Opinion: விவசாயிகள் போராட்டத்தில் ஒளிந்திருக்கும் சீனாவின் பங்கு

Opinion: விவசாயிகள் போராட்டத்தில் ஒளிந்திருக்கும் சீனாவின் பங்கு

செல்போன் டவர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
    இந்தியா முழுவதும் பரவியிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரிக்கின்றனர் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளையும், அவர்களது வேளாண் பொருள்களையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுரண்டிக் கொண்டிருந்த மண்டிகள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை தருகிறது என்று பெரும்பாலான விவசாயிகள் கருதுகின்றனர். புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் துறையை நீண்ட காலத்துக்கு சரியாக வழிநடத்துவதற்காக கொண்டுவரப்பட்டது.

    அரசு தைரியமாகக் கொண்டுவந்த இந்த சட்டத்துக்கு எதிராக, துரதிருஷ்டவசமாக, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக நடைபெறும் இந்தப் போராட்டத்தின்போது செயற்பாட்டாளர்கள், கம்யூனிஸ்ட்கள், பிரச்சாரம் செய்பவர்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அதன் பெருமையைக் குலைக்கும் வகையில் பிரச்சாரத்தை செய்கின்றனர். தொழில் நிறுவனங்களை அரக்கர்கள் போல சித்தரிக்கும் இந்த முறை சீனாவின் விருப்பத்தை ஒத்தவகையிலும், விவசாயிகளின் கோபத்தின் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்தி உருவாக்கியது போலவும் உள்ளது.



    கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில், உலகம் முழுவதுமுள்ள சீன அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த வளரும் நாடுகளின் சீனத் தயாரிப்புகள் மற்றும் முதலீடுகளைத் தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்குகின்றனர். குறிப்பாக, சீனாவின் 5ஜி தொழில்நுடப் தயாரிப்புகள் அதனால் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
    சீனா ஆப்கள் மற்றும் முதலீடுகளைத் தடை செய்வதில் இந்தியா முன்னிலையில் இருந்துவருகிறது. இதன்மூலம் சீன நிறுவனங்களின் வணிகத்திற்கும், வாய்ப்புகளுக்கும் ஒரு பலமான அடியை கொடுப்பதோடு, மற்ற நாடுகள் சீனாவின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்கு மேடை அமைக்கிறது. சீனா மற்றும் சீனா உதவியுடன் இருப்பவர்களுக்கு விவசாயிகளுடன் இருக்கும் தொடர்புகள் மூலம், மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக மனநிலையை உருவாக்குகின்றனர்.

    ஜெர்மனியில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான செயல்பாட்டில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் என்பது சீனாவுக்கான பதிலடி ஆகும். உறுதியாக, இது பொருளாதார மற்றும் புவிஅரசியல் ரீதியில் சீனா மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொலைதொடர்புதுறை சார்ந்த உற்பத்திப் பொருள்கள் மூலமாக கண்காணிப்பு வலையை உருவாக்கும் எண்ணம் கொண்ட சீனாவின் மேலாதிக்க மனநிலைக்கான சிறந்த பதிலடி.

    முன்னரே திட்டமிட்டபடி, லாஜிஸ்டிக் துறையினர் விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு பரிணாமமாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் பொதுமக்களின் கருத்துகளிலிருந்து கூட்டம் கூடி உத்வேகம் அடைந்து நேர்மையான மற்றும் யாருக்கும் தீங்கற்று போராட்டம் நடைபெற்றது.

    தேசிய உணர்வு மற்றும் பெரும்பான்மை மக்களின் கருத்து என்பது புதிய வேளாண் சட்டங்கள் நல்ல எண்ணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாகும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அரசுடன் இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

    இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் நிஷாகாந்த் ஓஜாவினுடையதாகும். அவர், இணைய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் ஆலோசகராக உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: