பாடம்13 | புத்தங்களை வாசித்து மேம்படுவோம்!

மாதிரி படம்

”நீங்கள் படிக்க முடிவு செய்தால், சரியான புத்தகம் தொடங்குவதற்காக காத்திருக்க வேண்டாம். அந்த நாள் ஒருபோதும் வராது”

  • Share this:
எல்லா நல்ல புத்தகங்களையும் வாசிப்பது என்பது கடந்த நூற்றாண்டுகளின் மிகச்சிறந்த மனிதர்களுடன் உரையாடுவது போன்றது - டெஸ்கார்ட்ஸ்

இன்று, நாம் ஒரு மிக முக்கியமான ஆனால் இறந்து கொண்டிருக்கும் பழக்கமான புத்தகங்களைப் படிப்பதை பற்றி பார்ப்போம் . மனிதர்களாகிய நாம் பிறந்த நாளிலிருந்தே இறக்கும் வரை, நாம் கற்றுக்கொள்ள முனைகிறோம். மரண படுக்கையில் இருக்கும் அந்த நபரிடம் நீங்கள் கேட்டாலும், அவரும் அன்றைய தினம் ஏதாவது கற்றுக் கொண்டிருப்பார் - எப்படி இறப்பது என்று அவர் கற்றுக் கொண்டிருப்பார்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது , நம் வாழ்க்கையில்  முன்னேற உதவுகிறது மற்றும் முக்கியமாக ஒவ்வொரு நாளும்  விரைவாக மாறும் இந்த உலகிற்கு நம்மை தயார்படுத்துகிறது.

நாம் வாசிக்கும் போது முழுமையாக சுறுசுறுப்பாக இருப்பதால் புத்தகங்களை வாசிப்பது என்பது கற்றலின் மிக முக்கியமான அங்கமாகும். தகவல்களின் சேமிப்பிடத்தை நாம் அணுகுவதால் இது நம் கற்றலை துரிதப்படுத்துகிறது. இவற்றில் சில நூற்றாண்டுகள் பழமையானவை. எதிர்காலம் நமக்கு என்ன என்பதை புரிந்துகொள்ள வரலாற்றை பற்றி எதையாவது படிக்கபோது உணர முடியும். நமக்கு ஆர்வமாக உள்ள இந்த வாசிப்புகளில் சில எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கலாம், அதே எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமது ஹீரோக்களில் பெரும்பாலோர் எந்தத் துறையில் இருந்தாலும், அவர்கள் “விரைவான கற்றல்” என்ற காரணத்தால்தான் அந்த நிலைக்கு வந்துள்ளனர். இந்த அறிவு அனைத்தையும் அவர்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அடையும் போது இந்த கற்றல் நிகழ்கிறது. நாம் உள்நோக்கி ஒரு எளிய வரலாற்று உதாரணத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தால், அறிவு எவ்வாறு சமூகத்தை வடிவமைக்கிறது என்பதையும், அது இல்லாதபோது சமூகம் வரண்டு போவதையும் நம்மால் உணர முடியும்.

‘அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகம்’ எரிக்கப்பட்ட பின்னரே மாவீரர் அலெக்சாண்டர் நிறுவிய பெரிய நகரமாகிய அலெக்சாண்டிரியாவின்  அழகும் , உலகளாவிய முக்கியத்துவமும் அழிந்தன . இது பண்டைய உலகின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளின் மையமாக இருந்ததோடில்லாமல் , மிகப் பெரிய அறிவுக் காப்பகமாக இருந்தது. இந்த சேதம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த போதிலும், இந்த உலக நிதியை இழந்ததைப் பற்றியும், இன்னும் சில காலம் நம்மிடம் இருந்திருந்தால், உலகம் எவ்வாறு முன்னேறியிருக்க முடியும் என்பதையும் நினைத்து புலம்புகிறோம்.

மனித நாகரிகம் அறிவின் தோள்களில் அணிவகுக்கிறது என்பதை புரிந்துகொள்வது முக்கியம். ஒரு புத்தகத்தைப் படிப்பது அந்த அறிவைப் பெறுவதற்கான எளிதான மற்றும் முக்கியமான வழியாகும். இது நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த தலைமுறைகளை பற்றி அறிய திறக்கும் ஒரு கதவு. ஒரு நல்ல புத்தகம் ஒரு முழு நாகரிகத்தையும் உயிருடன் நம் முன் கொண்டு வர முடியும். அலெக்ஸாண்டரின் வெற்றி, ஐரோப்பாவின் crusade wars, பண்டைய பாரதத்தின் மகிமை, தர்மத்துடன்  ஆட்சி செய்த நமது ராஜாக்களின் கம்பீரத்தை நாம் காணலாம்.

தத்துவத்தின் மூலம் சாக்ரடீஸும் , விஞ்ஞானத்தின் மூலம் கலிலியோவும் , அர்த்த சாஸ்திரத்தின் மூலம் கௌடில்யரும் , அவரது போதனைகள் மூலம் சங்கராச்சாரியாரும் மற்றும் சூஃபி கவிதைகள் மூலம் ரூமியும் மாற்றத்தை கொண்டு வரும்  ஒரு சாதாரண மனிதனின் சக்தியையும் இது கூறுகிறது. புத்தகங்கள் இல்லாமல் மற்றும் முக்கியமாக அதைப் படிக்காமல் இருந்தால் உலகை மென்மையாகவும் சில சமயங்களில் அதிரடியாகவும் வடிவமைத்த இந்த தனித்துவமான ஆளுமைகள் அனைவரையும் நாம் எவ்வாறு அறிந்திருப்போம் ?

நாம் இப்போது படிப்பதில்லை என்பது அர்த்தம் அல்ல. பெரும்பாலான நேரங்களில் நமக்கு எந்த பயனும் இல்லாத ஒன்றை நாம் படித்து வருகிறோம். நாம் செய்தித்தாளில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் தினசரி குற்றம் மற்றும் அரசியலை பற்றியும் , வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளையும்  (இப்போதெல்லாம்) படிக்கிறோம். நான் இங்கே குறிப்பிட முயற்சிக்கும் வாசிப்பு ஒரு நபராக நீங்கள் யார் என்பதை மாற்றும் ஒரு வாசிப்பைப் பற்றியது. ஒரு மகாபாரதம் அல்லது ஒரு இலியாட் போன்ற சில காவியங்களைப் படித்து முடித்த பிறகு நீங்கள் அதே நபராக இருப்பதில்லை. விக்டர் ஃபிராங்க்லின்  "Man’s Search For Meaning" படித்த பிறகு நீங்கள் வாழ்க்கையை மிகவும் வித்தியாசமாக உணர்வீர்கள். அந்த வகையான வாசிப்பு நம்மிடம் இப்போது இல்லை. நம்மை மகிழ்விக்கவோ அல்லது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவோ மட்டும்  ​​எப்போதும் படிக்க முடியாது. ஊக்கமளிப்பதற்கும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும், முக்கியமாக நம் ஆளுமைகளை சோதித்துப் பார்ப்பதற்கும் நாம் படிக்க வேண்டும்.

நாம் அதிகம் படிக்காததால், இளைய தலைமுறையினரும் படிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் இது ஒரு வேலை என்றும் நினைக்கிறார்கள். யாரோ ஒரு முறை சொன்னது போல், நீங்கள் ஒரு நாகரிகத்தைக் கொல்ல விரும்பினால், அந்த மக்கள் வாசிப்பதை நிறுத்துங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, நாம் ஒருவருக்கு அல்லது நம் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று, வாசிப்பின் மகிழ்ச்சியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது . ஒரு புத்தகத்துடன் தொடங்கும் இந்த பழக்கம், நாமே உணரும்  முன்பு, வரலாறு முதல் தத்துவம் வரை நாவல்கள் மற்றும் எல்லாவுமென நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் அதே நபர் அல்ல. எனவே, வாசிக்கும் பழக்கம் நமக்கு இல்லையென்றால், இன்று அதை தொடங்குவோம் என்று உறுதிமொழி ஏற்போம் . நம்மில் பெரும்பாலோர் இப்பொழுது வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் நேரமாதலால் இந்நேரத்தை விட எந்த நேரமும் சிறந்த நேரமல்ல. இளைய தலைமுறையினர் ஒரு வகுப்பறையில் அவர்கள் பெறும் அறிவு மிகக் குறைவு என்பதையும், அதிக அறிவு வேறு இடங்களில் இருப்பதையும், அது திறந்து படிக்க வேண்டிய ஒரு புத்தக வடிவில் காத்திருக்கிறது என்பதையும் விரைவாக உணரத் தொடங்குவார்கள் .

நீங்கள் படிக்க முடிவு செய்தால், சரியான புத்தகம் தொடங்குவதற்காக காத்திருக்க வேண்டாம். அந்த நாள் ஒருபோதும் வராது. உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு புத்தகத்தைத் தொடங்குங்கள் - இது ஒரு நாவல் அல்லது சிறுகதை அல்லது எதுவாகவும்  இருக்கலாம். இதில் ஒரே விஷயம் என்னவென்றால், அதில் நமக்கு ஆர்வம் இருக்க வேண்டும். சில நாட்களுக்கு பிறகு , தொடர்ச்சியான வாசிப்பினாலும், நம்முடைய ஆர்வம் எங்கே இருக்கிறது, மேலும் எங்கு ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வோம். எங்கு சாத்தியமோ அந்த இடங்களிலும் மற்றும் ஒரு பழக்கமாக - விலையுயர்ந்த மற்றும் பல மடங்கு பயனற்ற பரிசுகளை அளிப்பதற்கு பதிலாக, ஒரு புத்தகத்தை பரிசளிக்கவும். புத்தகங்கள் பலரால் படிக்கப்படும் போது, ​​ஒரு தலைமுறையைத் தூண்டி மற்றும் அச்சமூகத்தின் பாதையை மாற்றக்கூடும். தேவையற்ற எல்லா விஷயங்களுக்கும் நாம் இவ்வளவு பணம் செலவழிக்கும்போது, ​​ஒரு புத்தகத்தில் முதலீடு செய்ய ஏன் இருமுறை யோசிக்க வேண்டும்.

இன்றே அதைச் செய்யுங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, நம் வாழ்வில் நாம் செய்யும் புத்திசாலித்தனமான முதலீடு ஒரு புத்தகமாக  இருக்கும். இதை நாம் விரைவிலேயோ அல்லது பின்னரோ உணருவோம்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published: