பாடம் 9 | தொழில்நுட்ப அடிமையாதல்

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு முன், நமக்கு ஒரு சிக்கல் இருப்பதை உணர வேண்டியது அவசியம். நம்மில் பெரும்பாலோர் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை அல்லது இதை மறுக்கவும் செய்கிறோம். உங்களிடம் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானதாக இருக்கலாம்.

 1. நான் படுக்கையில் இருந்து எழுந்திருக்குமுன், செய்யும் முதல் விஷயம், எனது தொலைபேசியைச் சரிபார்த்து, அதனுடன் 15 நிமிடங்களோஅல்லது அதற்கு மேற்பட்ட நேரத்தையோ செலவிடுவது.

 2. நான் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கடைசியாக செய்வது எனது தொலைபேசியைச் சரிபார்ப்பது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் அதில் எந்த வீடியோவையும் பார்ப்பது.

 3. நான் எனது நிலைமையை அடிக்கடி அறிவித்து கொண்டே இருக்கிறேன், நான் என்ன செய்கிறேன் என்பதை உலகுக்கு அடிக்கடி சொல்ல ஒரு கருவியாக எனது FB, Twitter மற்றும் Instagram'ஐ பயன்படுத்துகிறேன்.

 4. உணவு உண்ணும்போது, ​​சமூக ஊடகங்களில் அறிவிப்புகளைப் பார்ப்பது உட்பட எனது செல்போனை அடிக்கடி சரிபார்க்கிறேன்.

 5. எனது செல்போனைப் பார்க்காமல் 10 நிமிடங்களுக்கு மேல் என்னால் யாருடனும் உரையாட முடியாது.

 6. எனது செல்போனின் மொத்த பயன்பாடு தினமும் 5+ மணி நேரம் ஆகும்.


இந்த பட்டியல் முழுமையானது அல்ல வெறும் விளக்கம் மட்டுமே . இந்த பட்டியல் நமக்கு உண்மையில் ஒரு சிக்கல் உள்ளதா என்பதை அறிய ஒரு அறிகுறியாக இருக்கலாம். நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம்?

தற்போதைய உலகம் நிலைத்தன்மையைவிட வேகத்திற்கும், தரத்திற்கு பதில் செயல்படுவதிற்கும், அமைதியைக் காட்டிலும் அங்கிங்கு ஓடுவதற்கும் வெகுமதி அளிக்கிறது. அது உண்மையா? அல்லது உலகம் அப்படி இருக்கிறது என்று நாம் கருதுகிறோமா? நாம் உலகை ஆழமாக பார்க்கும்போது, எப்பொழுதும் போலவே இது நிலைத்தன்மை, பொறுமை, அமைதி மற்றும் இதன் மூலமாக தரமான வேலைக்கு தொடர்ந்து வெகுமதி அளிக்கிறது.

உலகம் பெரிதாக மாறவில்லை, ஆனால் நாம் மாறிவிட்டோம்.  தங்களின் விருப்பப்படி பல லட்சகணக்கான மக்கள் நமக்கு முன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கத்துடனும் , மகிழ்ச்சியாகவும், களிப்புடனும் வாழ்ந்திருக்கிறார்கள். எப்படியோ, செயல்பாடே முன்னேற்றமென நாம் குழம்பி, அந்த இடைவிடாத டிரெட்மில்லில் சவாரி செய்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, ஓடிக்கொண்டிருக்கும் இந்த புலி மேல் சவாரி செய்யும் நம்மால், அதை மெதுவாக்கவோ, அதிலிருந்து கீழே இறங்கவோ முடியாது. இந்த கலாச்சாரம் நமது பல வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்ல அதன் ஒரு பகுதி தொழில்நுட்ப அடிமையாதல் ஆகும்.  நாம் இந்த விளையாட்டை விளையாடும் முறையை மாற்றுவதும், நம் வாழ்க்கையை கணிசமாக மெதுவாக்குவதும், நாம்  இங்கு வாழ்வதை உணர்ந்து கொள்வதும் ஒரு சாத்தியமான தீர்வு ஆகும். சொல்வது சுலபம், செய்வது கடினம் வள்ளுவர் சொன்னது போல, சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

 • இளம் குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் அடிமையாதல்:


நான்கு வயது குழந்தை தனது பெற்றோருடன் ஒரு ஹோட்டலில் உணவுக்காக உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பது இயல்பான காட்சி.  பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் செல்போன் திரைகளைப் பார்த்துக் கொண்டிருக்க , குழந்தைக்கு ஒரு tab அல்லது தொலைபேசி வழங்கப்பட்டு , அதில் பெரும்பாலும் ஒரு வீடியோ இயங்கி கொண்டிருக்கும் . இந்த காட்சி உணவின் போதும் தொடர்கிறது. உணவின் போது குழந்தையிடமிருந்து அந்த மின்னணு சாதனத்தை எடுக்க முயற்சித்து பாருங்கள, எல்லா நரகங்களும் இங்கேயே வந்து விடும். பெற்றோர் தாங்கள் கொடுக்க வேண்டிய கவனதிற்கு மாற்றாக தன் குழந்தைகளுக்கு ஒரு திரை  நேரத்தை கொடுப்பது அவர்களின் அலட்சியத்திற்கு தெளிவான சான்று . எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தை அந்தத் திரையைச் சார்ந்தது வாழ ஆரம்பிக்கிறது (Dependency Syndrome). ஒரு குழந்தை சிணுங்கும் அல்லது அழுகிற தருணம், கவனத்தை விலக்க உடனடியாக ஒரு செல்போன்  வழங்கப்படுகிற இந்த காட்சி வீட்டிலும் மீண்டும் தொடர்கிறது .

பதின்வயதினருடன் கதையைப் பார்த்தால், பெரும்பாலும் இது தன் நண்பர்கள் தரும் அழுத்தத்தினாலும்  , உடனடி மனநிறைவின் கலாச்சாரம் ஆகியவற்றின் தொடக்கமாகும். மோசமான பெற்றோரின் தவறான  பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் சிந்தனை அற்ற தன்மை ஆகியவை கிரியா ஊக்கியாக செயல்படுகின்றன . வாழ்க்கையைப் பற்றி ஒரு டீனேஜரின் மோசமான பார்வையும் ஒரு காரணமோ? ஒரு பெரிய சுவற்றில் காண வேண்டிய சித்திரமான வாழ்க்கையைப் பார்க்க டீனேஜருக்கு உதவாத  பள்ளிகளும் , பெற்றோர்களின் இயலாமையும் மற்றும் கடைசியாக டீனேஜரை தனிமையாக அவர்களின் உலகத்தில்  வளர அனுமதிப்பதும் அவர்களை வேறுபட்ட வட்ட பாதையில் செலுத்தி தொழில்நுட்ப அடிமைகளாக மாற்றி விடுகிறது .

இளம் பருவத்தினரைப் பொறுத்தவரையோ,   அவர்கள் உருவாகும் ‘வேரிலிருந்து விலகியிருக்கும் தன்மையும்'  அவர்கள் வாழ்க்கையிலிருந்து விலகி இருப்பதும் ஒரு பெரிய காரணியாகும். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டுமெனவும், பார்ப்பதற்கு மோசமாக இருப்பதை தவிர்க்கும்  அவர்களின் உணர்வும்  மற்றொரு காரணம். பல இளம் பருவத்தினர் வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, வேறு எதற்கும் மேலாக உடனடி மனநிறைவுக்கு வெகுமதி அளிக்கும் உலகில் வாழ்கின்றனர்.

 • இந்த போதை பழக்கத்திலிருந்து வெளியேற சில தெரிவுகள் 1. இந்த சிக்கலை தீர்க்க இப்படித்தான் செய்ய வேண்டுமென விதி இல்லை. நான்கு வயது, டீன், இளம் பருவத்தினர், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி என அனைவருக்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவை. செல்போன்கள் ஒரு அவசியமான தீமை என்றும் நம் வாழ்வின் ஒரு பகுதி என்றும்பெரியவர்களும் மூத்தவர்களும் முதலில் நம்ப வேண்டும். நம் வாழ்க்கையின்  மையப்பகுதியான  ‘ஒரே  விஷயம்’ என்று இது இருக்க முடியாது.

 2. நாம் அனைவரும் நமது முன்னுரிமைகளை சரியாக உணர வேண்டும். எனது தொழில் எங்கு தொடங்குகிறது மற்றும் எங்கு முடிவடைகிறது? என் வாழ்க்கைக்கு முக்கியமானது என்ன? என் வாழ்க்கையின் பேரம்பேசமுடியாத பகுதி என்ன? எனது கடமை என்ன - எனது குடும்பத்திற்கு, எனது வேலைக்கு, சமூகத்திற்கு? புகழ்பெற்ற கிரேக்க அறிவுரை கூறுவது போல், “ஆராயப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது”. முன்னுரிமைகள் அமைக்கப்பட்டவுடன், அதன்வரிசையில் நமது நேரத்தையும் சக்தியையும் ஒதுக்க முனைகிறோம்.

 3. ஒரு நாளில் “செல்போன் இல்லா நேரம் ” (உங்கள் நடைமுறை சிரமங்களின் அடிப்படையில் உங்கள் நேரத்தை வரையறுக்கலாம் . இது தொடர்ந்து மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்) மற்றும் ஒரு வாரத்தில் “செல்போன் இல்லா நாள்” ஆகிய இரண்டு விஷயங்களைச் செய்வதைஒரு பழக்கமாக மாற்றவும். (ஒரு நாள் தொழில்நுட்பமில்லாத நாளாக இருக்க வேண்டும், உள்வரும் அழைப்புகளை மட்டுமே பெறுவது உங்கள் தேர்வாக இருக்கலாம்). இதைச் செய்வதன் மூலம், முழு மூளையும் வித்தியாசமாக மாற்றியமைக்கப்படுகிறது (plasticity). அதிக தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மோசமான கவன குறைவும் ஏற்படுவதால், நம் நரம்பியல் பாதைகள்தடுமாறி சிதைக்கப்படுகின்றன. நாம் அதைத் தடுக்க வேண்டும்.

 4. செல்போன்களை உங்கள் படுக்கையறைகளிலிருந்து விலக்கி வைப்பதை ஒரு பழக்கமாக்குங்கள் (ஒன்று, நீலத் திரையை தவிர்ப்பதன் மூலம் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும், மற்றொன்று, ஒரு நாளில் செல்போனை முதல் மற்றும் கடைசி விஷயமாக பயன்படுத்தாத புதிய பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள்)

 5. உணவின் போது உங்கள் செல்போன்களைத் திருப்பி வையுங்கள் (அவற்றை விலக்கி வைப்பதே சிறந்தது) மற்றும் யாரோ ஒருவருடன் உரையாடும்போது உங்கள் சமூக ஊடக உள்ளீடுகளை சரிபார்க்க உங்கள் செல்போனை வெளியே எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எதிர்க்கவும்.

 6. செல்போன் பயன்பாட்டிற்கான நேரத்தைக் கட்டுப்படுத்தும் பயன்பாடுகளின்உதவியை மேற்கொள்ளலாம். எங்கள் செல்போனில் உள்ளமைக்கப்பட்ட வழிமுறைகளை அதன் அமைப்புகள் பக்கத்தில் (settings page) பயன்படுத்துவதன் மூலம் நம்பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் கால அளவை கட்டுப்படுத்தலாம்.


நாம் எடுக்கும் முயற்சிகளை விட, இந்த உண்மையை நாம் சரியாகவும், உள்வாங்கவும் வேண்டும் - ‘உலகத்திற்காக நாம் இல்லை, நமக்காக  உலகம் இல்லை. தேவைப்படும்போது, ​​நான் உலகத்திற்காக இருக்கிறேன், உலகம் எனக்காக இருக்கிறது ’. நம் கருத்து முக்கியமானது மற்றும் நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் நாம் கேட்க வேண்டும் என்ற இந்த மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். பிரபஞ்சம் தேவைப்படும்போது நம்மைக் கேட்கும்.

இது நாம் நம்மீது வைத்திருக்கும் சுய முக்கியத்துவம் பற்றிய கருத்தை நீக்குகிறது; இதை நாம் குணப்படுத்தினால், எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாம்.
Published by:Sankar
First published: