சில ஊர்கள் உங்கள் டிஸ்டில் இருந்தால் அங்கெல்லாம் சென்று வந்து லிஸ்டை முடித்துவிடுங்கள். இதனால் திருமணத்திற்கு பின் இந்த ஏக்கம் இருக்காது.

"வாழ்க்கையில் தோல்வியோ அல்லது வெற்றியோ என்பது மனதின் உணர்வுகளேயன்றி வேறில்லை என்பதை விரைவிலோ, பின்னாளிலோ அவர்கள் அறிந்து கொள்வார்கள்"

  • News18
  • 4 minute read
  • Last Updated :

நாம் நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சியாக, இன்று நம்முடைய "வாழ்வியல் பிரச்சினைகளை" மூன்றில் இரண்டாவது பாடமாக பார்ப்போம். இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு சிக்கலான தலைப்பாக இருந்தாலும் இதை நாம் செய்ய வேண்டும். நம்மில் பெரும்பாலோர் குறிப்பாக நகர்ப்புற திரள் வாழ்க்கையில் வேரற்றவர்களாகவும், திசையற்றவர்களாகவும் உணரக் காரணம், நம் வாழ்க்கை அதன் நோக்கத்தை இழந்துவிட்டதுதான். நாம் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அந்த மாய சூத்திரத்தை கண்டு பிடித்து விட்டதாக தோன்றுகிறது.

இந்த மந்திர சூத்திரம் இது போன்று இருக்கலாம்- எல்லா தேர்வுகளிலும் கலந்துகொள்ள தங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி கடினமாகப் படிக்கச் செய்து, ஆடம்பரமான பட்டத்துடன், அதிக ஊதியம் தரும் வேலையில் அமர்த்தி அவர்கள் எல்லாம் அடைந்து விட்டார்கள் என்ற உணர்வைத் அவர்களுக்கு தருவது. அந்த பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அல்லது மேலும் முன்னேற, பெரும் கனவுகளை அடைய , அவர்கள் மிகவும் கடினமாக உழைப்பது என்ற  ஒரு கடினமான பாதையை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக மற்றும் தங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறோம். இந்த பொய்த்தோற்றமுடைய வெற்றியின் சிக்கல் என்னவென்றால், நாம் முழுவதுமாக உழைத்துத் தேய்ந்து, நிலை தடுமாறி, முழுமையாக எல்லாவற்றையும் இழக்கும் வரை இதைச் செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில், நாம் நமது வாழ்க்கையின் அமைதியை முழுவதுமாக குலைத்து, நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் பகுதிகளிலிருந்து விலகி, இறுதியாக, வயதான காலத்தில்  நாம் தவறவிட்ட வாழ்க்கைக்காக வருந்துகிறோம் . இந்த தானியங்கி வாழ்க்கையை மீண்டும் கவனித்து, ஒரு நோக்கத்தை கொண்டு வர வேண்டும். நம் வாழ்க்கையை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு முன் நமது பொருளாதார நிலைமைகளில் பெரும்பாலானவை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் நியாயமானதே. தற்போதைய வாழ்க்கை முறையிலிருந்து  விடுபட , நம் உணவை ஒரு முழுமையான வழியில் சம்பாதிக்கவும், இந்த பொருளாதார மாதிரியைப் வேறு கோணத்தில் பார்க்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும் . எல்லோரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும், அவர்கள் செய்கிற காரியங்களைச் செய்வதன் மூலமும், வெற்றிக்கான ஒரே வழி அது மட்டுமே என்று நினைப்பதும் நமது வாழ்வியல்  நெருக்கடிக்கு மூல காரணம்.

பெற்றோர் எவ்வாறு பங்களிக்க முடியும்?

தற்போதைய சிக்கல்கள் நம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஆடம்பரமான பட்டம் பெறுவதை வலியுறுத்துவதிலிருந்து தொடங்குகிறது. ஏனெனில் அவர்களின் மன கட்டமைப்பில் அது வெற்றி என்று பதிக்கப்படுகிறது. விருப்பமில்லாமல் அல்லது ஒரு யோசனை இல்லாமல், மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த பொறியில் சிக்க, அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் தொடங்குகிறது. ஒரு குழந்தையை  தனித்துவம் உடைய நபராக வடிவமைக்காமல், உற்பத்தி பட்டறை போன்ற ஒரு பள்ளிப்படிப்பில் குழந்தையை அனுமதிப்பது ஒரு பாவம். இதைவிட பெரிய பாவம் , பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தில் செல்வதும், தங்கள் குழந்தைக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் மாறுபட்ட நல் அனுபவங்களை கொடுப்பதற்கான முதன்மைக் கடமையில் தோல்வியடைவதும் ஆகும். ஒரு குழந்தை பெரும்பாலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் விவசாயத்துறைகள் பற்றி தெரிந்து கொள்வதில்லை; தெரு சுத்தம் செய்வது அல்லது இரத்த தானம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் (இதில் not for profit மற்றும் zebra business models  போன்ற புதிய முறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன) போன்ற சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை . பெற்றோர் கொடுக்கும் ஒரே அனுபவம் ஒரு பள்ளி, வீடு மற்றும் அவர்களின் ‘ஊக்க உரையாடல்கள்’ என்றிருந்தால், குழந்தை எவ்வாறு வளர்ந்து, எதிர்காலத்தைப் புரிந்து கொண்டு, முதுமை வரை நல்நோக்கத்துடன் தொடர்ந்து வாழக்கூடிய ஒரு நபராக மாறும்?

பெற்றோர்கள் கொஞ்சம் கற்பனைதிறனுடன், குழந்தைகளை அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய அனுமதிக்க வேண்டும். பொதுத்தேர்வுகளுக்கு முன்பு இது திடீரென்று நடக்காது. ஆனால் தொடர்ந்து சில காலம், ஒரு குழந்தை தான் தேர்ந்தெடுத்த துறையில் காலப்போக்கில் திறமையை வளர்த்துக்கொண்டு சிறுசிறு ரிஸ்க் எடுத்து துணிந்து முன்னேறும் பொழுது பெற்றோரும் நம்பிக்கையுடன் அந்தக் குழந்தையின் லட்சியத்திற்கு உதவியும் ஊக்கமும் அளிப்பர்.

சமூகம் எவ்வாறு பங்களிக்க முடியும்?

நம்மை தவிர மற்ற அனைவருக்கும் நேரம் ஒதுக்குவது போல் தோன்றும் ஒரு தனித்துவமான சமூகம் நம்முடையது. நாம் நமக்காக நிர்ணயித்த அளவுகோல்களினால் அல்லாமல், மாறாக மாற்றாரின் வெற்றியின் அடிப்படையில் நாம் நம் வெற்றியை அளவிடுகிறோம் . நம் செல்வமும் நமக்கு அறியப்பட்ட வட்டத்திற்கு எதிராகவே அளவிடப்படுகிறது, இறுதியாக நமது வெற்றியும் அப்படித்தான் அளவிடப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்வதற்கும், நம்முடைய வாழ்க்கையின் சொந்த வடிவமைப்பிற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதற்காக போட்டியிடுவதும் அதற்காக காத்திருப்பதும்தான் இந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்துள்ளது. இந்த மனப்பான்மையை கைவிட வேண்டும். தோல்வியுற்றவர்களை சமூகம் ஏற்றுக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் மறையிடர்(risk taking) கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளவும் வேண்டும் . எந்தவொரு சமூகமும் தோல்விகளைத் தழுவி தோல்வியுற்ற நபரை அதன் சொந்தமாகக் கருதுகிறதோ, அது, மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்களைக் கொண்டிருக்கும். முடிவாக சொன்னால், ஒரு சமூகம் என்பது என்ன - ஒரு மக்களின் தொகுப்பு. மக்கள் தங்கள் புதிய சிந்தனைகளாலும், பழைய வடிவங்களிலிருந்து விடுபடுவதாலும், தேவைப்படும் போது அதற்கு அந்த  சக்தியைக் கொடுப்பதன் மூலம் சமூகம் பழையதாக மாற விடாது இருந்தால் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியும்.

முன்னோக்கிச் செல்லும் பாதை:

நாம் குழந்தைகளுடன் துவங்கி , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  ஒரு புதிய பாதையைக் காட்ட ஊக்குவிப்போம் . குழந்தைகள் வளர்ந்து வரும் காலம் நம் காலத்தைவிட முற்றிலும் மாறுபட்டது என்பதால் நம் குழந்தைகள் நம்மைவிட அதிகமாக அறிந்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஆமாம், வளர்ந்த நபர்களாகிய நம்முடைய அறிவு அவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களுக்கு நம் ஞானத்தை வழங்கவும் தேவை. ஆனால் இறுதி முடிவு அவர்களுடையதாக இருக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்கவும், அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தீவிரமாக தொடரவும், முக்கியமாக தங்கள் வாழ்க்கையை நோக்கத்துடன் வாழவும் கூடிய இளம் ஆற்றல் மிக்க மனங்கள் இந்தியாவுக்கு இப்போது தேவை. முழுமையாக சுதந்திரத்தை உணராத தனிநபர்களால் நிரப்பப்பட்ட நமது சமூகத்திற்கு இப்போது தேவைப்படும் பாடத் திருத்தம் இதுதான். இந்த 21 நாட்கள் (மேலும் 14 நாட்கள்) lockdown என்பது அனைவருக்கும் ஒரு முறை நம் மனதை சரிசெய்யவும், நாய் தன் வாலை துரத்துவது போல இருக்கும்  இந்த வித்தையிலிருந்து வெளியேறவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். முதலில் அதைச் செய்ய நாம் நம் குழந்தைகளுடன் தொடங்குவோம். முழு உணர்வோடு பெற்றோராய் இருந்து, அவர்கள் தோல்வியடைய நேர்ந்தாலும் அதை அனுமதித்து அவர்கள் விரும்புவதைத் தொடர அவர்களுக்கு உதவுவோம். ஏனென்றால், வாழ்க்கையில் தோல்வியோ அல்லது வெற்றியோ என்பது மனதின் உணர்வுகளேயன்றி வேறில்லை என்பதை விரைவிலோ, பின்னாளிலோ அவர்கள் அறிந்து கொள்வார்கள்,  ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்களைப அவர்கள் பின்தொடர்வது மட்டுமே அவர்களுக்கு நோக்கத்தையும் சுதந்திர உணர்வையும் தரும்.

மார்க் ட்வைன் கூறியது போல், “உங்கள் வாழ்க்கையில்  இரண்டு முக்கியமான நாட்கள் மட்டுமே உள்ளன- நீங்கள் பிறந்த நாள் மற்றும் நீங்கள் ஏன் பிறந்தீர்கள் என்பதைக் உணரும்   நாள்”. அதை விரைவில் கண்டுபிடிக்க நம் குழந்தைகளுக்கு உதவுவோம். அவர்கள் மாறுவதால், சமுதாயமும் பிற்காலத்தில் நம் நாடும் சிறப்பாக மாறும்.

இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க கிளிக் செய்க...

Published by:Sankar
First published:

Tags: Lockdown