பாடம் 17 | தன்னம்பிக்கை

"எல்லாவற்றையும் வென்றெடுக்கும் தன்னம்பிக்கையே, வரலாற்றின் கதைகளில், ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள்"

பாடம் 17 | தன்னம்பிக்கை
"எல்லாவற்றையும் வென்றெடுக்கும் தன்னம்பிக்கையே, வரலாற்றின் கதைகளில், ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள்"
  • News18
  • Last Updated: April 14, 2020, 1:44 PM IST
  • Share this:
என்னைப் பொறுத்தவரை தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்றாகும். ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால்  கூறப்பட்டது இந்த புகழ்பெற்ற மேற்கோள் - ‘அறிவை சார்ந்த மனிதன் தன்னை உலகிற்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறான்; அறிவை தாண்டுபவனோ உலகத்தை தனக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சிக்கிறான் . எனவே எல்லா முன்னேற்றமும் அறிவை தாண்டும் மனிதனைப் பொறுத்தது’. இங்கே அந்த அறிவை தாண்டும் மனிதனின் தன்னம்பிக்கை தான் உலகத்தை தனக்காக மாற்ற வைக்கிறது என்று நாம் அளவிட முடியும் .  எல்லாவற்றையும் வென்றெடுக்கும் தன்னம்பிக்கையே , வரலாற்றின் கதைகளில், ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள் . பூமி வட்டமானது, தட்டையானது அல்ல என்று முதலில் சொன்னவர், தொடர்ந்து அந்த உண்மையைச் சொன்னதால் , ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். அந்த தன்னம்பிக்கையே  மற்றவர்களை அச்சத்தியத்தைத் தொடர வழிவகுத்தது. மின்சாரம், தொலைபேசிகள் உள்ளிட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஒரே நாளில் நடக்கவில்லை. இது பல தோல்விகளில் ஆரம்பித்தாலும் அந்த  கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் தன்னம்பிக்கையை துணையாக கொண்டதால் மட்டுமே தொடர்ந்து பயணித்தனர்.

நாம் அனைவரும் எண்ணற்ற பாதுகாப்பு தரங்கள் கொண்ட  விமானத்தில் பறப்பதை இப்போது பெரிதாக எடுத்து கொள்வதில்லை . பூமியிலுள்ள எதையும் விட வேகமாக நகரும் இந்த பாக்கியம் நம் முன்னோர்களுக்கும் கிடைக்காதது . இந்த உலகில் வேகத்திலும் செயல்திறனிலும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கான முன்னேற்றம் சாத்தியமானதற்கு விமானம் ஒரு பெரிய காரணியாகும். தன்னம்பிக்கையின் மாயத்தை தெளிந்து அறிய, விமானங்கள், ரைட் சகோதரர்கள் மற்றும் அவர்களின் பறப்பதற்கான இறுதி முயற்சி ஆகியவற்றை பற்றி நான் விரிவாகக் கூறுகிறேன்.

1900 களின் முற்பகுதியில், உலகெங்கிலும் பலர் மனிதனை பறக்க வைப்பதற்கான புதிரைத் தீர்க்க தங்கள் உயிரைக் கொடுத்தனர். ஒரு பிரபல ஜெர்மன் விமானியான ஓட்டோ லிலியந்தால் துரதிர்ஷ்டவசமாக ஒரு கிளைடர் விபத்தில் இறக்கும் வரை அப்பந்தயத்தை முன்னின்று வழிநடத்தி வந்தார். ஹார்வர்டில்  படித்த உயர்நிலை கண்டுபிடிப்பாளரான சாமுவேல் பியர்போன்ட் லாங்லே இதை செய்து முடிப்பார் என்று அமெரிக்கர்கள் பெரிதும் நம்பினர் . பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிதி அவருக்கு அனுப்பப்பட்டு , செய்தித்தாள்கள் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்தின. இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்தபோது, வில்பர் மற்றும் ஆர்வில் ரைட் என்ற இரண்டு சகோதரர்கள்  ​​அமைதியாக காட்சிக்குள் நுழைந்தனர்  . கிராமப்புற இந்தியானாவில் பிறந்து ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு மட்டுமே சென்ற அவர்கள் ஒருபோதும் ஒரு கல்லூரிக்குச் சென்றதில்லை. 1892 ஆம் ஆண்டில் சைக்கிள் கடையைத் திறப்பதற்கு முன்பு அவர்கள் பல ஆண்டுகளாக ஒரு செய்தித்தாளை நடத்தி வந்தனர். அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. சரியான நபர்களைத் தெரியாத அவர்கள் மீது யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை.


ஆயினும்கூட, அவர்கள் 1897 இல் மனிதன்  பறப்பதற்கான சிக்கல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ​​அவர்களிடம் பணம் இல்லை . மனிதன் பறப்பது  சாத்தியம் என்று அவர்கள் நம்பிய அந்த தருணத்திலிருந்து, தாங்களே பரிசோதனை செய்யத் தொடங்கினர். பல தோல்விகளுடன், இயற்பியலின் விதிகளைப் புரிந்து கொள்ள முயற்சித்ததையும் பார்த்தால் (எந்தவொரு முறையான கற்றல் முறையுமின்றி தாங்களே படித்து), முதல் விமான பயணத்தை அவர்கள் சாதிப்பார்கள் என்பது கற்பனையில் கூட சாத்தியமில்லை. செயல்முறை விளக்கத்தின் போது உடைந்த கால், நான்கு உடைந்த விலா எலும்புகள் மற்றும் முதுகில் அடி என்று காயத்தினால் பாதிக்கப்பட்ட ஆர்வில் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் அனுமதிக்கப்பட்டு பின்னர்  வாழ்நாள் முழுவதும் செயலற்று போனார் . இறுதியாக, பல பின்னடைவுகள் மற்றும் ஆன்மாவை  நசுக்கிய தோல்விகள் இருந்தபோதிலும், டிசம்பர் 17, 1903 அன்று, மின்சக்தியால் இயக்கப்படும் முதல் இயல்பான , கட்டுப்படுத்தப்பட்ட விமானத்தை பறக்க விட்டு ரைட் சகோதரர்கள் வெற்றி பெற்றனர். வில்பர் தங்கள் விமானத்தை 59 வினாடிகள், 852 அடியில் பறக்கவிட்டு ஒரு அசாதாரண சாதனை படைத்தார் .

இந்த விமானம் மனிதர்களுக்கு ஒரு அசாதாரண சாதனையாக இருந்தது. இறுதியாக பறவைகளைப் போல பறக்க நாம் சொந்த சிறகுகளைக் கொண்டு விட்டோம். ரைட் சகோதரர்கள் வெற்றிபெற அவர்கள் மேல் பலர் பந்தயம் கட்டியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் பக்கத்தில் ஒரு அருவமான ஆதாரம் இருந்தது:  தன்னம்பிக்கை. இதன் மூலம் அவர்கள் அதை சாத்தியமாக்கினர்.

இந்த அடிப்படைக்கருத்து தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் வருவதையும் சிறிய கண்டுபிடிப்புகள் மற்றும் சில பெரிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பதையும் நாம் காண்கிறோம் . அவர்கள் அனைவருக்கும் தங்கள் சொந்த திறன்கள் மற்றும் உள்ளுணர்வில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் தங்கள் திறமையிலோ அல்லது கையில் உள்ள ஒரு பிரச்சினையிலோ  மிகவும் கடினமாக உழைத்தனர். நெருக்கடி நேரம் வந்ததும், அவர்கள் தங்களை நம்பினர். இதை ‘ஜல்லிக்கட்டில்’ அந்த வீரர் காளையை  தழுவ முயற்சிக்கும் தன்னம்பிக்கையில் காணலாம். முழு காட்சி அதன் கடுமையான மற்றும் காளையின் நீண்ட கொம்புகளால் அச்சுறுத்தலாகத் தெரிந்தாலும், வீரர் தன்னையும் அவரது திறமையையும் மட்டுமே பார்க்கிறார் . அண்மையில் இதேபோன்று இங்கிலாந்துக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு அசாதாரண விளையாட்டின் கதையைப் பார்க்க முடிகிறது. அதன் மயிர் கூச்செறியும் முடிவு , பல தனிநபர்களின் தன்னம்பிக்கையின் கதையாக இருந்தது. சூப்பர் ஓவரில் கடைசி பந்து வரை, பேட்ஸ்மேன் அந்த கூடுதல் ஓட்டத்தை முயற்சிக்கிறார் (ஆடுகளத்தை கடந்துவிடுவதற்கான தன்னம்பிக்கையுடன்) ஆனால் விக்கெட் கீப்பரோ  அவரை run out செய்ய நினைக்கிறார்  (இந்த அழுத்தமான நேரத்திலும் பந்தை நேர்த்தியாக சேகரிக்க மற்றும் தன்னம்பிக்கையுடன் அவரை run out செய்ய). அசாதாரண தன்னம்பிக்கையை  கொண்ட வீரர்கள் சேர்ந்து வரும்போது சாத்தியக்கூறுகள் மாறுகின்றன , உயர்த்தப்படுகின்றன.நமக்கான பாடங்கள்

நமக்காகவும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்காகவும் நாம் பெறக்கூடிய படிப்பினை, நம்மை முழுமையாக நம்பி, நம்முடைய பலத்தைப் பார்ப்பது. தன்னம்பிக்கை நம் பலவீனத்தின் மீது அல்ல, நம் பலத்தில் விளையாடும்போதுதான் வெளிப்படும். நாம் நம் குழந்தைகளின் பலவீனத்தில் அதிக கவனம் செலுத்தும்படி செய்து , அதை மேம்படுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில், அவர்களின் பலங்களில் குறைந்த கவனம் செலுத்துவதால் அவர்கள் அசாதாரண வீரராக அல்லாமல் சராசரி வீரராக மாறுகிறார்கள். ராகுல் டிராவிட் போன்ற ஒரு வீரரை தன்னம்பிக்கை அமைப்பு அசாதாரணமாக்குகிறது. விராட் கோஹ்லி தனது ஃபிளிக் ஷாட்டை தன்னம்பிக்கையினாலேயே மிகவும் உறுதியாக நம்புகிறார் (அவர் தனது ஃபிளிக் ஷாட்டை தவறவிட்டால், அவருக்கு எல்.பி.டபிள்யூ வழங்கப்படுவதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது ). ஒரு பராக் ஒபாமா அல்லது நரேந்திர மோடியின் சொற்பொழிவு திறன்  ; ஒரு மகாத்மா காந்தியின் நெஞ்சுறுதி , நெல்சன் மண்டேலாவின் விடாமுயற்சி, ரஃபேல் நடாலின் கவனம் அல்லது அபிநவ் பிந்த்ராவின் இடைவிடாத கவனம் என்று ஏதோ ஒன்றை கொண்டு பெரிய சாதனையாளர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள் . இது அவர்களின் பலமாகிறது மற்றும் இதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், அவர்கள் அசாதாரணமானவர்களாகி விடுகிறார்கள். அது மட்டுமல்ல ,  அவர்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு தன்னியல்பாகி எல்லாவற்றையும்  இயக்க வைக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பலங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த தன்னபிக்கையை நாம்  உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பலங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கும்போது சிறப்பானது நிகழ்கிறது. தன்னம்பிக்கை இருந்தால் , வானமே எல்லை!
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading