Home /News /special-articles /

PM Modi Birthday : பழைய நாகரீக உணர்வோடு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் மோடி

PM Modi Birthday : பழைய நாகரீக உணர்வோடு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் மோடி

modi

modi

PMModiBirthday : முந்தைய காலத்தில் இந்தியாவின் சிறந்த பழக்கமாக விளங்கிய யோகா, ஆயிரவர்த்த முறைகளை மீண்டும் மக்கள் கைகளுக்கு எடுத்து செல்ல முயற்சிகள் மேற்கொள்கிறார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai, India
  மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா ஒரு மாறுபட்ட, துடிப்பான, கலாச்சாரம் மற்றும் ஆழமான நாகரீகமாக உள்ளது. 

  உலகின் பல பகுதிகளில் வரலாறு, கலாச்சாரம் அழிந்து வருகிறது மற்றும் பல பழைய மரபுகள் இழக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோடி இந்தியாவின் பழைய முறைகளையும், நம்பிக்கையையும் இன்றைய சமூகத்திற்குள் உள்ளிட முயற்சி செய்கிறார். பழைய கலாச்சாரத்தோடு புதிய பாரதம் என்பதை தன் லட்சியமாக வைத்து ஓடுகிறார்.

  வரலாறு…

  பாரதம் அந்நிய ஆட்சியின் கீழ் இருந்த போதும் அதன் பாரம்பரியம் , கலாச்சாரம் , ஆன்மீகம் ஆகியவற்றை விடாமல் அடுத்த தலைமுறையினருக்கு மத குருக்கள், யோகிகள் மற்றும் ரிஷிகளைக் கொண்டு கடத்தி வந்துள்ளது. புதிய மதங்கள், வழிபாடுகள் வந்தாலும் தனது பழைய பழக்கங்களையும் பிடித்து வைத்திருந்தது. அதனால் தான் இன்றைய இந்தியா இன்னும் தனது கலாச்சாரத்தை குலையாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

  சுதந்திரத்திற்கு பின் ..

  1947 இல் இந்தியாவின் சுதந்திரம் ஒரு தேசமாகவும் அதன் தர்ம நாகரிகமாகவும் தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக மீண்டும் உலகில் அதன் இருப்பை முன்னிலைப்படுத்தவும் வாய்ப்பளித்தது. பாலகங்காதர திலகர், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்ட இந்திய சுதந்திர இயக்கத்தின் நம்பிக்கையும் இதுதான்.

  PMModiBirthday : 56 இன்ச் தாலி, 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் வெகுமதி.. மோடி பிறந்தநாளுக்கு டெல்லி உணவகத்தின் அசத்தல் ஆஃபர்

  சுதந்திர இந்தியாவில் புதிய அரசியல் மற்றும் கல்வி சக்திகள் காலனித்துவ மற்றும் மார்க்சிய தாக்கங்களை பிரதிபலித்தன. சுதந்திரத்திற்குப் பிந்தைய நேருவின் காங்கிரஸ் இந்தியாவின் பழைய ஆன்மீக கலாச்சார பழக்கவழக்கங்களை விட நாட்டின் தொழில்முறை வளர்ச்சிக்கும் நிதி மேலாண்மைக்குமே முக்கியம் என்று அதில் அதிக கவனம் செலுத்தியது.

  மோடியின் முயற்சி:
  இன்று, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 இல், பிரதமர் நரேந்திர மோடி அரசு அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியோடு ஒருங்கிணைத்து, நாட்டின் கலாச்சாரம், நாகரிகம், சமய கோட்பாடுகளையும் கோல் உயர்த்த முயன்று வருகிறார்.

  ஒரு பெரிய நாகரீகம் அதன் நினைவுச்சின்னங்களால் குறிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, பல நூற்றாண்டுகள் பழமையான பெரிய கோவில்கள் மற்றும் புனித தளங்கள் இடிபாடுகளாக உள்ளன. அயோத்தி, கேதார்நாத், காசி விஸ்வநாத் போன்ற இந்தியாவின் நீடித்த நாகரிகத்தை பிரதிபலிக்கும் நினைவுச்சின்னங்களை மோடி புதுப்பித்து வருகிறார்

  இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு அரசின் அலுவலகங்கள் ஆங்கிலேயர் கால கட்டிடங்களில் நடந்து வருவதை கொஞ்சம் கொஞ்சமாக புதிய இந்திய கட்டிடங்களுக்கு மாற்றி வருகிறார். கர்தவ்யா பாதை மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா வளாகம் போன்றவை புதிய தேசிய சின்னங்களாக உருவாகி வருகிறது.

  PMModiBirthday: பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு நாடு தழுவிய 15 நாள் இரத்த தான இயக்கம் இன்று தொடங்குகிறது

  கௌரவித்தல் :

  நவீன இந்தியாவிற்கு அடிப்படையை வழங்கிய சிறந்த அரசியல் வழிகாட்டிகளான சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், ஸ்ரீ அரவிந்தோ மற்றும் வீர் சாவர்க்கர் உள்ளிட்டோரை பிரதமர் கௌரவித்துள்ளார். குஜராத் கடலோரத்தில் உள்ள சர்தார் படேலின் நினைவுச்சிலை மற்றும் டெல்லியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

  ராணா பிரதாப் மற்றும் சத்ரபதி சிவாஜி போன்ற வரலாற்றுப் பிரமுகர்கள் முதல் சுதந்திர இயக்கத்தின் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், போர்வீரர்களை மோடி கௌரவித்துள்ளார்.இந்தியாவின் தலைசிறந்த மத குருக்களான ஆதி சங்கரர், ராமானுஜர், புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோரை அங்கீகரித்து, பிரதமர் கௌரவித்துள்ளார்.

  மீட்டெடுத்தல்:

  முந்தைய காலத்தில் இந்தியாவின் சிறந்த பழக்கமாக விளங்கிய யோகா, ஆயிரவர்த்த முறைகளை மீண்டும் மக்கள் கைகளுக்கு எடுத்து செல்ல சர்வதேச யோகா தினம் மற்றும் ஆயுர்வேத தினம் போன்ற புதிய நிகழ்வுகளுடன், தேசிய மற்றும் பிராந்திய அளவில் இந்தியாவின் பெரிய பண்டிகைகளை மோடி கொண்டாடுகிறார். மோடி இந்தியாவின் பழமையான புவியியல் அமைப்பு கணித முறை வாஸ்துவை மீட்டெடுத்தார்

  வட இந்தியாவில் புனிதமாக கருதப்படும் கங்கை நதியில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கழித்த குப்பைகளை அகற்றி நதியை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

  PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

  வளர்ச்சி திட்டங்கள்:

  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மற்றும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள அனைத்துப் பகுதிகளின் புவியியல் வளங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலும் உலக அளவிலும் சூழலியலை பாதுகாக்க வலுவான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார். நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், அதன் விவசாயத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் திட்டங்கள் வகுத்துள்ளார்.

  மோடி தனது உலகப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளில் இந்தியாவின் நட்பு வட்டத்தை பெருக்கி வருகிறார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நீடித்த நட்பை வளர்த்துக் கொண்டார். நாகரீக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நாடுகளின் உலகில் இந்தியாவுக்கு அதிக மரியாதை அளித்துள்ளார் மோடி.

  பழைய மரபுகளை இன்றைய இளைஞர்களுக்கு நினைவுறுத்தும் வகையில் பல முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார், இளைய பாரதம் பழைய கலாசார வரலாற்றையும் அறிந்துகொள்ள வழி செய்கிறார்.
  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Modi Birthday, PM Narendra Modi

  அடுத்த செய்தி