முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / இந்திய தேசியத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு: டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி

இந்திய தேசியத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு: டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்ற உண்மையான அர்த்தத்தில் இந்தியாவுடன் அம்மாநிலத்தை இணைத்ததில் டாக்டர் முகர்ஜியின் தியாகம் வீணாகவில்லை, நாங்கள் அவரது கனவை நிறைவேற்றி சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்து அவரது கனவை நிஜமாக்கி ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துள்ளோம்.

மேலும் படிக்கவும் ...
  • 3-MIN READ
  • Last Updated :

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசிய என்ற கருத்தை வளர்த்தெடுத்தவர் என்றால் ஒரு பெயர் நம் நினைவுக்கு வருகிறது, அவர்தான் தேச ஒற்றுமையைப் பாதுகாத்தார், நாட்டில் வலுவானமாற்று அரசியலின் விதைகளை விதைத்தவர் அவர்தான், அவர் யார் என்றால் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. டாக்டர் முகர்ஜி சுதந்திரத்துக்குப் பிறகு நீண்ட காலம் உயிருடன் இல்லை. ஆனால் அவரது கொல்கை மற்றும் போராட்டங்கள் இந்திய அரசியல் அரங்கில் அழிக்கமுடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பிரச்னையை டாக்டர் முகர்ஜி முழுதும் புரிந்தவர், அதனால்தான் அதற்கான முழுமையான தீர்வுக்காக பலவந்தமான குரலை அவர் எழுப்பி வந்தார். வங்காளம் பிரிக்கப்பட்ட போத் இந்திய உரிமைகளுக்காகவிம் நலன்களுக்காகவும் வெற்றிகரமாக போராடினார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாடு கொள்கைகளை இந்தியர்கள் மீது திணித்ததை எதிர்த்ததில் டாக்டர் முகர்ஜிக்கு பெரிய பங்கு உள்ளது. இந்தியா, இந்தியர், இந்தியத் தன்மை என்ற அரசியல் மற்றும் சமூக கருத்தியலை வளர்த்தெடுத்து நிறுவியதிலும் டாக்டர் முகர்ஜியின் பங்கு அளப்பரியது. இந்தியா, இந்தியர், இந்தியத் தன்மை என்ர ஒன்றுதான் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்குப் பொருத்தமானதும், நீடித்த வாழ்க்கைக்கான வழிமுறை என்றும் அவர் கருதினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு நேரு அரசில் டாக்டர் முகர்ஜி இந்தியாவின் முதல் தொழிற்துறை மற்றும் விநியோக அமைச்சராக பணியாற்றினார். அவர் நேரு அரசில் இணைந்தாலும் நேரு-லியாகத் ஒப்பந்தத்தில் இந்துக்களின் நலன்கள் புறமொதுக்கப்பட்டதை எதிர்த்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கொள்கைப் பிடிப்புக்கான ஒளிரும் உதாரணமாக இந்த ராஜினாமாவைக் குறிப்பிட வேண்டும். தனது கொள்கைக்கு விரோதமாக அவர் எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. நேரு அமைச்சரவையிலிருந்து விலகியது டாக்டர் முகர்ஜி ஏற்படுத்திய அரசியல் மாற்றுக்கான முன்னெடுப்பாகும்.

இந்தியாவின் சுதந்திரம் வேண்டி பலதரப்பட்ட கொள்கைகள், நம்பிக்கைகள் கொண்டவர்களும், பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் காங்கிரஸ் என்ற குடையின் கீழ் ஒன்று திரண்டது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் வெற்றிடத்தைப் போக்கும் காங்கிரஸுக்கு மாற்று தேவை என்ற விவாதம் தொடங்கியது. இந்த மாற்று அரசியலுக்கான் அமுன்னெடுப்பு கலாச்சார தேசியவாதத்தின் மூலம் தேசிய ஒற்றுமையில் வேர் கொண்ட கொள்கை மூலம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியது, மேலும் திருப்தி படுத்தும் அரசியலையும் இந்த புதிய முன்னெடுப்பு எதிர்த்தது. இந்த விவாதத்தை கொடிபிடித்து நடத்தியவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜிதான், இதுதான் ஜன்சங் பிறந்த வரலாறு.

இவரது சீரிய முயற்சியில்தான் அக்டோபர் 21, 1951-ல் ஜன் சங் உருவானது. தேசியவாதம், இந்தியத் தன்மை ஆகியவற்றின் விதைகள் அடங்கிய அரசியல் கட்சி உருவானது. கடந்த பல பத்தாண்டுகளாக நாம் பல முக்கிய மைல்கற்களை கடந்துள்ளோம், பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளோம், பல கொந்தளிப்புகளிலிருந்து மீண்டு இன்று நாம் இந்த நிலையில் இருந்து வருகிறோம்.

1951-52-ல் முதல் பொதுத் தேர்தலில் ஜன் சங் 3 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி கொல்கத்தா நாடாளுமன்ற தொகுதியை வென்றார். அவரது சிந்தனைகளின் தெளிவு, கொள்கைப் பிடிப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் டாக்டர் முகர்ஜியை லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தன. எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பிரச்னைகளை டாக்டர் முகர்ஜி உரக்க எழுப்பினார். இதன் மூலம் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி குரல் ஆனார் டாக்டர் முகர்ஜி.

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, தகுதியை நீக்க வேண்டும் என்று எப்போதுமே குரல் கொடுத்து வந்தார். ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி பெற வேண்டிய முறை அங்கு இருந்தது இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பெரிய தடையாக இருப்பதாக அவர் கருதினார். இதற்காக நாடாளுமன்றத்தில் அவர் பல முறை குரல் எழுப்பினார். ஜூன் 26, 1952-ல் ஜம்மு காஷ்மீர் குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட டாக்டர் முகர்ஜி கூட்டாட்சி இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் படி எப்படி ஒரு மாநிலத்தின் உரிமைகளும் முன்னுரிமைகளும் சிறப்பு அந்தஸ்துகளும் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டதாக இருக்க முடியும், இது இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைகும் தீங்கு விளைவிக்காதா என்ற கேள்வியை வலுவாக எழுப்பினார். ஜம்மு-காஷ்மீரில் நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற முறையை அவர் கடுமையாக எதிர்த்தார்.

ஜம்முவுக்குள் டாக்டர் முகர்ஜி நுழைந்த போது அவரைக் கைது செய்தனர், இது நாடு முழுதும் பெரிய போராட்டங்களையும் கைது நடவடிக்கைகளியும் உருவாக்கியது. ஜூன் 23, 1953, டாக்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இந்தியத் தாயின் தவப்புதல்வன் டாக்டர் முகர்ஜி, ஜம்மு மருத்துவமனையில் மர்மமான சூழ்நிலையில் மரணமடைந்தார். அவரது உயிர்த்தியாகம் பல விடையற்ற கேள்விகளுக்கு வழிவகுத்தது. ஆனால் அப்போதைய நேரு அரசு அந்தக் கேள்விகளுக்கு பராமுகமாக செயல்பட்டது. டாக்டர் முகர்ஜியின் தாயார் யோகமாயா தேவி ஜவகர்லால் நேருவுக்கு கடிதம் எழுதி தன் மகனின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். ஆனால் இவரது கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டது. இன்று வரை டாக்டர் முகர்ஜி கைது மற்றும் அவரது மரணம் பற்றிய மர்மங்களுக்கு விடை தெரியவில்லை.

டாக்டர் முகர்ஜி எப்போதும் கூறுவது ஒன்றுதான், ‘இந்தியாவில் 2 அரசியல் சட்டங்கள் இருக்க முடியாது, இரண்டு பிரதமர்கள் இருக்க முடியாது, இரண்டு தேசிய சின்னங்கள் இருக்க முடியாது’ என்பார். இந்தத் தீர்மானம்தான் முதலில் ஜன் சங்கின் கொள்கை பிறகு பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையுமானது. டாக்டர் முகர்ஜியின் இந்த தீர்மானம் நிறைவேறுமா என்பது இந்திய மக்களின் மனங்களில் தீரா ஆசையாக இருந்து வருகிறது.

இது ஒரு கொள்கைப் போராட்டம். ஒர் புறம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘திருப்திபடுத்தும் அரசியல்’ மற்றொரு புறம் பாஜக தன் கொள்கையான அரசியல் சட்டம் 370ம் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஜன் சங் முதல் பாஜக வரையிலான பயணத்தில் கொள்கையில் மாற்றமில்லை. அதாவது வலுவான ஒற்றுமையான இந்தியா என்ற கொள்கையில் மாற்றமில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் இரும்பு அர்ப்பணிப்பும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திறன் படைத்த திட்டம் மற்றும் உத்தியினால் 2019 ஆகஸ்டில் அரசியல் சட்டம் 370ம் பிரிவு இனி ஒருபோதும் மீண்டும் வர முடியாத படிக்கு நீக்கப்பட்டது. டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்ற உண்மையான அர்த்தத்தில் இந்தியாவுடன் அம்மாநிலத்தை இணைத்ததில் டாக்டர் முகர்ஜியின் தியாகம் வீணாகவில்லை, நாங்கள் அவரது கனவை நிறைவேற்றி சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்து அவரது கனவை நிஜமாக்கி ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துள்ளோம். பாரத மாதாவின் உண்மையான மகனாக டாக்டர் முகர்ஜி எப்போதும் நினைவுகொள்ளப்படுவார். அவர் உருவாக்கிய அரசியல் இயக்கம் அதன் கொள்கைக்கு உண்மையாக இருக்கிறது.

வலுவான ஒற்றுமையான இந்தியாவுக்காக கடுமையாக பணியாற்றி வருகிறது. டாக்டர் முகர்ஜி ஒரு புனிதமான நோக்கத்துக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளார். இந்த மண்ணின் மைந்தனுக்கு நான் என் வளமான அஞ்சலிகளை செலுத்து கிறேன்.

First published:

Tags: BJP, J.P.Nadda, JP Nadda, Shyama Prasad Mukherjee