Home /News /special-articles /

பாடம்-18: மன்னிக்கப் பழகுவோம்

பாடம்-18: மன்னிக்கப் பழகுவோம்

மன்னிப்பு

மன்னிப்பு

அவரது பழங்குடி வாழ்க்கை வசதிகளுக்கு வெளியே உலகம் இனவெறி மற்றும் கடுமையான பாகுபாடுகளால் நிறைந்தது.

  • Last Updated :
இன்று நாம் பெரிதும் அறியாத ஒரு விஷயத்திற்குள் வருகிறோம். நமக்கானதல்ல ஆனால் உன்னத ஆத்மாக்கள், முனிவர்கள், பாதிரியார்கள் ஆகியோருக்கு மட்டுமே சொந்தமானது என்று நாம் கருதும் ஒரு பகுதி இது. இன்று மன்னித்தலை பற்றி பேசுவோம், அதைச் செய்வதன் மூலம், நாம் அனைவரும் அசாதாரணமானவர்களாக மாற முடியும். இந்த தொடரில் குழந்தையை பலமுறை மேற்கோள் காட்டியுள்ளோம், அதை மீண்டும் இன்று செய்வோம். ஒரு குழந்தைகளுக்கு அவர்களின் ஆரம்ப வளர்ச்சி கட்டத்தில் ஒருபோதும் எதிரிகள் இருப்பதில்லை. அவர்கள் சிரிக்கிறார்கள், சண்டையிடுகிறார்கள், எல்லாவற்றையும் மற்றொரு குழந்தையுடன் செய்கிறார்கள் மறுநாள் மீண்டும் அதே சுழற்சி தொடர்கிறது. அவர்கள் பெற்றோரிடமிருந்து கசப்புணர்வு மற்றும் ஒருவரை வித்தியாசமாக நடத்துவது பற்றி விரைவாகக் கற்றுக்கொண்டு, இதை தங்கள் வாழ்க்கையில் இணைக்க முயற்சிக்கிறார்கள். ஆறு அல்லது ஏழு வயதிற்குள், குழந்தைகளுக்கு எதிரிகளும் இருப்பார்கள், ஏனெனில் ஒரு ராமு சாக்லேட்டை சாப்பிடும்போது அக்குழந்தைக்கு சாக்லேட் கொடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லது ஒரு ஷீலா குழந்தையை கீழே தள்ளியிருக்கலாம். அவர்கள் ஒரு டீன் ஏஜ் மற்றும் வயது வந்தவரின் நிலைக்கு வளர்ந்து பின்னர் முழு மனிதனாக வளரும்போது, ​​எதிரிகளின் அலைநிலை வெவ்வேறு வண்ண நிழல்களுடன் அவர்களுடன் வளரும்.

நாம் சிலரோடு பேசாமல் இருப்போம் அதிகமாக இல்லாது, அடிப்படை மரியாதைகளுடன் ஒருவருடன் பேசுவோம், யாரோ ஒருவருடன் நாம் சிரிப்பத்தோடு நிறுத்திக் கொள்வோம், மற்ற நபர்களுடன் நாம் ஒரு சங்கடமான உறவோடு அவர்களுடன் கலந்துகொள்வோம். நம் கடந்தகால நடத்தைகள் நம்மை வழிகாட்ட அனுமதித்து, அதன் மூலம் மேற்கூறிய அனைத்து நபர்களுடனும் நம் எதிர்கால தொடர்பை வடிவமைக்கிறோம். ஒரே நிலைமை, கடந்த காலங்களில், இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட இரண்டு நபர்களால் காணப்பட்டது என்ற உண்மையை நாம் பாராட்டத் தவறிவிட்டு, நாம் வெறும் நம் சொந்த உணர்வால் இந்நிலைமையை எப்போதைக்கும் நீடிக்க அனுமதிக்கிறோம்.

மன்னித்தல்  என்பது பலவீனமானவர்களுக்கானது, எனக்கானது அல்ல என்று உங்கள் மனக் குதிரைகள் சொல்வதற்கு முன், ஒரு அசாதாரண மனிதனின் வாழ்க்கையை நாம் பார்ப்போம். தென்னாப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் ஒரு சக்திவாய்ந்த பழங்குடி குடும்பத்தில் 1918 இல் பிறந்த நெல்சன் மண்டேலா, வளர்ந்து வரும் போது, ​​மெதுவாக இந்த உலகின் சமமற்ற தன்மைக்கு வெளிப்படுத்தபட்டார். அவரது பழங்குடி வாழ்க்கை வசதிகளுக்கு வெளியே உலகம் இனவெறி மற்றும் கடுமையான பாகுபாடுகளால் நிறைந்தது. மெதுவாக அவர் மார்க்சியத்திலும் பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின்(ANC) சித்தாந்தத்திலும் ஈர்க்கப்பட்டார். ஜனநாயக எதிர்ப்பு வழிமுறைகள் செயல்படாத நிலையில், ஆளும் அரசாங்கத்தை கவிழ்க்க வன்முறை நடவடிக்கைகள் மற்றும் பொது சொத்துக்களை நாசமாக்குவதற்கு அவர் உதவினார். அரசாங்கம் அவர் உயிருக்கு பணயம் வைத்திருந்ததால், அவர் நேரத்தின் பெரும்பகுதியை தலைமறைவாக செலவிட்டார். இறுதியாக அவர் 1963 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு,  வழக்கு விசாரணைக்கு பிறகு  27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

அதுவரை, நெல்சன் மண்டேலா நம்மில் பெரும்பாலோரைப் போலவே இருந்தார். அவருக்கு கோபம், பழிவாங்குதல், தண்டனையிடுதல் என எல்லாவும் இருந்தது. அவர் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரு இடங்களில் அனுபவித்தாலும் , அதில் 18 ஆண்டுகள் ராபன் தீவில் கழிக்க வேண்டியிருந்தது. அங்குள்ள அவரது சிறை செல்லின் அளவு  2.4 மீட்டருக்கு 2.1 மீ காலை நீட்டுவதற்கு  கூட எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று நீங்களே அளவிட்டுப் பாருங்கள். அவர் ஒரு D தர  கைதியாக வகைப்படுத்தப்பட்டு மேலும் அவருக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு பார்வையாளர் என்றும் மற்றும் பெரிதும் தணிக்கை செய்யப்பட்ட கடிதத்திற்கு  அனுமதி வழங்கப்பட்டது.

அவர் சூரியக் கண்ணாடி இல்லாமல் சுரங்கத்தில் பணிபுரிந்தால், சூரியனின் வலுவான கதிர்கள் அவரது கண்களில் நேரடியாக விழுந்து அவர் கண் பார்வையை ஓரளவு இழந்தார். அவர் மனஉறுதியை உடைத்து அவரை வீழ்த்துவதற்காக பல மனித உரிமை மீறல்களின் மோசமான செயல்களுக்கும் அவர் உட்படுத்தப்பட்டார்.

இறுதியாக 27 ஆண்டுகள் கழித்த பின்னர், ஆளும் வெள்ளை அரசாங்கத்தின் மீது விழுந்த கடும் சர்வதேச அழுத்தம் காரணமாக 1990-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சுருக்கமாக சொன்னால், நெல்சன் மண்டேலா தனது 45 வயதில் சிறைக்குச் சென்று 72 வயதில் வெளியே வந்தார். தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும், அரசாங்க அமைப்பை பற்றி கசப்புணர்வு  இருப்பதற்கும், 27 ஆண்டு வாழ்க்கை இழப்புக்கும் சேர்த்து கோபப்படுவதற்கு அவருக்கு முழு உரிமையும் இருந்தது. ஆனால் 1990 ல் அவர் சிறையிலிருந்து வெளியேறியபோது, ​​அவர் ஒரு முழுதும் மாறிய மனிதராக வெளியே வந்தார். சிறைவாசம் காரணமாக அவருடைய  கொள்கைகள் இன்னும் வலுவடைந்த போதிலும், ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவித்த ஒவ்வொரு நபரையும் மன்னிக்கும் திறனை அவர் வளர்த்துக் கொண்டார். அரசாங்கம் விரும்பியதல்ல, இதைத்தான் சிறைத்தண்டனை அவருக்கு செய்தது.

அடுத்தடுத்த ஜனநாயகத் தேர்தல்களில் (1994-1999), அவர் தனது கட்சியை வெற்றிகரமான வெற்றியை நோக்கி வழிநடத்தி , ஒற்றுமையான அரசாங்கத்தை நடத்துவதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் தலைவராக ஆட்சி செய்தார். அவர் ஒரு உடைந்த தேசத்திற்கு அமைதியைக் கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக ஏற்பட்ட கொந்தளிப்பால் வடுக்களால் நிறைந்த அதன் ஆன்மாவை குணப்படுத்தினார்.

நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா மற்றும் பிற குறிப்பிடத்தக்க நபர்களின் கதை ஒன்றே ஒன்றுதான் - அவர்கள் வெறுப்புக்கு பதில் மன்னித்தலையும், விரக்திக்கு பதில் தங்கள் கடமையையும் வைக்கின்றனர். ஒருமுறை அவர்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து கசப்பை எடுத்ததும், அவர்களுக்கு உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் கூட, மற்ற நபரை மன்னிப்பதன் மூலம், அவர்கள் தங்கள் ‘உயிர் உணர்வை’ ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்துகிறார்கள். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வழிகளில் முழு வாழ்க்கையும் அவர்களுக்குத் திறந்து விட, அவர்கள் மனிதகுலத்திற்காக பல அதிசயங்களைச் செய்கின்றனர்.

மற்றவர்களை மன்னிப்பதற்கும், நம் கசப்புணர்விலிருந்து வெளியே வருவதற்கும், இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை - இன்று.நாம்  ஒருபோதும் தவறு செய்யவில்லை என்றும், நமக்கு அநீதி இழைத்தவர்கள்  மற்றவர்களே என்றும் நம் மனம் வாதிட்டாலும், நாம் அந்த "கசப்புடன்" வாழ்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. மன்னிப்பின் மந்திரத்தை வளர்த்துக் கொள்ளாததன் மூலம் நம் வாழ்க்கையை நாம் முழுமையாக ஆராய அனுமதிக்கவில்லை. நெல்சன் மண்டேலா தனது புத்தகத்தில், 'லாங் வாக் டு ஃப்ரீடம்'ல் அருமையாக நினைவு கூறுகிறார்  - 'எனது சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் வாயிலுக்கு (என் சிறைச்சாலையின்) கதவிலிருந்து வெளியே செல்லும்போது, ​​என் கசப்பையும் வெறுப்பையும் நான் பின்னால் விட்டுவிடவில்லை என்றால் நான் இன்னும் முழுமையான விடுதலை அடைந்திருக்கமாடேன் என்று எனக்குத் தெரியும்'. இந்த வார்த்தைகள் எவ்வளவு சக்திவாய்ந்தவை. அந்த ஒரு எண்ணத்தால், அவர் 27 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறைச்சாலையில் நுழைந்த பொழுதை விட உயரமாக வளர்ந்து விட்டார்.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள். உங்கள் தொலைபேசியை எடுத்து உங்களை காயப்படுத்தியதாக நினைக்கும் நபரை அழைக்கவும். இப்போதே அந்த அழைப்பை செய்யுங்கள். உங்கள் சொந்த மன சிறையில் சிக்கியிருப்பது நீங்கள் மட்டுமல்ல, அந்த நபரும் கூட. நாம் நமது மன்னிக்கும் செயலால் ஒரு விடுதலையை வழங்குவது நமக்கு மட்டுமல்லாமல், மற்ற நபருக்கும்தான். இந்த பூமியில் வாழும் குறைந்த நேரத்தில், ஏன் கசப்பு மற்றும் வெறுப்புடன் வாழ வேண்டும்? அதை மகிழ்ச்சியுடனும், தடையற்ற சுதந்திரத்துடனும் செலவிட்டு, ஒன்றாக நமது மனிதகுலத்திற்கான சாத்தியங்களை உயர்த்துவோம்.

Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி