திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சியின் முதல் மாநில மாநாடு 1951-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. தேர்தலில் பங்கெடுக்காத இயக்கமாக இருந்த நிலையில், 1956-ம் ஆண்டு மே 17 -20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 2-வது மாநில மாநாட்டில்தான், திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின்போது இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில், தேர்தலில் போட்டியிடலாம் என்று 56, 942 பேர் வாக்களித்தனர். வேண்டாம் என்று 4, 203 பேர் வாக்களித்தனர். இதையடுத்து தொடர்ந்து 1957ம் ஆண்டு முதல் திமுக தேர்தலில் போட்டியிட தொடங்கி, 1967ல் ஆட்சியைப் பிடித்தது. 3-வது மாநில மாநாடு 1961-ல் மதுரை.4-வது மாநில மாநாடு 1967-ல் சென்னை.5-வது மாநில மாநாடு 1975ல் கோவைவில் நடந்தது.
இதற்கிடையே அண்ணா மறைவுக்கு பின் 1970-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்னாளும் எதிர்ப்போம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் ஆகிய ஐம்பெரும் முழக்கங்களை கருணாநிதி முன் வைத்தார்.
6வது மாநில மாநாடு 1990-ல் திருச்சியிலும், 7-வது மாநில மாநாடு 1993-ல் கோவையிலும், 8-வது மாநில மாநாடு 1995ல் திருச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து 1996-ல் திமுக ஆட்சியைப் பிடித்ததது.9-வது மாநாடு 2006-ல் திருச்சியில் நடைபெற்றது. அப்போதும் திமுக ஆட்சியைப் பிடித்தது. 10வது மாநில மாநாடு 2014ல் திருச்சியில் நடைபெற்றுள்ளன.
திமுகவின் 10 மாநில மாநாடுகளில் திருச்சியில் மட்டும் 5 மாநில மாநாடுகள் நடந்துள்ளன. தற்போது 2020ல் ஜனவரி 31ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகளுக்கான மாநாடும் திருச்சியில் நடைபெறுகிறது.
Also See
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.