2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகளாவிய ட்ரோன் மையமாக மாற்றுவதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. முன்னர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் செய்யப்பட்ட பணிகள் இன்று எளிதாக ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வான்வழி புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு, நில ஆய்வுகள், சாலைகள்-நெடுஞ்சாலைகள் போன்ற கட்டுமானத் துறை, பாதுகாப்பு, சுரங்கம், தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, கண்காணிப்பு தளங்கள் போன்றவற்றின் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றிற்கான எதிர்காலம் இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது? உலக அரங்கில் இந்தியாவை ஒரு மையமாக மாற்ற மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பார்க்கலாம்.
சந்தை மற்றும் தொழில் வளர்ச்சி கணிப்புகள்
இந்தியாவில் ஆகஸ்ட் 2021 ட்ரோன் விதிகள் அறிவிக்கப்பட்டபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ட்ரோன் சந்தை 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒழுங்குமுறை நெறிமுறைகள் இறுதியாக உலகளாவிய தரத்துடன் ஒத்துப்போகின்றன. ட்ரோன் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பும் அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் ட்ரோன் தொழில்துறை 12,000 கோடியில் இருந்து 15,000 கோடி வரை மொத்த வருவாயைக் காண முடியும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உண்மையில், இந்தியாவின் ட்ரோன் ஸ்டார்ட்அப்களின் (US$16.56 மில்லியன்) முதலீட்டுடன் ஒப்பிடுகையில், சீனாவின் ட்ரோன் ஸ்டார்ட்அப்கள் 2014-18 க்கு இடையில் 14 மடங்கு அதிக முதலீட்டை ஈர்த்துள்ளது. அதாவது சுமார் 239 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அந்த முதலீடுகள் மொத்தமாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை நோக்கி திரும்பப்போகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இறக்குமதி தடை
உள்நாட்டு ஆளில்லா விமான உற்பத்தியை ஊக்குவிக்க, இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் HS கோட் 8806 இன் கீழ் ட்ரோன்களின் இறக்குமதி விதிவிலக்குகளுடன் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 9, 2022 அன்று வெளியிடப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) ஆளில்லா விமானங்களின் இறக்குமதியை தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) இறக்குமதி அனுமதியின் தேவையை ரத்து செய்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் இன்டர்நெட் முடக்கம்! சமாளிக்க உதவும் டிப்ஸ்கள் இங்கே
பட்ஜெட் 2022 அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2022-23 தாராளமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகைகள் (PLI) மூலம் இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கான ட்ரோன் வான்வெளி வரைபடத்தையும், துறை சார்ந்த PLI திட்டத்தையும், தேசிய ஆளில்லா விமான அமைப்பு போக்குவரத்து மேலாண்மை (UTM) கொள்கை கட்டமைப்பையும் அக்டோபர் 2021 மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
PLI திட்டம்
உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகை (பிஎல்ஐ) திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது ட்ரோன்கள் உற்பத்திக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டதின் மூலம் ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. ட்ரோன் கொள்கை மற்றும் ட்ரோன் பிஎல்ஐ திட்டத்தின் மூலம், இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் ₹900 கோடி வருவாயை எட்ட வேண்டும் என்பது தற்போதைய இலக்காக உள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில் 9 பில்லியன் ட்ரோன் உற்பத்தி, அதற்கான மென்பொருள் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டம் கொண்டுவரப்படுகிறது.
மேலும் படிக்க: Paytmயின் புதிய கண்டுபிடிப்பான ஃபோட்டோ QRயில் முதலீடு செய்வதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.!
பட்டியலிடப்பட்ட PLI விண்ணப்பதாரர்களில் ஐந்து ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒன்பது ட்ரோன் கூறு உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பட்டியலிடப்பட்ட ட்ரோன் தயாரிப்பாளர்கள்:
- Dhaksha Unmanned Systems, சென்னை, தமிழ்நாடு
- ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி, மும்பை, மகாராஷ்டிரா
- IoTechWorld ஏவியேஷன், குருகிராம், ஹரியானா
- ஓம்னிப்ரெசென்ட் ரோபோ டெக்னாலஜிஸ், குருகிராம், ஹரியானா
- ரபே எம்பிபீர், நொய்டா, உத்தரபிரதேசம்
பட்டியலிடப்பட்ட ட்ரோன் பாகங்கள் தயாரிப்பாளர்கள்:
- Absolute Composites, பெங்களூர், கர்நாடகா
- அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா, ஹைதராபாத், தெலுங்கானா
- Adroitec தகவல் அமைப்புகள், புது தில்லி
- ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், பெங்களூர், கர்நாடகா
- இன்வென்ட்கிரிட் இந்தியா, சம்பல்பூர், ஒடிசா
- பாராஸ் ஏரோஸ்பேஸ், பெங்களூர், கர்நாடகா
- SASMOS HET-டெக்னாலஜிஸ், பெங்களூர், கர்நாடகா
- ZMotion, பெங்களூர், கர்நாடகா
- ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ், சென்னை, தமிழ்நாடு
இறுதியாக
கொரோனா சூழலுக்கு பிறகு உலக நாடுகளின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. சிப் தயாரிப்பில் முன்னணியில் இருந்த தைவான் நாடும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்துவிட்டது. அதனை கருத்தில் கொண்டு, இந்தியாவை அவற்றிற்கு மாற்றாக முடிவு செய்து, இங்க முதலீடு செய்து வருகின்றன. இதனை முன்கூட்டியே உணர்ந்த மத்திய அரசு தொலைநோக்கு அடைப்படையில் பல திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்திவிட்டது. அதில் ட்ரோன் துறையும் ஒன்றாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் ட்ரோன் என்றாலே, இந்தியா தான் என கை காட்டும் அளவுக்கு முன்னேறி வருகிறது.
கட்டுரையாளர் - கு. பிரதீப் குணசேகரன்
(கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் தனிப்பட்டவை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.