கட்சி மாறிய ராஜபக்சே... நடுத்தெருவில் சிறிசேனா: என்னதான் நடக்கிறது இலங்கை அரசியலில்?

இலங்கையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ராஜபக்சே தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பிகள் 50 பேருடன் கட்சி மாறியுள்ளார். இது இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

News18 Tamil
Updated: November 11, 2018, 9:55 PM IST
கட்சி மாறிய ராஜபக்சே... நடுத்தெருவில் சிறிசேனா: என்னதான் நடக்கிறது இலங்கை அரசியலில்?
பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே
News18 Tamil
Updated: November 11, 2018, 9:55 PM IST
இலங்கையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ராஜபக்சே தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பிகள் 50 பேருடன் கட்சி மாறியுள்ளார். இது இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு போர் முடிந்து இன்னும் முழுமையாக பத்தாண்டுகள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் அரசியல் யுத்தம் தொடங்கிவிட்டது. உள்நாட்டு யுத்தத்தால் சீர்குலைந்த இலங்கையில், சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான பணிகள் உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால், இலங்கையின் முன்னேற்றம் இன்னும் பின்னுக்கு தள்ளிப்போகும். 2015-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிரதமர் பதவி ரணிலுக்கு தருவதாகக் கூறி, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு சிறிசேனா முன்வைத்த யோசனையை ஏற்ற ரணில், ஸ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளித்தார். மேலும், அதிபரானவுடன் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் தலைவராகவும் சிறிசேனா தேர்வு செய்யப்பட்டார். இதனால் முன்னாள் அதிபர் ராஜபக்சே, அதிருப்தியின் உச்சத்திற்கே சென்றார். இதையடுத்து ராஜபக்சே தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, சிறிசேனா அணியைவிட ராஜபக்சே அணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரம் கொள்கை முடிவுகளில் சிறிசேனா-ரணில் கூட்டணியில் பிணக்குகள் ஏற்பட்டன. இதனால் ராஜபக்சேவின் ஆதரவு சிறிசேனாவுக்குத் தேவைப்பட்டது. இதையடுத்துதான் ரணில் பதவி பறிப்பு, ராஜபக்சேவின் பதவி ஏற்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. சிறிசேனேவின் இந்த முடிவின் பின்னணியில் சீனா இருப்பதாக ரணில் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். எப்படியாவது நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கான ஆதரவை மீட்டெடுப்பது என மெனக்கெட்ட சிறிசேனாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும், அதிபரால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராகவும் இலங்கையில் அரசியல் சூழ்நிலை மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். பதிநான்காம் தேதி நாடாளுமன்றம் கூடி, ராஜபக்சே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தது ஜனநாயகப் படுகொலை என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சிறிசேனாவின் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைக்கும் விதமாக ராஜபக்சே, கட்சி மாறியுள்ளார். இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக சிறிசேனா தேர்வு செய்யப்பட்டதும், 2015-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததும், ராஜபக்சேவுக்கும் சிறிசேனாவுக்குமான பிளவை அதிகரித்தது. இதனால் தனி அணியாக செயல்பட்டு வந்த ராஜபக்சே, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், சிறிசேனா அணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு பெரும் வெற்றி பெற்றார்.

ராஜபக்சேவின் ஆதரவை பெரும் நோக்கில், பிரதமராக இருந்த ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா. இந்த நடவடிக்கை சிறிசேனாவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியதால், ராஜபக்சே தனக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவுக்கு தமிழ் அமைப்புகள் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததால், ராஜபக்சேவின் நிலை மோசமானது. இந்நிலையில் ஸ்ரீலங்க மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 50 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மாறியுள்ளார் ராஜபக்சே. இதனால் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளைவிட செல்வாக்கில் சிறிசேனாவின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. வரும் ஜனவரியில் பொது தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள சிறிசேனாவின் நிலை, ராஜபக்சேவின் இந்த அதிரடி முடிவால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராய்
First published: November 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...