Home /News /special-articles /

பாடம்15 | நடைமுறை ஒழுங்கு

பாடம்15 | நடைமுறை ஒழுங்கு

"உங்களுக்குத் மாற்றம் தேவை என்று நீங்கள் நம்பினால், உலகளாவிய சில சிறந்த நடைமுறைகளை நாம் பார்க்கலாம் . அவற்றில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்று, நம் வாழ்விற்குப் பயன்படுத்தி தெளிவை அடையலாம்"

"உங்களுக்குத் மாற்றம் தேவை என்று நீங்கள் நம்பினால், உலகளாவிய சில சிறந்த நடைமுறைகளை நாம் பார்க்கலாம் . அவற்றில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்று, நம் வாழ்விற்குப் பயன்படுத்தி தெளிவை அடையலாம்"

"உங்களுக்குத் மாற்றம் தேவை என்று நீங்கள் நம்பினால், உலகளாவிய சில சிறந்த நடைமுறைகளை நாம் பார்க்கலாம் . அவற்றில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்று, நம் வாழ்விற்குப் பயன்படுத்தி தெளிவை அடையலாம்"

உங்கள் வீட்டைச் சுற்றிப் பாருங்கள். நான்தான்  இதை தினமும் பார்க்கிறேனே , எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறேனே என்று நீங்கள் உங்களுக்கே சொல்லி கொள்ளலாம். எந்த பொருளும் எங்குள்ளது என்று உங்களுக்குத் தெரியும். நான் உங்களிடம் ‘பார்க்க’ சொல்லவில்லை, கவனமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்க  வேண்டும் என்று சொன்னேன்.

உங்கள் அறைக்கலன்கள், உங்கள் உடைகள், உங்கள் புத்தகங்கள், திறக்கப்படாத பரிசுகள், ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்கள், சமையலறைகளில் உள்ள பாத்திரங்கள், சேர்த்து வைக்கப்பட்ட காலணிகள் மற்றும் செருப்புகள் , எங்காவது கிடக்கும் பழைய செய்தித்தாள்கள், இறுதியாக நாமோ மற்ற யாரோ அதை மீண்டும் பார்க்கக்கூடாது என்பதற்காக நம் கட்டிலின் கீழேயோ , பரணிலோ வசதியாக தள்ளப்பட்ட தேவையற்ற விஷயங்களைப் பாருங்கள் .

இப்போது, ​​நீங்களே உங்களை கேட்கவேண்டியது , அதில் பாதியை நான் அகற்றினால், என் வாழ்க்கை எந்த வகையிலும் மாறும். உங்கள் வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படுமா? நீங்கள் வளங்கள் குறைந்து  இருப்பீர்களா? சிந்திக்க ஓரிரு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போதே பதிலளிக்க வேண்டியதில்லை .

பெரும்பாலும் உங்கள் பதில் இதுவாக இருக்கும் - நிச்சயமாக இல்லை. எனது தற்போதைய வாழ்க்கைக்கு இதனால் ஒரு வித்தியாசம் இருக்காது.

இப்போது, ​​நம் வாழ்க்கையை விமர்சன ரீதியாக ஆராய்ந்தால், நாம் தெளிவாக சுட்டிக்காட்டக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், நம் மனதில் ஏற்படும் குழப்பத்திற்கும் நம் வீட்டிலுள்ள ஒழுங்கீனத்திற்கும்  நேரடி தொடர்பு உள்ளது. பொதுவாக கையில் இருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தாமல், அடுத்த கிடைக்கக்கூடிய வாய்ப்பில் நம் மனம் குதிக்கிறது.

பல சமயங்களில், நம் மூளைக்கு அதிகமாக சுமை ஏற்றப்பட்டதாகவும், தேய்ந்ததாகவும் உணர்கிறோம். இப்போது இதை நம் வீட்டிலுள்ள நிலைமைகளுக்கு பொருத்தி பார்த்தால் , நம்முடைய ஒழுங்கீனம் அங்கிருந்து தொடங்கியது என்பதை நாம் தெளிவாகக் காணலாம். நம் ஆடைகளை கணக்கிட தொடங்கினால் , நம்முடைய உடைகள் அதிகமாக இருப்பதையும் , மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதைக் குவித்துள்ளோம் என்பதையும் உணரலாம் .

தினசரி காலை, நம் ஆடையைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலை. எதை அணிய வேண்டும் என்று அந்த முடிவை எடுக்க நாம் போராடுகிறோம். ஆணுக்கு , சட்டை மற்றும் பேன்ட் மற்றும் பெண்ணுக்கு சேலை & அதனுடன் பொருந்தக்கூடிய ரவிக்கை அல்லது சல்வார் கமீஸ் தேர்ந்தெடுப்பதே ஒரு வேலை . நம் அலமாரிகளில் உருவாக ஆரம்பிக்கும் இந்த நிச்சயமற்ற தன்மை நாள் முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது.

டி.வி.யில் நிகழ்ச்சி தேர்வு, உணவுத் தேர்வுகள், திரைப்படத் தேர்வு என இவை மீண்டும் மீண்டும் வரும் முறையை நீங்கள் காணலாம். இது பெரிய அளவில் நம் தொழில் தேர்வையும் பாதிப்பதோடல்லாமல் , மேலும் சில ஆயிரம் ரூபாய் அதிகரிப்புக்காக நம் தொழில் தேர்வையும் செய்ய நம்மை தயார் செய்திருக்கிறது . அதனால்தான் பிரபலமான பழமொழி இப்படி சொல்கிறது  - நீங்கள்  ஒன்றை எப்படிச் செய்வீர்களோ , அப்படியேதான் எதையும் செய்வீர்கள் !

உங்களுக்குத் மாற்றம் தேவை என்று நீங்கள் நம்பினால், உலகளாவிய சில சிறந்த நடைமுறைகளை நாம் பார்க்கலாம் . அவற்றில் இருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்று , நம் வாழ்விற்குப் பயன்படுத்தி தெளிவை அடையலாம்.

வழக்கங்களுடன் தொடங்குங்கள்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ்'ஐ நாம் கவனமாகக் கவனித்திருந்தால், அவர் தினமும் அணிந்திருந்த நீல நிற டெனிம்களும் கருப்பு ஸ்வெட்டர்களையும் நாம் கவனித்திருக்கலாம். பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிடமும் இதே பழக்கம் காணப்படுகிறது. அவர் ஒரு சாம்பல் நிற டீ-சர்ட்டை தினமும் அணிகிறார்.

நம் முந்தைய நிதியமைச்சர் டாக்டர் மன் மோகன் சிங், நீல நிற தலைப்பாகையுடன் , பராக் ஒபாமா - பழுப்பு அல்லது கருப்பு சூட் என்று தற்போதைய உலகத் தலைவர்கள் சிலரும் தினமும் இது போன்றே ஒரே மாதிரியான உடை அணிவதை  நாம் காணலாம். அவர்கள் அதை ஏன் செய்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் தங்கள் நாளின் முதல் முடிவை வென்று அதை தங்களுக்கு ஒரு அனுகூலமாக மாற்ற விரும்புகிறார்கள். காலையில் என்ன அணிய வேண்டும் என்ற முடிவு தன்னியக்கதில் இருந்தால், முக்கியமான முடிவுகளை எடுக்க நம் மன அலைவரிசையை குவியப்படுத்த முடியும்.

உணவுத் தேர்வுகளுக்கும் இதே விஷயத்தை நீட்டிக்க முடியும். எதை சமைக்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்று தினமும் சண்டையிடுவதற்கு பதிலாக நாம் இதை செய்யலாம் . சலிப்பை அடைந்தாலும் கூட, ஒரு பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், நம் வாழ்க்கையின் மற்ற துறைகளில் அற்புதங்களை உருவாக்க முடியும். நம் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பொருட்களை குவித்துள்ளோம்? இதற்கு சரியான அல்லது தவறான பதில் ஒன்றும் இல்லை - நாம் எளிமையிலிருந்து விலகிவிட்டோம் என்பது ஒரு சாத்தியமான காரணம். நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடனும் நாம் இணங்கி வாழ்கிறோம் . அதிகமான விஷயங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்று நாம் நம்புகிறோம்.

இந்த தவறான நம்பிக்கையை உடைக்க, ஒரு புகழ்பெற்ற நபரின் வாழ்க்கையைப் படிப்போம்.  “வாரன் பஃபெட்டாக ஆவது" என்ற ஒரு HBO ஆவணப்படத்தில், வாரன் பஃபெட் மற்றும் இயக்குனருக்கு இடையே இந்த அருமையான உரையாடல் இது.

"நான் காலையில் முகச்சவரம் செய்யும்போது என் மனைவியிடம்  ​​'ஒன்று $ 2.61, $ 2.95 அல்லது $ 3.17' என்று சொல்கிறேன். அந்த தொகையை இங்கே [காரில்] சிறிய கோப்பையில் அவள் வைக்கிறாள்," ஒவ்வொரு தொகையும் அவரது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள டிரைவ்-த்ரூ விடுதியான மெக் டொனால்ட்ஸில் உள்ள மூன்று காலை உணவுகளில் ஒன்றை குறிக்கிறது .

ஆவணப்பட இயக்குனர் பீட்டர் குன்ஹார்ட்டிடம்  "நான் மிகவும் வளமானவனாக உணராத அன்றைக்கு , ​​இது இரண்டு Sausage patties'களுடன் ஒன்றாக இணைத்து ஒரு கோக் ஊற்றி குடிப்பதற்கு தேவையான $ 2.61 எடுத்து கொள்வேன் "என்று அவர் கூறுகிறார் . $3.17 என்பது ஒரு பன்றி இறைச்சி, முட்டை மற்றும் சீஸ் பிஸ்கட் வாங்குவதற்கு தேவையானது , ஆனால் இன்று காலை சந்தை நிலவரம் சரியில்லாதலால், நான் $ 3.17'ஐ கடந்து $ 2.95 உணவுக்கு செல்கிறேன்.”

இந்த உலகில் இப்போது உயிருடன் இருக்கும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அவரது வழக்கமான வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். அவர் 1958 ஆம் ஆண்டில் ஒமாஹாவில் வாங்கிய அதே வீட்டில் வசித்து வருகிறார், மேலும் தினமும் தனது அலுவலகத்திற்கு அவரே காரை ஓட்டுகிறார். அவரது வயது 89 மட்டுமே.

இதை அடைவதற்கு , நாம் செய்யக்கூடிய எளிய விஷயம் என்னவென்றால், முதலில் நம்  வீட்டை சுத்தம் செய்வதுதான். நமக்குத் தேவையில்லாத எல்லா ஆடைகளையும் வெளியே எடுத்து (எளிய சோதனை இதுதான்-இரண்டு மாதங்களாக நாம் பயன்படுத்தாத எந்தவொரு துணியும் நமக்கு நிச்சயமாகத் தேவையில்லை) தேவைப்படுபவர்களுக்குக் கொடுங்கள்.

மக்களுக்கு இது மிகவும் தேவைப்படும் நேரம். நீண்ட காலமாக கிடக்கும் புத்தகங்கள் நம் உள்ளூர் நூலகத்திற்கு செல்லலாம். திறக்கப்படாத மற்றும் தேவையற்ற பரிசுகளுக்கும் இது பொருந்தும் -  மீண்டும் மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அது யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து அவருக்கு கொடுக்கலாம்.

நம் சமையலறை மற்றும் பரணில் மறைத்து வைத்திருக்கும் தேவையற்ற பொருட்களை முழுமையான தணிக்கை செய்ய வேண்டும். இது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எப்போதும் ஒரே மாதிரியாக சொல்லும் நம் மூளைக்கும், குரலுக்கும் அதிகம் செவிசாய்க்காதீர்கள். இந்த சிந்தனையே நம்மை இங்கே கொண்டு வந்து விட்டது . மிக உறுதியுடன் , இரக்கமின்றி, நம் வீட்டிலிருந்து எல்லாவற்றையும் வெளியேற்ற வேண்டும்.

இது முடிந்ததும், உங்களுக்கு ஏற்ற ஒரு சில வழக்கங்களை அடையாளம் காணவும். பழக்கங்களை சுற்றி எளிமை என்ற கட்டமைப்பு  வேண்டும், இல்லையெனில் அது தொடங்கியவுடன் தோல்வியடையும்.

“அவை என்ன என்பதைப் பொறுத்து, நம்முடைய பழக்கங்கள் நம்மை உருவாக்கும் அல்லது நம்மை உடைக்கும். நாம் எதை செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் - சீன் கோவே ” வாருங்கள், நம்மை உருவாக்கும் அர்த்தமுள்ள வழக்கங்களை உருவாக்கலாம்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி