ட்ரெயினி முதல் பத்ம பூஷன் வரை... சந்தா கொச்சார் எழுச்சியும் வீழ்ச்சியும்…

P Devaraj | news18
Updated: June 19, 2018, 7:56 PM IST
ட்ரெயினி முதல் பத்ம பூஷன் வரை... சந்தா கொச்சார் எழுச்சியும் வீழ்ச்சியும்…
சந்தா கொச்சார்.
P Devaraj | news18
Updated: June 19, 2018, 7:56 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கொச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  வரும் 19-ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.

தன்னுடைய பயணத்தை கனவு படியே வடிவமைத்துக் கொண்டவர் சந்தா கொச்சார். 1984-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் சாதாரண மேனஜ்மெண்ட் ட்ரெயினியாக சேர்ந்த கொச்சார் வெகு சீக்கிரமாக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நிறுவனத்துக்கு பிரச்சினைகள் வரும் பொழுது அதை எளிதாக கையாளுவதில்தான் தலைமை அதிகாரி திறன் வெளிப்படும். அந்த வகையில் பிரச்சினைகளை எளிதாக கையாளுவதில் சந்தா கொச்சார் நிபுணர் என்றே துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். அந்த திறமைக்கு ஏற்றார்போலவே அவரது வளர்ச்சியும் இருந்தது.
வங்கியில் பண சுழற்சியில் (liquidity crisis) தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில்தான் ரீடெய்ல் பிரிவின் தலைவராக கொச்சார் நியமிக்கப்பட்டார்.

அந்தப் பிரச்சினையை எளிதாக நிர்வகித்த கொச்சாருக்கு அடுத்து வங்கியின் இணை நிர்வாக இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் பொறுப்பேற்ற நேரத்தில் சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டிருந்தது. பொருளாதார சரிவையும் வங்கி மீது எழுந்த பொய் புகார்களையும் மிகச் சிறப்பாக கையாண்டார்.

பத்ம பூஷன் விருது :

கடந்த 2009-ம் ஆண்டு தனது 48 வயதில் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மிக இள வயதில் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சந்தா கொச்சார். பல்வேறு மூத்த அதிகாரிகள் இருப்பினும் சந்தா கொச்சாருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதை அனைவரும் வரவேற்றனர். பல்வேறு சரிவுகளுக்குப் பிறகு வங்கியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கொச்சாருக்கு சென்றது.
அதற்கேற்ப சந்தா கொச்சார் தனது உத்திகளையும் மாற்றினார். காஸ்ட், கிரெடிட், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மற்றும் முதலீடு ஆகிய நான்கிலும் கொச்சார் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அவர் உத்தியின் படியே ஐசிஐசிஐ வங்கி வெற்றிப் பாதையில் பயணித்தது. அதுமட்டுமல்லாமல் வங்கியில் ரீடெய்ல் தொழிலை மேம்படுத்தியதில் கொச்சாரின் பங்கு மிகப் பெரியது என்கின்றனர் வல்லுநர்கள். சமீபத்தில் கூட வங்கியின் வாராக் கடன்களுக்கு சரியாகவும் விரைவாகவும் தீர்வுகளை முன்வைத்திருந்தார். இவரது வங்கிப் பணியை பாராட்டி மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

முறைகேடு புகார்:

சந்தா கொச்சார் எப்போதும் நேரத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர். 6 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி வீட்டுக்குச் செல்வார். ஆனால் அதன்பின் அவரது பணி காரில் தொடங்கும். மிக கடினமான சூழலிலும் தனது நேர மேலாண்மையால் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடும் அசாத்தியம் சந்தா கொச்சாருக்கு உண்டு. இது அவரது சிறு வயதிலிருந்தே கடைபிடித்து வந்திருக்கிறார்.

தற்போது அவர் மீது முறைகேடு புகார் வந்துள்ளது. அனைத்துச் செய்திதாள்களிலும் முறைகேடு என்ற பெயரில் சந்தா கொச்சார் இடம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய போதிலும் வங்கி நிர்வாகம் சந்தா கொச்சார் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. இது 25 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த கவுரமாகவே பார்க்கப்படுகிறது.

மேலாண்மை ட்ரெயினியாக பயணத்தை தொடங்கி பத்ம பூஷன் வரை உயர்ந்த சந்தா கொச்சார் இந்த கடினமான சூழலையும் வென்றுவிடுவார் என எதிர்பார்ப்போம்.

செய்தியாளர் - தேவராஜ் பெரியதம்பி
First published: June 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...