Home /News /special-articles /

பாடம்-19: இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்

பாடம்-19: இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்

இயற்கை

இயற்கை

உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களையும் அதை உருவாக்க செலவிடப்பட்ட  வளங்களையும் உணர சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

நம் 21 நாள் தொடரை முடிக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன.  Lock down நீட்டிக்கப்பட்டாலும், இந்த தொடரை 21 நாட்களில் முடிக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் தீவிரமாகவோ அல்லது இணக்கமாகவோ, நம் எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டிருப்பதால் இந்த  கடைசி மூன்று கட்டுரைகளை இதற்காக நாம் பயன்படுத்துவோம்.  நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் மூன்று விஷயங்களில் முதலாவது இது  - வளம் தேர்வுமுறை (வளங்களை நம் தேவைக்காக உகந்த அளவிற்கு தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்)

வளம்-சிந்தனை-பயன்பாடு

கடந்த 18 நாட்களில் இதன் சில பகுதிகளை நாம் பார்த்தோம் , ஆனால் இன்று அதில் இருக்கும் கற்றல்களைக் கொண்டு நம்முடைய எதிர்காலத்தை வடிவமைப்போம். இந்த பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது மற்றும் பரிணாம வளர்ச்சியில், இயற்கை நம்மை உருவாக்கியுள்ளது. இந்த கிரகத்தில் ‘நாம்’ மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான உயிர்களும் உருவாகின. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கிடைக்கும் வளங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். பூமியின் இயல்பான வடிவமைப்பால் சில வளங்கள் தானாகவே மீண்டும் உருவாக்கப்படுகிறன. உதாரணமாக - நாம் உட்கொள்ளும் பிராணவாயு மற்றும் மரங்களிலிருந்து மறுஆக்கம் செய்யப்படுகின்றது; ஓசோன் படலம், மரங்கள் மற்றும் நீராவி உறைவுமுறை போன்றவை நாம் உருவாக்கும் வெப்பத்தை தணித்து பூமியின் வெப்ப அளவை சீராக வைக்கின்றன. தாண்டக்கூடாத அளவைத் தாண்டும் பொழுதோ அல்லது செல்ல கூடாத பாதையில்  நாம் செல்லும் பொழுதோ இவை அனைத்தும்  மீண்டும் மறுஆக்கம் ஆவதில்லை. எடுத்துக்காட்டாக, அதிகமான மரங்களை ஒருபுறம் வெட்டி சாய்த்து, மறுபுறம் மக்கள் தொகை கட்டுப்பாடின்றி அதிகரித்தால், பிராணவாயுவில் சமநிலை ஏற்பட வழி இல்லை. எல்லா வகையான மாசுபாட்டினாலும் நாம் பூமியை வெப்பமாக்கி, காடு வளர்ப்பை அனுமதிக்காது, ஓசோன் படலத்தை அழியவிட்டால் , பூமி அதன் சீரான வெப்பநிலையை பராமரிக்க எந்த வழியும் இல்லை.

எந்தவொரு நபருக்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ சொந்தமானவையாக இல்லாமல் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் இந்த வளங்கள் அனைத்தும் ‘Global Commons’ என்று அழைக்கப்படுகின்றன. அதைக் கவனித்துக்கொள்வது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும். இந்த பொதுவான வளங்கள் அனைத்தையும் நம்முடையது என்பதால் இவற்றை பாதுகாக்கும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘எனக்கு கூடுதல் தண்ணீர் தேவையில்லை அதனால், நான் எடுத்து கொள்ள மாட்டேன்’,  ‘என்னால்  நடந்து செல்லக் கூடிய காரியத்திற்கு வாகனத்தை உபயோகப்படுத்த  மாட்டேன் ஏனெனில் பெட்ரோல்  எடுக்க, நாம்  ஏற்கனவே இந்த பூமித் தாய்க்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால், மேலும்  சுற்றுச் சூழலை மாசு படுத்தமாட்டேன்’ என்பது போன்ற  எண்ணங்கள் நம்முள் வர வேண்டும். அதேபோல், நாம் செய்யும் எல்லா விஷயங்களிலும், நாம் கொஞ்சம் உள்ளுணர்வுடன் செயல்பட முடியுமானால், ஒரு சிறந்த உலகத்தையும், COVID- 19 முந்தைய உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு உலகத்தையும் உருவாக்க முடியும்.

ஒரு எளிய சட்டையின் கதை:

ஒரு சட்டை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோமாக. இது ஒரு பருத்தியால் செய்யப்பட்ட சட்டை என்று எண்ணிக்கொண்டு அது உருவாகும் விதத்தை நோக்குவோம். ஒரு சட்டை தயாரிக்க, முக்கியமான மூலப்பொருள் பருத்தி நூல், பருத்தி ஒரு விவசாயியால் பயிரிடப்படுகிறது. பருத்தி நூல் சிப்பம் போக்குவரத்து மூலம் ஒரு ஜவுளி நிறுவனத்தை அடைந்து  (பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்) பின்னர் மின்சாரம் பயன்படுத்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நூல் உருவாக்கப்படுகிறது. இந்த நூல் துணியாக நெய்யப்படுகிறது. பின்னர் துணி சாயமிடப்பட்டு, கத்தரிக்கப்பட்டு, தைக்கப்பட்டு, அதில்  பொத்தானை வைத்து, இறுதியாக ஒரு அழகான சட்டை அதற்குண்டான பையில் அடைக்கப்பட்டு ஒரு காட்சி அறைக்கு அனுப்பப்படுகிறது. முழு செயல்முறையையும் நாம் கண்காணித்தால், மின்சாரம், நீர், பெட்ரோல் / டீசல் உள்ளிட்ட பல புதுப்பிக்க முடியாத வளங்கள் நுகரப்படுகின்றன.

இப்போது தான் கடினமான பகுதி வருகிறது. ஒரு சட்டைக்குள் செல்லும் பருத்தியின் அளவை பயிரிட சுமார் 2700 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மின்சாரம் உருவாக்குவது போன்ற பிற விஷயங்களுக்குத் தேவையான நீரின் அளவு மற்றும் ஏனைய பிற விஷயங்களை நாம் கணக்கிடவில்லை. மீண்டும் சாயமிடுவதற்கு, மகத்தான அளவு நீர் தேவைப்படுகிறது மற்றும் பெரும்பாலும் அந்த சாய ஆலை கழிவு நீர் மீண்டும் ஒரு நதி/ ஓடையில் விடப்படுகிறது. இது மற்றொரு கொடூரமான கதை. ஐரோப்பிய நாடுகளில் தங்கள் தயாரிப்புகள் அனைத்திலும் ‘Water Footprint’ தகவல் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம்  அதிகரித்து வருகிறது. இதன் நோக்கம் ஒரு பொருளை தயாரிக்க உபயோப்படுத்திய நீரின் அளவை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவது. இது COVID-19க்கு பிறகு, விரைவில் நடைமுறை ஆகக்கூடும். இப்போது, ​​நம் மனநிலையை ஒரு ஆடை வாங்குகிறோம் என்ற எண்ணத்திலிருந்து உலகின் பொதுவிலிருந்து நாம் எடுக்கும் வளமாக எண்ண வேண்டும். அந்த கூடுதல் ஆடையை நாம் வாங்க வேண்டுமா அல்லது நம்முடைய 20 வது சட்டை நமக்கு தேவையா என்பது பற்றி நாம் சிந்திப்போம். முன்னெப்போதையும் விட இப்போது தேவைப்படும் மாறுபட்ட சிந்தனை இது.

அதேபோல் நாம் அறியாமலேயே உருவாக்கும் கார்பன் டை ஆக்சைட்  அடிச்சுவடு ; விலங்கு தோலினால் ஒரு ஆடம்பர பொருளை வாங்குவது; ஒரு எளிய டியோடரண்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவு  (கூகிள் செய்து நீங்களே பாருங்கள்) மற்றும் விசிறி அல்லது ஏர் கண்டிஷனரைத் செயல்படுத்த தேவைப்படும் வளங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் தேவையின்றி இயங்க அனுமதிப்பது பற்றி சிந்தியுங்கள். புவி வெப்பமடைதலின் விளைவுகள் மற்றும் துருவ பனிக்கட்டிகள் கரைதல் முதல் மரங்களை வெட்டுவது, கூடுதல் வெப்பத்தினால் கார்பன் மடுவின் உறிஞ்சுதல் திறனையும் தாண்டி இந்த கிரகத்தை நாம் எவ்வாறு இரக்கமின்றி அழிக்கிறோம் என்பதைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களையும் அதை உருவாக்க செலவிடப்பட்ட  வளங்களையும் உணர சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

நாம் பூமியின் இயல்பு நிலையை அதிகம் மற்றும் பொழுது பூமியும் அதை எதிர்த்து நம்மை தாக்கும் வழக்கத்தை உடையது . வூஹான் மாகாணத்தில் இறைச்சி விற்கும் சந்தையில் SARS COVID-19 உருவானது என்று நாம் கூறினாலும் , பெரிய கண்ணோட்டத்தில், இந்த தொற்றுநோய் நமக்கு என்ன சொல்கிறது? இது பின்வரும் படிப்பினைகளை நமக்கு சொல்கிறது என்று நினைக்கிறேன்

  • நாம் நினைப்பது போல் நாம் சக்திவாய்ந்தவர்கள் அல்ல. மிக நீண்ட காலமாக நாம் பல விஷயங்களை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

  • பூமி நம்மைத் தாக்கும் போது, ​​அது நம்மை கடுமையாகத் தாக்கும். அப்போது எம்முனையிலிருந்து தாக்கப்படுகிறோம் என்பதை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

  • நம் வாழ்க்கை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் நுகர்வு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சீனர்களின் பொறுப்பற்ற உணவுப் பழக்கத்தின் காரணமாகவே முழு விஷயமும் தொடங்கியது.

  • இறுதியாக இயற்கை அன்னையை மதிக்க வேண்டும் மற்றும் மறுசீரமைப்பு வேகத்தை விட மிக அதிகமான வேகத்தில் வளங்களை உட்கொள்வதன் மூலம் அவளை தொந்தரவு செய்யக்கூடாது.


  • நாம் இன்னும் நம் பாடங்களைக் கற்கவில்லை என்றால், இந்த வகையான தொற்றுநோய்களை அதிக அதிர்வெண்களில் மட்டுமே சந்திப்போம். அதற்கு முன் நம்மை தயார் செய்து கொள்வோம்.

    Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி