பொங்கலுக்கு உங்கள் இல்லத்தை இப்படி அலங்கரித்து பாருங்க... பக்கத்து வீட்ல உள்ளவங்க ஆடி போய்டுவாங்க..

பொங்கலுக்கு உங்கள் இல்லத்தை இப்படி அலங்கரித்து பாருங்க... பக்கத்து வீட்ல உள்ளவங்க ஆடி போய்டுவாங்க..

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை என்றாலே குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடுவது தான் .அந்த வகையில் பொங்கலை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்பதற்கான சில டிப்ஸ்கள் இதோ..

  • Share this:
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. அதனால் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலை கொண்டாடுகின்றனர். தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் தயார் செய்யப்பட்ட அரசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் தயார் செய்து பொங்கலுடன், செங்கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூச்சலிட்டுவது நம் பாரம்பரிய முறையாகும்.

இந்த முறையை தான் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நகரங்களில் வசிக்கும் குடும்பங்கள் சூரிய பொங்கல் வைப்பதில்லை. எனவே நீங்கள் கொண்டாடும் முறையிலே எப்படி பொங்கல் பண்டிகைக்காக உங்களின் இல்லங்களை அழகாக அலங்கரிக்கலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ..

வீட்டை விளக்குகளால் அலங்கரியுங்கள்:



பண்டிகை என்றாலே இல்லத்தை நாம் சுத்தம் செய்து அலங்கார பொருட்களால் அழகுப்படுத்தி இறைவனை வழிபடுவது தான் வழக்கம்.எனவே வீடு முழுவதும் வண்ண விளக்குகளை தொங்க விட்டால் பார்ப்பதற்கு உங்களுக்கே அழகாக இருக்கும்.அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் சிறிய LED விளக்குகள் விற்பனைக்கு உள்ளது. இல்லையென்றால் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று சிறிய வண்ண விளக்குகளை வாங்கி வந்து அதை உங்கள் ஹால், பூஜை அறையில் தொங்கவிடலாம்.

பொங்கல் பானை அலங்காரம்:



பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பானை தான் முக்கியமான பொருளாகும்.இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த வகையில் அலங்கரிக்கலாம். மலர்கள், மஞ்சள் கொத்து அல்லது பெயிண்ட்களை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். பானையை பெயிண்டில் வரைந்தால் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தி வரைவது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்.



அதே போல் சிறிய பொங்கல் பானைகளை வாங்கி அதில் ஜிமிக்கி கற்களை வைத்து அலங்கரிக்கலாம். கடையில் இதற்கென்று பல வண்ணங்களில் கற்கள் விற்கப்படுகிறது. இதை நீங்கள் ஹாலில் உள்ள அலமாரியில் வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் வீட்டிற்கு வருபவர்களின் கண்களை நிச்சயமாக கவரும்.

கரும்பை பயன்படுத்துங்கள்:



 

பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு தான். அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரின் வீட்டிலும் பொங்கலை முன்னிட்டு கரும்பு வாங்கப்படுவது வழக்கம். கரும்புகளை இரண்டு பொங்கல் பானைக்கு நடுவில் வைத்து அலங்கரித்தால் அட்டகாசமாக இருக்கும். முடிந்தால் ஹாலின் நான்கு மூலைகளிலும் கரும்பை வைத்து வீட்டிற்கு அழகு சேருங்கள்.

பொங்கல் கோலம்:



வீட்டிற்கு முகப்பு என்பது வாசல் தான். அதனால் தான் கிராமபுறங்களில் காலையில் எழுந்தவுடன் வீட்டின் முன்பு சாணி தெளித்து கோலம் போடுகிறார்கள். இது வீட்டிற்கு வருபவர்களை மறைமுகமாக வரவேற்கும் பண்பாடாகும்.நகரங்களில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டின் முன்பு இடம் இருந்தால் கோலம் போடுகின்றனர் அல்லது கோல ஸ்டிகர்களை வீட்டு வாசலில் ஒட்டிவிடுகின்றனர்.

பொங்கல் பண்டிகை என்பதால் வீட்டின் முன்பு இரண்டு பொங்கல் பானை. இரண்டு கரும்பை வரைந்து அவற்றை கலர் பொடி மூலம் அலங்கரித்தால் வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு வரவேற்பாக இந்த கோலம் அமையும். நீங்கள் ரங்கோலி போட தெரிந்தவராக இருந்தால் ரங்கோலி கோலமும் போடலாம் அல்லது வீட்டின் வாசப்படிக்கு உள்ளேயும் கோலம் போடலாம்.

அடுக்குமாடி பொங்கல் வைக்கலாம்:



அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்கள் வீட்டின் மூன் பொங்கல் வைப்பது என்பது இயலாத ஒன்று. வீட்டினில் நடு ஹாலில் மூன்று கரும்பை முட்டுக்கொடுத்து நடுவில் இரண்டு பொங்கல் பானையை வைத்து அலங்கரிக்கலாம்.

வால் ஸ்டிக்கர்:



உங்கள் வீட்டில் உள்ள சுவற்றினில் பொங்கல் ஸ்டிக்கர் ஒட்டினால் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும்,அழகாகவும் இருக்கும்.

மா இலைகளை வைத்து அலங்கரிப்பது:



மா இலைகளை பண்டிகைகளுக்கு பயன்படுத்துவது புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே ஒரு கயிற்றில் 5 முதல் 10 மா இலைகளை கோர்த்து மா தோரணத்தை உருவாக்கி வீட்டின் வாசப்படிக்கு மேல் மற்றும் பொங்கல் பானையையும் மா இலையினால் அலங்கரிக்கலாம்.

பூக்கோலம்:



வீட்டின் பூஜை அறை முன்பு மலர்களின் இதழ்களை பயன்படுத்தி கோலம் போடலாம்.செவந்தி,ரோஜா,கனகாம்பரம் போன்ற மலர்களின் இதழ்களை பயன்படுத்தி பொங்கல் பானை அல்லது உங்களின் இஷ்ட தெய்வத்தின் உருவத்தையும் கோலத்தில் கொண்டு வரலாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: