பாடம் 8 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்

அலுவலக நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள் : வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும்போது வாட்ஸ்அப், மெயில் உள்ளிட்ட சக பணியாளர்களின் குழுவுடன் தகவல்தொடர்புகளைத் திறந்து வைக்கவில்லை என்றால், நீங்கள் அதில் ஒரு பகுதியாக இல்லாதது போல் இருக்கும். எனவே தொடர்பிலேயே இருங்கள். போன் கால்ஸ், மெயில்ஸ், ஆபீஸ் மீட்டிங்ஸ் மற்றும் சோசியல் மீடியாக்களில் என அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்று நீங்கள் முன்னர் உங்கள் ஆஃபீஸில் மகிழ்ச்சியாக கழித்த நேரத்தை மற்ற ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சாதாரணமாக பேசும் பொழுது அலுவலகத்தை பற்றி மட்டும் அல்லாமல் பொதுவான விஷயங்களைப் பற்றியும் வார இறுதியில் நீங்கள் பார்த்த படம் அல்லது பார்க்க போகிற படம் பற்றி பேசுங்கள்.

"அடிமையாதல் என்ற ஒரு வார்த்தை வழக்கமாக புகையிலை, மது மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடையது. இது பாதகமான விளைவுகளை தரும் என்பதையும் மீறி மூளையை கட்டாயமாக வெகுமானங்களை தேடும் தூண்டல்களை  நோக்கி உளவியல் ரீதியான கட்டாய நடத்தையில் செலுத்தும்  இயல்பை கொண்டுள்ளது"

 • News18
 • Last Updated :
 • Share this:
நம் பாக்கெட்டுக்குள் எடுத்துச் செல்லும் இச்சிறிய செவ்வக மின்னணு துண்டு உண்மையிலேயே ஒரு அதிசய சாதனம். இதை வைத்து உணவை ஆர்டர் செய்யலாம், நமக்கான ஒரு காரைப் பெறலாம், நம் முழு வாழ்க்கையையும் புகைப்படங்களில் படம் பிடித்து எப்போதைக்குமென சேமித்து வைக்கலாம், உலகின் எந்த புள்ளியுடனும் நம்மை இணைக்கலாம், நம் அன்புக்குரியவர்களை ஒரு வீடியோவில் ஒரு நொடியில் பார்க்கலாம், டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம், நம் மளிகை பொருட்களுக்கு பணம் செலுத்தலாம், நம் பண வழங்கீடுகளை தானியங்குபடுத்தலாம்; சுருக்கமாக அதனால்  எல்லாவற்றையும் செய்ய முடியும். அதனால் இப்பொழுது எதை செய்ய முடியாதோ, அந்த தயாரிப்பும் நம்மை வந்தடையும்  பாதையில் உள்ளது.

2019 டிசம்பரில் செய்யப்பட்ட ‘ஸ்மார்ட்போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கங்கள்’ குறித்து மேற்கொள்ளப்பட்ட விவோ - சிஎம்ஆர் கணக்கெடுப்பு எதிர்பார்த்தபடி இவ்வரிகளில் தன் கண்டுபிடிப்புகளை சொல்கிறது

 1. சராசரி இந்தியர்கள் தங்கள் விழித்திருக்கும் நேரத்தின் 1/3 பகுதியை அலைபேசியில் செலவிடுகிறார்கள், இது ஆண்டுக்கு 1800 மணிநேரம் ஆகும்

 2. முன்னைவிட 30% குறைவான மக்கள் தங்கள் குடும்பத்தையும், அன்பானவர்களையும் ஒரு மாதத்திற்கு பல முறை சந்திக்கிறார்கள் (10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட)

 3. மூன்று பேரில் ஒருவர் தங்களால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அலைபேசியை சரிபார்க்காமல் 5 நிமிடம் கூட உரையாட முடியாது என்று நினைக்கிறார்கள்.

 4. ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால் அல்லது வளர்ந்தால், அது தங்கள் மன அல்லது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று பதிலளித்தவர்களுள் 73% பேர் ஒப்புக்கொள்கிறார்கள்.

 5. 5'இல்3 பேர் மொபைல் ஃபோனிலிருந்து தனியாக வாழ்வது முக்கியம் என்றும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் என்றும் கூறுகிறார்கள்.


இதனுடன் சேர்த்து, பேஸ்புக் (FB) வெளிப்படுத்திய தகவல்படி, சராசரியாக மாதந்தோறும் 2.32 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. இப்போது ஒவ்வொரு மாதமும் சுமார் 2.7 பில்லியன் மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சரைப் பயன்படுத்துகின்றனர் என்றும், 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக மேற்சொன்னவற்றுள் எதாவது ஒன்றையாவது பயன்படுத்துகிறார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தளத்தில் வசிக்கும் எல்லா வயதினரையும் சேர்த்தால் மனிதகுலத்தின் 1/3 பகுதியாகும்!

உலகத்தை நகர்த்துவதற்கும், செழிப்பாகா வளர்ப்பதற்கும் இவ்வளவு செய்த தொழில்நுட்பம், அது முதலில் இணைக்க முயன்ற அதே மானுடத்தை உடைக்கக்கூடும். நம் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களில் பெரும்பாலோர் ‘digital zombies’ ஆகிவிட்டனர், மேலும் உலகின் மலிவான தரவு பயன்பாட்டுத் திட்டங்களில் ஒன்றை இந்தியா கொண்டுள்ளதால் நாம் மிகவும் ஆபத்தான மண்டலத்திற்குள் நுழைகிறோம் - தொழில்நுட்பம் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்க போகிறது. நோக்கியா தனது வருடாந்திர எம்பிஐடி அறிக்கையில், ஒரு சராசரி இந்தியர் மாதத்திற்கு 11 ஜிபி தரவைப் பயன்படுத்துகிறார் என்றும் இது முந்தைய ஆண்டை விட 47% ஆபத்தான உயர்வு என்றும், தரவுகளின் பெரும்பகுதி வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே செலவிடப்படுவதாகவும் கூறுகிறது.

 • தொழில்நுட்பமும் அடிமையாதலும் :


அடிமையாதல் என்ற ஒரு வார்த்தை வழக்கமாக புகையிலை, மது மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடையது. இது பாதகமான விளைவுகளை தரும் என்பதையும் மீறி மூளையை கட்டாயமாக வெகுமானங்களை தேடும் தூண்டல்களை  நோக்கி உளவியல் ரீதியான கட்டாய நடத்தையில் செலுத்தும்  இயல்பை கொண்டுள்ளது.   ‘டோபமைன்’ எனப்படும் மூளையில் உள்ள வேதிப்பொருள் அந்த உடனடி மனநிறைவை உருவாக்குகிறது, மேலும் இந்த நடத்தை தூண்டுதல்-டோபமைன் உருவாகுதல் - செயல்- தூண்டுதல்கள் என்ற முடிவற்ற சுழற்சியை உருவாக்குகிறது. ஆபத்தான வகையில் இந்த நடத்தை நம் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நமக்குள் நுழைந்துள்ளதோடில்லாமல்,  ‘குடிமயக்கம் ’ தரும் உடனடி திருப்தி போன்றும் மற்றும் ‘சுய முக்கியத்துவம்’ உணர்வுக்காக ஏங்குபவர்களாக நம்மை மாற்றியுள்ளது .

 • சமூக ஊடகங்களின் எழுச்சி:


தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களின் பின்தொடர்வே சமூக ஊடகங்களின் உயர்வாகும். ஆரம்பத்தில் ஒரு சமூக தொடர்பின் கருவியாக மட்டுமே கருதப்பட்ட பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை நம் வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு விட்டன. ஒரு கட்டத்தில் நிறுவனங்கள் வேண்டுமென்றே ‘ஹூக்-ஐ  (நிரர் ஈயலின் புத்தகம் ‘ஹூக்ட்- Hooked- ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நுண்ணறிவை வழங்கும்) சுற்றி தங்கள் யுக்திகளை உருவாக்கியதுடன், பயனர்களை மீண்டும் மீண்டும் தங்கள் தளத்திற்கு வரச் செய்தன . தூண்டுதல்-செயல்-வெகுமதி என்ற கருத்தைச் சுற்றி நம் பழக்கங்களை மாற்றியமைக்க இந்த தயாரிப்புகள் அனைத்தும் நாம்  முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் நம் கருத்துக்கள் முக்கியம் என்றுமான ஒரு தவறான உணர்வை உருவாக்கின . ஒரு முக்கியமான விஷயம் குறித்து நாம் கருத்துத் தெரிவிக்கிறோம் என்று நம் மனதில் நினைத்துக்கொண்டு, ஒரு பிரபலமானவர் அணிந்திருக்கும் புது உடையை பற்றியோ, சில திரைப்பட நட்சத்திரங்களின் நாயை பற்றியோ, இப்படியே உலகில் உள்ள எல்லாவற்றையும் பற்றி கருத்து தெரிவித்து தெரிவித்து காலப்போக்கில் சீரழிந்துவிட்டோம்.

 • நமக்குண்டான பாதிப்பு:


நாம் மிகவும் எரிச்சலடைந்தவர்களாகவும், அதிக கருத்துடையவர்களாகவும், கருத்து துருவமுள்ளவர்களாகவும், பக்கச்சார்பானவர்களாகவும் மாறியது மட்டுமல்லாமல், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் மிகவும் சிக்கலாக்கியுள்ளோம். நம்மில் பெரும்பாலோர் செல்போன்களின் திரையைப் பார்க்காமல் ஒரு உணவை கூட சாப்பிட முடியாது. நம் அன்புக்குரியவர்களுடன் 5 நிமிட இதயத்துடன் இதயம் கூடும் ஒரு உரையாடலைப் செய்யக்கூடிய நிலையில் நாம் இல்லை. இந்த கவனப்  பற்றாக்குறையால், நம் தொழில்முறை வேலைகளின் தரம் புது தீர்வுகளை உடைய முன்னேற்றங்களை உருவாக்க முடியாமல் பாதிக்கப்படுகிறது. மேலும், சாலையில் ஏற்படும் பெரும்பாலான விபத்துக்களுக்கு இப்போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதே காரணம். ஒன்று நாம் கொல்லப்படுகிறோம் அல்லது நமக்கு எதிரே வந்த அப்பாவியை கொன்றுவிடுகிறோம் . இதன் மற்றொரு நேரடி விளைவு என்னவென்றால், நம் தனிப்பட்ட வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படுவதால், கணவன் மனைவியர் இப்போது உண்மையிலேயே மனமோடு இணையாமல் விவாகரத்துகளின் எண்ணிக்கையும்  அதிகரிதுள்ளது . உலகெங்கிலும் உள்ள 1000 நபர்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று நம் FB நண்பர்கள் பட்டியல் கூறினாலும், இவை அனைத்தும் மேலோட்டமானவையே, இவை எதையையும் குறிக்காது .

 • வெளியேற வேண்டிய நேரம்?


உலகெங்கிலும், இந்த தொழில்நுட்ப போதையிலிருந்து வெளியேற மக்கள் மறுவாழ்வு மையங்களுக்கு வருகிறார்கள். இந்த கதையின் சோகமான பகுதி என்னவென்றால், பலருக்கு இன்னும் இது கடுமையான பிரச்சினை என்று ஒரு தெளிவு இல்லை. தங்களைச் சுற்றி எதுவும் நடக்காதது போல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து சுற்றித் திரிகிறார்கள்.

நம்முடைய தொழில்நுட்ப போதையின் அளவை அடையாளம் காணும் நேரம் இது. நம் தொலைபேசி பயன்பாட்டை அளவிடத் தொடங்கினால், நம்மில் பலருக்கு இது 5 மணிநேரங்களுக்கு மேல் இருக்கும். நாம் எந்த சமிக்ஞை இல்லாவிட்டாலும், இதற்கு அடிமையாக இருப்பதால், பல முறை வாட்ஸ்அப் திரையைத் திறக்கிறோம். கணம் கணம், நாம் உண்ணும் உணவு அல்லது நாம் வாழும் வாழ்க்கை அல்லது முக்கியமாக நம் கருத்துக்களை மிகவும் சிக்கலான நம் கட்டைவிரலால், நம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் உலகத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம், ஏனென்றால், நாம் பின்தங்கிவிடுவோம் என்ற பயம் உண்மையிலேயே உள்ளதால், நாம் நம் தொலைபேசியில் ஒட்டிக்கொள்கிறோம். இவை அனைத்தும் போதைப்பொருள் பயன்பாட்டின் தெளிவான அறிகுறிகள். நாம் தொடர்ந்து இப்படி வாழ்ந்து, சரிசெய்ய முடியாமல் நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டால், 2020 க்குப் பிந்தைய உலகத்தைk ‘போஸ்ட் டிஜிட்டல்’ உலகம் என்று அழைக்க வேண்டியிருக்கலாம்.

வாருங்கள் தொழில்நுட்ப போதைக்கு எதிராக போராடுவோம், ஆனால் அதற்கு முன் உள்நோக்கி பார்த்து நமக்கு ஒரு பிரச்னை இருப்பதை ஏற்றுக்கொள்வோம். நாம் மாற விரும்புவதற்கான முதல் அறிகுறி இது!

இந்த போதை பழக்கத்திலிருந்து வெளியேற சில நடைமுறை உதவிக்குறிப்புகள் பற்றியும் நாளை விவாதிக்கலாம்.
Published by:Sankar
First published: