• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • 57% இந்தியர்கள் 2021-ஆம் ஆண்டின் விடுமுறைக்கால பயணத்துக்கு திட்டம்.. கணக்கெடுப்பில் சுவாரஸ்யத் தகவல்..

57% இந்தியர்கள் 2021-ஆம் ஆண்டின் விடுமுறைக்கால பயணத்துக்கு திட்டம்.. கணக்கெடுப்பில் சுவாரஸ்யத் தகவல்..

2021 ஆண்டின் தொடக்கத்தில் 57 % இந்தியர்கள் தங்கள் பயண திட்டங்களை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று பலரின் வாழ்க்கை பயணத்தை புரட்டி போட்டிருக்கலாம். விடுமுறை காலங்களை வீட்டிலேயே செலவழிக்க வைத்திருக்கலாம். ஆனால் 2021ம் ஆண்டிற்கான விடுமுறை கால பயணங்களை திட்டமிடுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. அதன்படி, AI- ட்ரிவன் EMI பைனான்சிங் மற்றும் ‘பை நவ் பே லேட்டர்’ (Buy Now Pay Later) தளமான ZestMoney, வரும் 2021ம் ஆண்டில் இந்தியர்கள் தங்கள் பயணத் திட்டங்களை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

  இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் அடுக்கு இரண்டு,மூன்று ஆகிய நகரங்களில் இருந்து பதிலளித்த சுமார் 4,600 நபர்களின் மாதிரியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கடந்த மூன்று மாதங்களில் 75 சதவிதத்திற்கும் அதிகமானோர் விடுமுறைக்கு செல்லவில்லை என்றாலும், 57 சவிதத்திற்கும் அதிகமானோர் வருகிற 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்தைத் திட்டமிட்டுள்ளனர் என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அதிகபடியான மக்கள் உள்நாட்டு பயணத்தைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 

  அவ்வாறு அவர்கள் இந்தியாவுக்குள் செல்ல விரும்பும் இடங்களான, கோவா (53.1%), கேரளா (32.9%), சிம்லா (31.4%) ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இதையடுத்து, லடாக், காஷ்மீர், ஜெய்ப்பூர், ஆக்ரா மற்றும் மைசூரு ஆகியவை பிற பிரபலமான இடங்களாக இருந்தன. மேலும் தொற்றுநோய் காரணமாக, பயணிகள் தங்களது விடுமுறை கால நடவடிக்கைகள் உள்ளிட்ட செலவினங்களையும் குறைத்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் பதிலளித்தவர்களில் 44 சதவீதத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்று அவர்களின் விடுமுறை மற்றும் பயண வரவு செலவுத் திட்டங்களை பாதித்ததாகக் கூறியுள்ளனர்.  

  இது குறித்து ZestMoney-யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் லிசி சாப்மேன் கூறுகையில், “கடந்த ஆண்டு பல பயண ஆர்வலர்களுக்கான விடுமுறை பயணத்தை தொற்றுநோய் தடுத்து நிறுத்தியது. அந்த நிலையில் அவர்கள் தங்கள் விருப்பப்படி செலவினங்களைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்தினர். தற்போது நகரங்கள் முழுவதும் படிப்படியாக மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், நுகர்வோர் படிப்படியாக வரவிருக்கும் ஆண்டிற்கான விடுமுறைகளைத் திட்டமிடுகின்றனர். தங்குமிடங்கள், டூர் பேக்கேஜ்கள் மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்கள் தேவைக்கு ஏற்ப படிப்படியாக இயக்கப்படுவதை நாங்கள் கண்டோம். 

  மேலும் எங்கள் தளத்தில் விடுமுறை கால பயணத்திற்காக "பே லேட்டர்" தீர்வைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களில் மாதந்தோறும் 50 சதவீத வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம், என்றும் தெரிவித்துள்ளார். "பே லேட்டர்" போன்ற தீர்வுகள் தற்போது நிதிக்கு  மாற்றாக பிரபலமடைந்து வருகின்றன. மேலும் ஆய்வில் பதிலளித்தவர்களில் 55 சதவீதம் பேர் ஈ.எம்.ஐ.க்களை அல்லது பை நவ் பே லேட்டர் விருப்பத்தை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

  இது தவிர, கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 45 சவீதத்திற்கும் அதிகமானோர் 2021ம் ஆண்டில் சர்வதேச பயணங்களுக்கு பதிலாக உள்ளூர் பயண இடங்களையும் தங்குமிடங்களையும் தேர்வு செய்வதாக கூறியுள்ளது. மேலும் சுமார் 42 சதவீதம் பேர் விமானங்கள் அல்லது ரயில்களுக்குப் பதிலாக தங்கள் காரில் பயணிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தங்களின் அடுத்த பயணத்திற்கான தங்குமிடமாக ஹோட்டலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பயண இலக்கைத் தேர்ந்தெடுக்கும் போது பதிலளித்தவர்களில் சுமார் 74 சதவீதம் பேருக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மிக முக்கிய எதிர்பார்ப்பாக  இருந்ததும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: