Home /News /special-articles /

பாடம்-16: இயற்கை நுண்ணறிவுக்குள் நுழைவோம்

பாடம்-16: இயற்கை நுண்ணறிவுக்குள் நுழைவோம்

நுண்ணறிவு என்பது அறிவையும் திறமையையும் பெற்று, அதை பயன்படுத்துவதற்கான திறன். நமது முன்னேற்றத்திற்கான முக்கிய வேறுபாடாகும். அதுவே நம்மை மனிதர்களாக ஆக்குகிறது. ஒரு கால கட்டத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு மேலாக) உருவான இந்த இயற்கை நுண்ணறிவு நம்மை இங்கு கொண்டு வந்துள்ளது. வேட்டையாடும் தலைமுறையாக (நம் மூதாதையர்களால்) தொடங்கிய நாம் படிப்படியாக உலகைக் கைப்பற்றி, இப்போது ஒரு மனிதனை நிலவில் தரையிறக்குவது மற்றும் செவ்வாய் கிரகத்தில்  குடியேற்றுவதற்கு நம்மால் முடிந்தவரை முயற்சிப்பது போன்ற சில அற்புதமான காரியங்களைச் செய்கிறோம்.

இவற்றில் பெரும்பாலானவை பரிணாம வளர்ச்சியின் மூலம் சாத்தியமானது (சார்லஸ் டார்வின் சொன்னபடி) மற்றும் அதன் இயல்பாக பரிணாமம் வளர்ச்சி அடைந்து வந்தால் மட்டுமே அதைத நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஏனைய புதிய சொற்களைப் பற்றி சமீபகாலகங்களில் கேட்கிறோம். இயந்திரம், நரம்பியல் மற்றும் ஆழமான கற்றல் போன்ற விஷயங்கள் எதிர்காலத்திற்கான பாடங்களாக மாறி வருவதுடன் உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறன. இந்த மிகப்பெரிய கணினி சக்திகள் நம் வாழ்க்கையை பெருமளவில் மாற்றி வருவதால் இவை நம்மை ஆச்சரியப்படுத்துவது மிகையன்று.

முதன்முறையாக, நம் மரபணுக்களை குறிவிளக்கம் செய்ய முடிகிறது. புதிய மருந்து கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் அடைய முடிகிறது. நமது சமூகத்திற்கான சிக்கலான மனித பிரச்சினைகளை தீர்க்க முடிகிறது. இனி ஒரு காரை ஓட்ட வேண்டிய அவசியமில்லாதது. வீட்டில் மின் விளக்கை அணைக்கத் தேவையில்லாமால்,  வீட்டிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் குரல் கட்டளையில் இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எளிய சுகங்கள் நமக்கு முக்கியமானவையாகிவிட்டன. ஏனென்றால், இந்த சௌகரியங்களினால் நாம் வசதிகளை பெற்று, இவ்வனைத்தினால் நம் வாழ்க்கையை எளிமையாக்கி கொண்டுள்ளோம்.

இப்போது, நாம் அதன் மறுபக்கத்தையும் பார்ப்போம். நிச்சயமாக 10 இலக்க மொபைல் எண்களில் எதையும் நினைவில் கொள்ள முடியாது. பெயர்களை கூட நினைவில் வைத்துக் கொள்ள நாம்  போராடுகிறோம். உங்களுக்கு நெருக்கமான நபர்கள் ஐந்து பேரின் மொபைல் தொலைபேசி எண்களை நினைவில் வைக்க முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நினைவில் அது இருப்பதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

உங்களுடைய  இதே மனம் ஒரு சிரமமின்றி சிறிது காலம் முன்புவரை எண்களை எளிதாக நினைவில் வைத்திருந்ததை நீங்கள் நினைத்து உங்களையே நிந்தித்து கொள்வீர்கள். ஒரு இடத்திற்கு செல்ல யாராவது உங்களிடம் ஒரு திசையைக் கேட்கும்போது கூட, பழைய நாட்களில், அத்திசையை சொல்ல நீங்கள் பயன்படுத்திய வழி, வீடுகளின் நிறம் மற்றும் அந்த இடத்தைச் சுற்றியுள்ள அறிகுறிகள் என எல்லாவற்றையும் நீங்கள் நினைத்து பாருங்கள். ஆனால் இப்போது நாம் உடனடியாக ஒரு ஆன்லைன் வரைபடத்தை நாடுகிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் நினைவூட்டுவதற்கு நமக்கு பணி தாள்கள் தேவையாகிவிட்டன. தொழில்நுட்பத்தால் அமைக்கப்படுவதால் நம் வாழ்க்கையை இயக்கும் கால அட்டவணைகள் மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆபத்துக்களைப் பற்றி அதிகம் யோசிக்காமல், மெதுவாகவும், சீராகவும் நாம் பெரிய வலையில் சிக்கிக் கொள்கிறோம்.

​​நம்முடைய தற்போதைய தலைமுறை நமக்கு முன்னால் இருந்தவர்களைவிட கணினி சக்தியைப் சார்ந்தும், முன் எப்பொழுதும் இல்லாத அளவில் AI மற்றும் பிற ரிமோட் கண்ட்ரோல்களுக்கு நம் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

AI என்பது நம் வாழ்விற்கு மிகவும் தேவை என்பதில் ஐயமில்லை.  ஒருவேளை, நமது மனித நேயத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இது தேவையாக இருக்கலாம். விரைவான கற்றலின்றி இது வேறில்லை. ஆனால் அதே நேரத்தில், தொழில்நுட்பத்தை நம் வாழ்க்கையினுள் முழுவதுமாக அனுமதிப்பதற்கு பதிலாக, அதை எங்கு அனுமதிக்க வேண்டும், எங்கு குறைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சில, நம் வாழ்க்கையை உண்மையில் அனுதினமும் கட்டுப்படுத்துகின்றன.

அவர்கள் நம் வீடுகளை அறிவார்கள் (செல்போனின் நிலையான சமிக்ஞையின் அடிப்படையில்), நம் தினசரி நடைமுறைகளை அவர்கள் அறிவார்கள் (நம் பணியிடங்கள், நேரம், உணவுப் பழக்கம்) மற்றும் ஒரு நிறுவனத்தின் சார்பாக நமக்கு ஒரு செய்தியை எப்போது சந்தைப்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் நம் தொலைபேசியுள்  உட்புக அனுமதிப்பதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு நம் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள நாம் அனுமதித்திருக்கிறோம். மற்ற கூடுதல் சிக்கல் என்னவென்றால், நாம்  சில நிறுவனங்களுக்கு (அதன் நாட்காட்டிகள், குறிப்புகள், வரைபடங்கள், ஜி.பி.எஸ் போன்றவை) சார்ந்திருப்பதை அதிகரித்துள்ளோம். இதனால், நமது மூளை தானியங்கி தன்மையில் செலுத்தப்படுவதால் , நுட்ப சிந்தனை திறனை அது இழக்க நேரிடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆழ்ந்த நுட்ப சிந்தனையின் பற்றாக்குறை நம்மை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் புண்படுத்துவதால் , நம் வாழ்க்கையின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்படும்  . நாம் ‘இயற்கை நுண்ணறிவை’ அடமானம் வைப்பதன் மூலம் இந்த "சார்பு நோய்க்குறிக்கு" வந்தவுடன், "Minority Report " அல்லது "I Robot" போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு உலகத்திற்கு நாம் வரலாம். இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் - நமது இயல்பான நுண்ணறிவை உடனடியாகவும் மற்றும் முன்னுரிமையாகவும் மீண்டும் பெற முடியுமா?

அதை பெறுவது எப்படி?:

இயற்கையான நுண்ணறிவுக்குள் நுழைவது என்பது நமது பொது அறிவை மீண்டும் பெறுவதுதான். நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களையும்  நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் கவனம் செலுத்துவதற்கான எளிய திறன் இது. அதைச் செய்ய நாம் நமக்கு சவால் இட ஆரம்பிக்க வேண்டும். நம் டயல் பேடில் நேரடியாக எண்ணை டயல் செய்வதன் மூலம் நம் வாழ்வின் முதல் 20 முக்கியமான நபர்களின் தொடர்பு எண்களை நினைவுபடுத்துவதில் ஒரு சவால் இருக்கலாம். நிச்சயமாக, நாம் அவர்களின் எண்ணை சேமிக்கலாம், ஆனால் தேவைப்படும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும் . இந்த எண்களை நாம் வெற்றி கொண்ட பிறகு, நம் நோக்கத்தை விரிவாக்கலாம். ஒரு நகரத்தின் திசைகளை அறிவதற்கும் இதே முயற்சி தேவை. கூகிள் வரைபடங்களை அவ்வப்பொழுது அணைத்துவிட்டு செல்லவும் நாம் பழகி கொள்ள வேண்டும். நில அடையாளங்கள், சாலையில் உள்ள சிறிய வேறுபாடுகள் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ளத் தொடங்கி , தேவைப்படும்போது அதை நினைவுபடுத்த மனதில் சவால் விட வேண்டும். எங்காவது அவசரமாக செல்ல வேண்டாத போது இதைச் செய்யலாம். நீங்கள் உங்களுக்கு சவால் இடும் நாளில் சில நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கவும்.

வீட்டில் , ஒரு அறையின் சுவிட்சுகள், remote'ல் உள்ள சேனல் எண்கள் (10 இல் தொடங்கி நாம் முன்னேறலாம்), ஒரு காலெண்டர் அல்லது செல்போனில் உள்ள குறிப்புகளோ இல்லாது அடுத்த நாள் செய்ய வேண்டிய விஷயங்களை நினைவுகூரும் திறன் போன்ற எளிய விஷயங்களைச் செய்ய ஆரம்பிக்கலாம்.  நாங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் பெயர்களை நினைவில் கொள்வது. இது மிகவும் சவாலானது, ஆனால் முற்போக்கான சிரமத்துடன் நாம் அங்கு செல்ல வேண்டும். இது ஒரு மனப் பயிற்சியாகவும், பிளாஸ்டிசிட்டி மற்றும் புதிய நரம்பியல் இணைப்புகளை வளர்ப்பதாலும், அல்சைமர்ஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். வல்லுநர்கள் சொல்வது போல் எளிமையான மற்றும் எளிதான சிகிச்சை என்னவென்றால், நம் மூளைக்கு தொடர்ந்து சவால் விடுவதும், அதன் புதிய நரம்பியல் வலைப்பின்னல்களை உருவாக்குவதுமே  ஆகும். 65 வயதிற்கு மேற்பட்ட 3 ல் ஒருவர் இன்றைய நிலவரப்படி அவதிப்படுகிறார்கள் என்றும் நமது இயற்கை நுண்ணறிவைக் திரும்பி பெறுவதை விட அதை எதிர்த்துப் போராடுவதற்கான வேறு சிறந்த வழி இல்லை என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி