Home » News » Special-articles » IPS OFFICER WRITING ABOUT 21 DAYS LOCK DOWN LESSON 11 SKD

பாடம்-11: உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி?

பாடம்-11: உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி?
மூச்சுக்குழாய் பிரச்சனைகள் : அதிகப்படியான உடற்பயிற்சிகள் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் உங்களின் சுவாசக்குழாய் பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மூச்சுத்திணறல், சோர்வு, தொடர் இருமல் ஆகியவை ஓட்டப் பயிற்சியின்போது ஏற்பட்டால் சுவாசக் குழாயில் பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறியாகும். இதனால், இத்தகைய அறிகுறிகள் உடையவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவைமட்டுமல்லாது, ஓட்டப்பந்தய வீரர்கள் dyspnoea மற்றும் சுவாச இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மேலும், இரும்புச்சத்து குறைபாடு, தசை பலமிழப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதால் அதிகமான ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
  • Share this:
தொற்றுநோய்களின் இந்த காலங்களில் அதிகமாக  பேசப்படும் ஒரு தலைப்பைத் தொடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை , நாம்  ஒருபோதும் ‘தேக ஆரோக்கியம்’ பற்றி அதிகம் நினைக்கவில்லை . நல்ல தேக ஆரோக்கியம் இருக்க யாரும் எதுவும் சிறப்பாக செய்யவில்லை. என்ன சாப்பிட வேண்டும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. மக்கள் சாதாரணமாக சாப்பிட்டார்கள், சாதாரணமாக வாழ்ந்தார்கள், அதன் மூலம் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் உடற்தகுதியுடன் வாழ்வதற்கான கட்டமைப்பு இருந்தது. 5 கி.மீ வரையிலான தூரம் கூட மிகவும் சாதாரணமாக கருதப்பட்டு ஒரு வேலைக்கு நடப்பது போன்ற பழக்கவழக்கங்களால் அவர்களுக்கு போதுமான உடற்பயிற்சி இருந்தது. உழைப்பின் பெரும்பகுதி உடல்சார்ந்த இயல்புடையதுதாகவும் மற்றும் junk உணவுகள் அல்லது அதிக கலோரியுடைய உணவுகள் என்ற பழக்கம் இல்லை. தாங்கள் சாப்பிட்டதை முழுமையாக ஜீரணித்த அவர்கள் உண்ட பெரும்பாலானவை சத்தான உணவுகளே.

தேக ஆரோக்கியத்திற்கான அகராதி அர்த்தம், உடல் ரீதியாக வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே. சுலபமாக சொன்னால், மக்கள் தங்கள் சாதாரண செயல்பாடுகளை மிகவும் திறம்பட செய்ய முடியுமா என்பது இதன் பொருள். இதை சற்றே நாம் நுட்பமாக பார்த்தால், மக்கள் தங்கள் நூற்றாண்டு வயதைத் தாண்டினாலும் சொந்த செயல்பாடுகளைச் தங்களே செய்ய முடியுமா என்பதும் இதன் பொருள்.

அதே நேரத்தில் பலர் நீண்ட ஆயுட்காலத்தை உடற்திறனுடன் குழப்பிகொள்கிறார்கள். முந்தைய தலைமுறையை விட நீண்ட ஆயுட்காலம் வாழ்கிறோம் என்பது சரியான உண்மை. சராசரிக்கு  அதிகமாக இருந்தாலும், நம்மில் பலரால்  85+ ஆண்டுகளின் மேல் சதமானத்தை அடைய முடியவில்லை. நவீன மருந்துகளின் அற்புதம் இதில் ஒரு பெரிய அதிசயத்தை செய்துள்ளது என்பதை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இதய நோய்கள், பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை போன்ற (ஒரு கட்டத்தில்) பெரிய இனப்படுகொலைக்கு ஒத்ததாக மக்களைக் கொன்ற நோய்கள், கணிசமான அளவிற்கு கட்டுப்படுத்தபட்டு உள்ளன.


உணவின் பற்றாக்குறையால் இறப்பதை விட அதிகமான மக்கள் அதிக உணவை சாப்பிடுவதால் (உடல் பருமன் முக்கிய காரணம்) இறக்கும் ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் இதற்காக ‘தேக ஆரோக்கியம்’ என்ற தலைப்பிலிருந்து நம்மை விலக்கக் கூடாது. முந்தையவர்களுடன் ஒப்பிடும்போது இந்த தலைமுறை நிச்சயமாக அவர்களின் ‘உடற்திறனை’ இழந்துவிட்டது. நாம் 60 வயதை அடைந்த பிறகு மிகவும் முடங்கிக் கிடக்கிறோம். நம்முடைய ஓய்வில்லாத வாழ்வின் போது நமக்கு வரும் பல நோய்களின் எண்ணிக்கையால் நமது இயக்கம் கடுமையாக தடைபட்டுள்ளது. நாம் நீண்ட காலம் வாழலாம் என்றாலும், நீண்ட காலம் சௌகரியமாக வாழ மாட்டோம். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் .

உடற்பயிற்சி கலாச்சாரத்தை எவ்வாறு கொண்டு வருவது?

உடற்தகுதி பற்றி நாம் நினைக்கும் தருணத்தில், உடனடியாக நம் மனதில் என்ன தோன்றுகிறது? வண்ணமயமான உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அதற்கான விலையுயர்ந்த உறுப்புரிமை, 6 pack உள்ளவர்கள் மற்றும் இந்தத் தொழிலை ஊக்குவிக்கும் நடிகர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் பருவங்களுடன் மாறுபடும் அந்தந்த காலத்திற்கான உணவுகளும் மற்றும் பொருத்தமற்றதாக சில நேரங்களில் நாம் பெறும் செயற்கையான ஆலோசனைகளுமே பெரும்பாலும் நம் மனதிற்கு வரும். மேற்கூறிய எதுவும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. காரணம் இவை அனைத்தும் சிறு பகுதிகளாக நன்றாக இருந்தாலும், நம்முடைய சாதாரண வாழ்க்கை முறையில் இவற்றை மொத்தமாக பின்பற்ற முடியாது. இதில் வேடிக்கையான பகுதி என்னவென்றால், நாம் உடற்பயிற்சி செய்ய முழுதும் குளிரூட்டப்பட்ட ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு ஒரு லிப்ட் எடுத்துச் செல்கிறோம். அங்கு நாம் எரிக்கும் அனைத்து கலோரிகளும் (சராசரியாக 800 கலோரி என்று வைத்துக்கொள்வோம்) இரண்டு காஃபி மற்றும் ஒரு நல்ல சிற்றுண்டியினால் திரும்பி வரலாம். பழச்சாறுகளும், நாம் குடிக்கும் அனைத்தும் பெரும்பாலும் நம் உடல் ஒருபோதும் கேட்டிராத நம் தாயகம்சாராத பழங்களாகும்.உடற்தகுதியைக் கொண்டுவருவதற்கான கலாச்சாரத்தின் நோக்கம், எப்போதும் நம்முடன் இருக்கும் நல்ல பழக்கங்களை உருவாக்குவதே.

அடிப்படை:

உடற்பயிற்சி கலாச்சாரத்தை உருவாக்கும் பயணத்தின் முதல் படி, நம் வாழ்க்கையை வாழும்முறையை முழுமையாகப் பார்ப்பது. எல்லா இடங்களிலும் வாகனம் ஓட்டுவது, அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஒரு லிப்ட் பயன்படுத்துதல், வீடுகளை விட்டு அடிக்கடி வெளியே சாப்பிடுதல், நூடுல்ஸ், வறுத்த பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் பிற தாயகம்சாராத பொருட்கள் போன்ற அதிக கலோரி உணவுகளை உட்கொள்வது போன்றவை தேவையற்ற பழக்கவழக்கங்கள் என உணர வேண்டும். இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும், சபலத்தை விரட்ட வேண்டும். இயற்கையாக இருக்கும் இந்த தன்மையே நமது உடற்பயிற்சி கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். நம் உடலில் உள்ள எந்த கூடுதல் கொழுப்பும் நாம் நம்மை விரும்பும்படியாக இருக்க அனுமதிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள ஒரு கிராம் கொழுப்பு ஒன்பது கலோரிகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு கிராம் புரதம் அல்லது கார்போஹைட்ரேட் நான்கு கலோரிகளைக் கொண்டுள்ளது. இதை எளிமையாக விளக்க, அதே அளவு கலோரிகளுக்கு கொழுப்பை விட இரு மடங்கு கார்போஹைட்ரேட் அல்லது புரதத்தை நாம் சாப்பிடலாம். இது மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வேறுபாடு ஆகும். நம்மால் நன்றாக சாப்பிட முடிந்தால் (நாம் சாதாரணமாக சாப்பிடுவதை சாப்பிட்டால், இறுதியில் நம் உடல் தனக்கு என்ன வேண்டுமோ அதை  கேட்கும்); நம்மால் முடிந்த போதெல்லாம் நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏற முடிந்தால், நாம் நம் இயல்பான வாழ்க்கை முறையை வாழ்ந்ததாக ஆகும். இதை நாம் அன்றாட பழக்கமாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு எளிய தீர்மானமாக ஏற்கலாம் - அலுவலகத்திலும் வீட்டிலும் லிப்ட் வேண்டாம் என்று சொல்வது, மளிகை சாமான்கள் மற்றும் பால் வாங்க நடந்தே செல்வது, 2 கி.மீ.க்கு கீழே எந்த தூரமும் நடந்தே செல்வது (ஒரு தொடக்கத்திற்கு).

அடிப்படை கட்டப்பட்டவுடன் மற்ற பழக்கங்களை வெற்றிகரமாக அதன்மேல் உருவாக்க முடியும். அந்த வரிசையில் உள்ள மற்ற பழக்கங்கள்:

  1. ஒரு நல்ல தூக்க வழக்கம் - நவீன ஆய்வுகள் நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கான வரையீடு என்று கூறுகின்றன. இரவு 10 மணியளவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் உடலுக்கு 7 முதல் 8 மணிநேர தூக்கத்தை கொடுங்கள். நமது நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலானவை நல்ல தூக்கத்திலிருந்து வருகிறது. அப்பொழுதான் நம் உடலுக்கான மறுஊட்டம் தினசரி அடிப்படையில் நிகழும்.

  2. ஒரு நல்ல தியான பயிற்சி - நாம் தியானம் செய்யும் பழக்கம் இல்லாவிட்டால், இதை நம் அன்றாட வாழ்க்கையில் கொண்டுணர வேண்டும். 10 நிமிடங்களுடன் தொடங்க, நாம் அடையக்கூடிய உயரங்களைக் கண்டு ஆச்சரியப்படுவோம். மிகச்சிறிய காலத்திலேயே நாம் 30+ நிமிடங்களுக்கு சிரமமில்லாத தியானத்தை எட்டுவோம். இது ஒரு தூக்கம் போன்றே நம்மை சமநிலையில் வைத்திருக்கமிக முக்கியமானது.

  3. யோகா / நடை / ஓட்டம் / ஜிம்: இந்த பழக்கங்கள் அடிப்படை நடைமுறை கட்டமைப்புக்கு மேலே உள்ளன. இவை அனைத்தும் 45 நிமிடங்கள் நடப்பது, 30 நிமிடங்கள் ஓடுவது போன்ற வேண்டுமென்றே செய்கின்ற நடைமுறைகள். நமக்கு இன்னும் வயதாகும்போது, ​​நம் எலும்பு தசை திறனை மீண்டும் கட்டியெழுப்ப ஜிம்மின் ஒரு அமர்வு அறிவுறுத்தப்படுகிறது (நமக்கு வயதாகும்போது, ​​அதை இழந்து விடுகிறோம்). யோகாவை நம் வாழ்க்கை முறையில் ஒரு ஆசனமாகவோ அல்லது ஒரு கிரியாவாகவோ சேர்த்துக்கொள்ள முடியுமானால் பல அற்புதங்களை அது செய்யும்.


நம் வாழ்க்கை முறைகளை சிறிது மாற்றியமைப்பதன் மூலம் உடற்தகுதிக்கான கலாச்சாரத்தை பொருத்தமாக உருவாக்குவது நம் கையில் உள்ளது. அந்த நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் கட்டியெழுப்புவதன் மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

நாளை மன  ஆரோக்கியம்  பற்றிப் பேசுவோம்.

Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading