EXCLUSIVE| தாலிபான்களின் காலடியில் கிடக்கிறது பாகிஸ்தான், அமெரிக்க உதவிகள் அனைத்தும் வீண்: அம்ருல்லா சலே

தாலிபான்களை எதிர்த்து போராடத் துணிந்த அம்ருல்லா சலே.

ஆப்கான் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டவரும் தாலிபான்களை எதிர்த்து கொரில்லா போரில் ஈடுபட்டவருமான அம்ருல்லா சலே CNN-News18 சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாகிஸ்தானின் தாலிபான்கள் ஆதரவு போக்கை வெகுவாகக் கண்டித்தார்.

  • Share this:
    ஆப்கான் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டவரும் தாலிபான்களை எதிர்த்து கொரில்லா போரில் ஈடுபட்டவருமான அம்ருல்லா சலே CNN-News18 சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாகிஸ்தானின் தாலிபான்கள் ஆதரவு போக்கை வெகுவாகக் கண்டித்தார்.

    தன்னை அதிபராக அறிவித்துக் கொள்ளும் அம்ருல்லா சலே.


    மேலும் அமெரிக்காவின் கணக்கு தப்பானது பற்றியும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பற்றியும் அளவளாவினார் அம்ருல்லா சலே. இந்தப் பிரத்யேக நேர்காணலின் சுருக்கம் இதோ:

    ஆப்கானிஸ்தான் அரசு இப்படி, இந்த வழிமுறையில் வீழ்ச்சியடையும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அஷ்ரப் கனி நாட்டை விட்டு சென்றது குறித்த உங்கள் பதிவுகள் என்ன?

    மிகப்பெரிய அந்தத் துன்பம் குறித்து இப்போது சிந்திக்க ஏதுவான தருணம் இல்லை என்று கருதுகிறேன்.

    ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கான குற்றச்சாட்டை யார் மீது சுமத்துவீர்கள், காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதன் விளைவுகள் என்ன? அதாவது ஆப்கானிஸ்தானுக்கும், உலகிற்கும் என்ன விளைவுகள் ஏற்படும்? ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்குமா?

    Taliban
    தாலிபான்கள்


    தாலிபான்கள் ஒருபோதும் நெருக்கடியில் இருந்ததில்லை என்பது தெளிவு. பாகிஸ்தானை தங்கள் அடிப்படை ஆதரவாக வைத்துக் கொண்டுள்ளனர். புகலிடங்கள் அல்ல. தாலிபான்களின் பிடியில்தான் பாகிஸ்தானே உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஒத்துழைக்க அமெரிக்கா பணம் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா எவ்வளவு பணம் கொடுத்ததோ அந்த அளவுக்கு பயங்கரவாதத்துக்கும், தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் தைரியமும் வளர்ந்தது. எனவே அணு ஆயுத நாடானா பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததையோ ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய கூட்டணிக்கு எதிராக போர் மூண்டதைப் பற்றியோ பேசவே இல்லை.

    மேலும் தோகா பேச்சுவார்த்தைகள் தாலிபான்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை நியாயப்படுத்தியது. வாக்குறுதியை தூக்கி எறிந்து விட்டு உலக நாடுகளை முட்டாள்களாக்கி விட்டனர் தாலிபான்கள். தோகா பேச்சுவார்த்தையின் நோக்கமே உலக நாடுகளின் கருத்தை பிரித்து வைத்து அமைதி பேச்சுவார்த்தையைப் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தத்தான், ஆனால் அப்படி ஒன்று இல்லை.

    தாலிபான்கள்


    3வதாக அமெரிக்காவிடமிருந்து ஆப்கான் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அதாவது சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் இல்லையெனில் உதவிகளை நிறுத்துவோம், ராணுவப் படையை குறைப்போம் என்று ஆப்கானை மிரட்டினர். இவர்களை விடுதலை செய்தால் இவர்கள் முன்களத்தில் நின்று போர் புரிய மாட்டார்களா என்று கேட்டோம். இல்லை மாட்டார்கள் என்றது அமெரிக்கா, ஆனால் கடைசியில் அதுதான் நடந்தது.

    நான்காவதாக எங்கள் அரசில் சூழ்நிலை தெரியாமல் உத்தரவாதமாக அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். இந்த 4 காரணங்கள் மட்டுமே எங்கள் வீழ்ச்சிக்குக் காரணமல்ல பிற காரணங்களும் உண்டு.

    சிறைக்கைதிகளை விடுவித்த தாலிபான்கள்


    அடிப்படை என்னவெனில் அமெரிக்கப் படைகள் சென்றது, நேட்டோ படைகளும் சென்றது. ஆனால் ஆப்கான் மக்கள் எங்கும் செல்லவில்லை. அவர்களைக் காலி செய்ய வைக்க முடியவில்லை. காபூல் விமான நிலையத்தில் நடந்தது பனிமலையின் ஒரு முகடு மட்டுமே. நாடு துன்பத்தில் வீழ்ந்தது, பயங்கரவாதிகள் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். இன்று அபாயம் என்னவெனில் ஆப்கான் மைய வங்கியின் கவர்னராக ஆகியிருப்பவர் தாலிபான்களுக்கும் அல்கொய்தா ஆதரவாளர்களுக்கும் இடையே நிதிப்போக்குவரத்தை சுலபமாக்கியவர், அவர் ஒரு நிதி ஊழல் பேர்வழி. ஹக்கானிகள்தான் காபூலை வழிநடத்துகின்றனர், ஹக்கானிகள் யார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இது ஒரு வெட்கக் கேடு மற்றும் துரோகம், அதில் நான் பங்கு பெற விரும்பவில்லை.

    விரோதிகளான தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் என்பது ஆப்கானிஸ்தான் தான், தாலிபானிஸ்தான் அல்ல என்று உணரும் வரை போராடுவோம்.

    கேள்வி: அமெரிக்க அணுகுமுறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    அவர்கள் செய்ததன் விளைவை அவர்களே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உலக மீடியா அவர்களை எதிர்மறையாக விமர்சிப்பதை பார்க்கின்றனர். அமெரிக்கா ஒரு குளோபல் பவர். மிகப்பெரிய ராணுவ பலம் கொண்டது. அவர்களுக்கு மோசமானதை நாம் விரும்பவில்லை, ஆனால் அவர்களது ஒரேயொரு தவறான அரசியல் முடிவு சூப்பர் பவரையே இழிவு படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது. இது அமெரிக்க ராணுவம் பற்றியோ, ராணுவ உளவுத்துறை பற்றியோ அல்ல. தவறான முடிவு, தவறான அரசியல் பார்வை பற்றியது இப்போது அமெரிக்காவே இதற்கு விலை கொடுத்துள்ளது.

    தாலிபான்கள்


    ஒரு சூப்பர் பவர் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. நான் ஒப்புக் கொள்கிறேன் நான் துணை அதிபராக இருந்தேன், ஆனால் எங்களை ஓரங்கட்டிவிட்டுத்தான் தாலிபான்களுடன் பேச்சு நடத்தினர். எங்களால் அவர்கள் முடிவில் தலையிட முடியாது. நான் 2 ஆண்டுகளாக இப்படியெல்லாம் நடக்கும் என்று எச்சரித்தேன். இப்போது விலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தாலிபான்கள் கடைசியில் வென்று விட்டனர். வாஷிங்டனில் அரசியல் செயலுறுதி இல்லாததால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் எல்லாம் சரியாக உள்ளது. நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். குறைந்தப் பட்ச பாதுகாப்புடன் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பகுதி ஒரு தனித்துவ செல்வாக்கு மிகுந்தது.

    இவ்வாறு நேர்காணலில் தெரிவித்தார் அம்ருல்லா சலே.
    Published by:Muthukumar
    First published: