Home /News /special-articles /

பாடம்14 | கானல் நீரான பணம்...!

பாடம்14 | கானல் நீரான பணம்...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Lockdown'னின் இரண்டு வாரங்களை இப்போது முடித்துவிட்டோம். நம்மில் பலருக்கு ஒரே இடத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். நம் தேவைகள் பல இல்லை என்பதை இப்போது நாம் உணர்ந்திருக்க வேண்டும். ஆரம்ப சங்கடங்களை சமாளித்து நாம் பெரும்பாலும் நம்மை சீரமைத்து கொண்டு விட்டோம் . நிச்சயமற்ற பொருளாதார தன்மையே நம்மில் சிலரைத் தொந்தரவு செய்யக்கூடிய ஒரே விஷயம்.

சமுதாயத்தின் பிரமிட்டின் கீழே உள்ள மக்கள் இந்த நிச்சயமற்ற நிலையில் சிக்கியுள்ளதால் , அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் நின்று போயிருக்கின்றன. அவர்களுக்காக ஒரு சமூக பாதுகாப்பு வலையை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு நோக்கங்கள் பல இருக்கும் போதிலும், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஒரு உண்மை.

நம் வாழ்க்கையை முழுமையாய் பார்க்க வேண்டிய கட்டம் இது. இன்று வரை நம்மை வரையறுப்பதாக நாம் நம்புகின்ற அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.

பணம்:

பணம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும், நம்மில் பலருக்கு இது மிக முக்கியமானது. நாம் குவித்த சொத்துக்கள் அல்லது நம் வங்கி இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நம் வாழ்க்கையை அளவிடுகிறோம். பெரும்பாலும் நாம் நமது சமூக அந்தஸ்து, சமுதாயத்தில் நமது நிலைப்பாடு, நமது சக்தி போன்றவற்றை பணத்துடன் ஒப்பீடு செய்கிறோம்.

வரலாற்று ரீதியாக பணம் எப்போதும் ஒரு சேமிப்பு முறையாக பயன்படுத்தப்பட்டது. பண்டமாற்று முறையுடன் தொடங்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட நல்ல தானியத்தையோ அல்லது ஒரு மசாலாவையோ ஒரு சேமிப்பு முறையாக உபயோகிக்க பயன்படுத்தப்பட்டது .

பின்னர் தங்கம் உட்பட வெவ்வேறு பழங்கால அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு மாறினோம். பயன்பாட்டில் உள்ள நாணயங்களின் மதிப்பாலேயே பேரரசுகள் வெற்றியும் வீழ்ச்சியும் அடைந்தன. பின்னர் காகித குறிப்புகளும் , ஒரு வங்கியில் சேமிப்பதற்கான மின்னணு வழிமுறைகளும் வந்தன. உங்களில் சிலர் உங்கள் வாழ்நாளில் நாணயங்கள் புழக்கத்திற்கு வருவதையும் பயன்பாட்டிற்கு வெளியே செல்வதையும் பார்த்திருக்க வேண்டும். மிகச் சமீபத்தியது பணமதிப்பிறக்கம் ஆகும். ஒரே இரவில் ஒரு பழைய நாணயத் தொகுப்பு வெளியே தள்ளிவிடப்பட்டு ஒரு புதிய தொகுப்பு கொண்டு வரப்பட்டதைக் கண்டோம்.

இப்போது வரை நாம் சம்பாதித்த பணம் உண்மையில் ஒரு காகித மதிப்போ அல்லது ஒரு வங்கியிலோ மின்னணு மதிப்பிலானது . பணம் நம்முடைய ஒரு தேவையை பூர்த்தி செய்யும் போது மட்டுமே மிகவும் மதிப்புமிக்கதாக மாறும். இது உணவு வாங்குவது, நம் வாடகையை செலுத்துவது போன்றதாக இருக்கலாம்.

பரிவர்த்தனையின் போது மட்டுமே இந்த ‘மதிப்பை’ நாம் உணரக்கூடும். அந்த நேரத்தில் மட்டுமே அதை உணர முடியுமே ஒழியே , எப்போதும் நாம் அதை உணர முடியாது. ஒரு வாரத்திற்கு முன்பு உணவு வாங்க பயன்படுத்தப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் இன்று மறந்துவிடுகிறோம். அந்த பரிவர்த்தனை கடந்த காலத்தில் நடந்தது மட்டுமல்ல , பணம் கடந்த காலத்தின் நினைவை வைத்திருக்காது. நாம் பாதுகாப்பாகவும் நன்றாக கவனித்துக்கொள்ள படுகிறோம் என்று நம் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பதே பணம் நமக்கு அளிக்கும் பேருதவி .

இது ஒரு ‘நல்ல உணர்வை’ தரும் ஆறுதலே ஒழிய ஒரு உண்மையான மதிப்புடைய பரிவர்த்தனை எதுவும் இங்கு நடக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பின் போது இதை நாம் தீவிரமாக உணர்ந்திருக்க முடியும். நம்மில் சிலர் ‘சேமித்த பணத்தின்’ மதிப்பு நிச்சயமற்றதாக மாறியதை உணர்ந்தோம் . எனவே, நான் சொல்ல முயற்சிக்கும் மைய கருத்து என்னவென்றால், வாழ்க்கை என்பது பணத்தைப் பற்றியது அல்ல என்பதுதான் .

காகிதப் பணத்தை சம்பாதிப்பதற்காக அந்த கூடுதல் அலுவலக வேலையை செய்வதால் நம் குழந்தையின் பிறந்தநாளில் இல்லாமல் போவது என்பதை குழந்தையுடன் இருப்பதுடன் ஒப்பிட முடியாது. உலகெங்கிலும், குறிப்பாக நம் நாட்டிலும் உள்ள இந்தியர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதில் பெயர் பெற்றவர்கள்.

நாளைய தேவைகளை கணக்கிட்டு நாம் நம்முடைய இன்றைய செலவுகளை ஒத்திவைக்கிறோம். வாழ்க்கை வாழ ஒரு வீடும், இறந்தபின் தூக்கி சென்று அடக்கம் செய்ய நான்கு பேரே தேவை என்று இருக்கையில்,இரண்டிற்கும் மேல் வீடுகளுடன் பணக்காரனாய் இருப்பதில் என்ன பயன்? பணத்தை பற்றி மறுபரிசீலனை செய்வதற்கும், நம் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நம்மிடம் இருக்கும் பணம் அனைத்தும் நமக்கு சமமான திருப்தியைத் தருகிறதா என்பதைப் பார்ப்பது. இப்போது நம்மிடம் 100 ரூபாய் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம் . நாம் பசியுடன் இருக்கும்போது ஒரு உணவு விடுதிக்கு சென்று சாப்பிடுகிறோம் என்று நினைத்து பாருங்கள்.

நாம் ஒரு தோசை ஆர்டர் செய்தால், அதன் விலை 50 ரூபாய். இப்போது அந்த INR 50 உங்களுக்கு என்ன மதிப்பு என்று கற்பனை செய்து பாருங்கள். கண்களை மூடிக்கொண்டு அதை உணருங்கள். இப்போது உங்கள் கையில் 1 கோடி ரூபாய் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இப்போது அதே பசியுடன் இருக்கிறீர்கள், அதே ஹோட்டலையும் அதே தோசையையும் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்வோம். நீங்கள் ஒரு தோசை ஆர்டர் செய்கிறீர்கள், அதற்காக 50 ரூபாய் செலுத்துகிறீர்கள்.

இப்போது கண்களை மூடிக்கொண்டு இந்த 50 ரூபாயின் மதிப்பை நீங்கள் கற்பனை செய்யும் அதே பயிற்சியை மீண்டும் செய்யவும். உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது எது என்று நினைக்கிறீர்கள்? முதல் சந்தர்ப்பத்தில் செலவு செய்த INR 50 அல்லது இரண்டாவது INR. 50?. சந்தேகமின்றி முதல் INR. 50. ஏனெனில் அந்த பணத்தின் மதிப்பு உங்களுக்கு மிக அதிகம். ஏனென்றால் , நமக்கு கிடைக்கும் மொத்தப் பணத்தில் 50% நம் பசியைத் தணிக்க செலவிட்டோம்.

இரண்டாவது சந்தர்ப்பத்தில் செலவழித்த அந்த INR. 50 பற்றி நாம் அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டோம் . பொருளாதார பேச்சுவழக்கில் இதற்கு பெயர் ‘பணத்தின் இடஞ்சார்ந்த பயன்பாடு’. நாம் நம் குழந்தைகளுக்காகவோ அல்லது நம் குடும்பத்தினருக்காகவோ திரட்டிய பணம் எதுவாக இருந்தாலும், நாம் வியர்த்து சம்பாரித்தோம் என்பதற்காக நாம் அதைப் பார்க்கும் கோணத்தில் அவர்கள் அதை பார்க்க மாட்டார்கள் என்பதே இந்த சூழலில் நாம் உணர வேண்டியது.

நான் இதை எங்கோ படித்திருக்கிறேன் - பணத்தினால் ஒரு படுக்கையை வாங்க முடியும் ஆனால் தூக்கத்தை அல்ல ; ஒரு கணினியை வாங்கலாம் ஆனால் மூளையை அல்ல; உணவு வாங்கலாம் ஆனால் நல்ல பசியை இல்லை; வீட்டை வாங்கலாம் ஆனால் ஒரு இல்லத்தை அல்ல; மருந்து ஆனால் ஆரோக்கியத்தை அல்ல; கேளிக்கைகளை வாங்கலாம் ஆனால் மகிழ்ச்சியை அல்ல; தெரிந்தவர்களை அடையலாம் ஆனால் நண்பர்களை அல்ல; கீழ்ப்படிதலை வாங்கலாம் ஆனால் நம்பிக்கையை அல்ல . நம் அனைவருக்கும் பணம் என்பது என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டை அடைய ஒரு சிறுமி தனது குடும்பத்துடன் புலம் பெயர்ந்து வெறுங்காலுடன் நடந்து செல்லும் வீடியோவை சமீபத்தில் பார்த்தது என் இதயத்தைத் துளைத்தது . அது lockdown'னின் மூன்றாவது அல்லது நான்காவது நாளில் நடந்தது . அவர்கள் நிறைய நடந்தார்கள் என்பதும் அந்த பெண் அழுதுகொண்டே தார் சாலையில் கால்களை இழுத்துக்கொண்டு நடந்தாள் என்பதையும் முற்றிலும் உணர முடிந்தது .

அவள் தலையில் நிறைய சாமான்களை வைத்திருந்த தன் தந்தை மற்றும் தாயுடன் சேர்ந்து நடக்க இயலவில்லை . அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்ததனால் அல்ல , ஆனால் அவள் ஒரு செருப்பை கூட அணியாமல் , வெறுங்காலுடன் நடந்து கொண்டிருந்தது என் இதயத்தைத் துளைத்தது. அவள் குடும்பத்தால் செருப்பை வாங்க முடியாது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை . சாலையில் செருப்பு இல்லாமல் ஒரு பெண் இருக்கையில் , எந்த பொருளும் அற்ற, கட்டுக்கட்டான பணத்தை நாம் நிறைய சேமித்து வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன?

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி