Home /News /special-articles /

பாடம்-6: கொடுத்துப் பழகுவோம்

பாடம்-6: கொடுத்துப் பழகுவோம்

கொடுத்தல்

கொடுத்தல்

நம் பூமி பல்வேறு வகையான உயிரினங்களை ஆதரிப்பது வாழ்க்கையின் ஒரு அதிசயம். இந்த கிரகத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றுவதற்காக நாம் நம்முடைய எதிர்காலத்திற்காக திட்டமிடுவதும், மனித உயிரினங்களை பரப்புவதற்கு உணர்வுபூர்வமாக இனப்பெருக்கம் செய்வதும், விரிவடைந்துகொண்டிருக்கும் ஒரு பந்தயத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வதும் மிகவும் தனித்தன்மையானதாக தெரிகிறது. எப்படியோ இதை ‘வாழ்க்கை’ என்று வரையறுக்கிறோம். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இந்த வாழ்க்கை சிறந்ததாகவும், வேகமாகவும், உயரமாகவும் மேலெழும்ப வேண்டும் என்ற தீராத ஒரு தூண்டுதலாக மாறிவிடுகிறது. தனியே உட்கார்ந்து நாம் செய்வது (செய்யக்கூடாதது?) எல்லாவற்றையும் பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் இது. அதை இன்று செய்வோம்.

ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம். முன்னொரு நாள் ஒரு ராஜா இருந்தார். அவர் தொலைதூர தேசத்தில் வாழ்ந்தார். செல்வமும் இராணுவ வெற்றிகளும் இருந்தபோதிலும், அவர் நீண்டகாலமாக மனச்சோர்வடைந்து இருந்தார். ஒரு குறுகிய காலம் மட்டுமே ஒவ்வொரு புதிய போரும் கைப்பற்றிய நிலமும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஒரு நிலத்தில் கால் வைத்து ஒரு பூமியின் துண்டு தனக்குரியது என்பதை அறிந்த தருணத்தில் அவர் மகிழ்ச்சி மறைந்தது. அவர் வாழ்க்கையின் அர்த்தத்தை 40-களின் நடுப்பகுதியில் இழந்தார். அவரது புத்திசாலித்தனமான அமைச்சர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

ராஜ்யத்திலும் அதைச் சுற்றியுள்ள அறிவார்ந்தோரிடம் கலந்தாலோசித்த பிறகு, அவர்கள் தீர்வைக் கண்டார்கள் - என்றைக்கு ராஜா மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதனின் சட்டை அணிவாரோ அன்றே மகிழ்ச்சி அடைவார். இது முதலில் கேலிக்குரியதாத இருந்தாலும், அவரது ஆட்கள் அனைவரும் அந்த சட்டையைத் தேடிச் சென்றனர். பணக்காரர், ஏழை, புத்திசாலி, விவேகமற்ற, அழகான, அவலட்சணமானவர் என கிட்டத்தட்ட அனைவரையும் சல்லடைபோட்டுத் தேடியும் அவர்களால் அப்படியொரு மனிதரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் கைவிடவிருந்தபோது, சாலையில் மனநிறைவுடன் நடந்து செல்லும் ஒரு மகிழ்ச்சியான மனிதரைக் கண்டார்கள். அவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரை நோக்கி விரைந்தனர். ஆனால் ஐயோ, அவர்களுக்கு நம்புவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது - மகிழ்ச்சியான மனிதன் சட்டை அணியாமல் மகிழ்ச்சியாக இருந்தான்!

இந்த பாரத நிலம் ஒரு குறிப்பிட்ட வழியில் பிறந்தது. அதில் சத்தியத்தை தேடுபவர்கள் இருந்தனர். வாழ்க்கையின் அழுத்தமான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க தனக்குள்ளேயே ஆழமாகப் பார்த்தவர்கள் அவர்கள். அதனால்தான் இளவரசர் சித்தார்த்தா (கிமு563-கிமு483) தனது அரண்மனையையும் அவரது இளம் குடும்பத்தையும் விட்டு அறிவொளியைத் தேடினார். கௌதம புத்தராக மாற அவர் பல ஆண்டுகளாக போராடினார். வலிமைமிக்க சக்திவாய்ந்த மன்னரும், அசோக பேரரசரின் தாத்தாவுமான பேரரசர் சந்திரகுப்த மௌரியா (பொ.ச.மு. 321-298), தனது வெற்றிக்கு பின், அனைத்தையும் கைவிட முடிவு செய்து, தெற்கு கர்நாடகாவின் ஷ்ரவனபெலகோலாவுக்கு ஒரு துறவியாக நடந்து வந்தடைந்தார் . அவர் தனது கடைசி நாட்களில் உணவுக்காக யாசகம் ஏந்தி , கடைசியில் ‘சல்லேகானா’ என்ற சமண பாரம்பரியத்தின்படி ப்ராணத்யாகம் செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பேரரசர் அசோகர், அவர் வெற்றி கொண்ட கலிங்கப் போருக்குப் பின் தனது வாழ்க்கையின் அணுகுமுறையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டார் .

நாம் இப்போது என்ன செய்கிறோம்?

நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையின் தேரில் சக்கரங்களாக மாறிவிட்டோம். எப்போதும் செயலில் இருக்க முயற்சித்துக் கொண்டு, நாம் அதை முடிந்தவரை சுழற்றுகிறோம். நம்முடைய சிறந்த கல்லூரி பட்டங்களோடு நிறுத்தாமல் மேன்மேலும் பெற இன்னமும் கடினமாக உழைக்கிறோம் . வாழவும் இறக்கவும் ஒரு வீடே போதுமென்பதில்லை, மென்மேலும் இன்னும் தேவையாக இருக்கிறது . ‘மேலும் மேலும்’ என்ற இந்த கருத்து நம்மை பேராசை மற்றும் எதிர்பார்ப்புகளின் சுழற்சியில் தள்ளியுள்ளது. வாங்குவது நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பி நாம் அதற்கு அடிமையாகிவிட்டோம். அதிகமான ஆடைகள், அதிகமான புத்தகங்கள், அதிக செல்போன்கள் மற்றும் இறுதியாக அதிகமான துயரங்கள் அந்த வாங்குதல்களால் இலவசமாக வருகின்றன. சுவாசிப்பதையும், உயிருடன் இருப்பதையும் கொண்டு நாம் வாழ்கிறோம் என்று நம்புகிறோம். நாம் எப்படி வாழ்கிறோம் என்றால் - இந்த பூமி நமக்கு வழங்கிய வளங்களை அதிக அளவில் பயன்படுத்தி , மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லாமல், நம்முடைய குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அடுத்த ஏழு தலைமுறைக்கான செல்வத்தை உருவாக்குவது என்று நாம் வாழ்கிறோம்!

இதுவா செல்லவதற்கான வழி?

முன்பை விட இப்போது புத்தரின் செய்தியான ‘தம்மா’ அவசியமாகி உள்ளது. மிதமானதாக இல்லாத நாம் செய்யும் எதுவும் வலியையும் துயரத்தையும் தரும். அதிக செல்வம் என்பது குறைந்த செல்வம் போன்றே வலியைக் கொண்டுவரும். இதை, ஒருவர் மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். மிகுதிகளில் வாழ்ந்த முந்தைய அமெரிக்க தலைமுறையினரைப் போலவே வாழும் நாம் சரிவை நோக்கிப் போகப்போகின்ற ஒரு உலகத்தை உருவாக்கப் போகிறோம். கடந்த சில ஆண்டுகள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடையிலான இடைவெளியைப் பொறுத்தவரை மனிதகுலத்திற்கு மிக மோசமானது இருந்தது . ‘கவனிப்பதற்கான நேரம்’, என்ற ஆக்ஸ்பாமின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பணக்கார 1% மக்களிடம் 70% ஏழைகளை விட நான்கு மடங்கு செல்வம் உள்ளது . இது ஆபத்தானது இல்லையா? நம் மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் இரக்கமின்றி குவித்து கொண்டே இருக்க, மறுபுறம் ரேஷன் கார்டின் எந்த நிறதிற்கு இப்போது மாற வேண்டும் என்று இன்னொருவர் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்? முதல் 1% அல்லது முதல் 10% இல் உள்ளவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் எந்த வகையான நாட்டில் வசிக்கப் போகிறார்கள்? இதே நாட்டில், கீழே உள்ள 30% அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்படுகிறார்கள். அவர்கள் தாங்கள் ஒருபோதும் வியர்த்து அடையாத ஒரு செல்வத்தில் வாங்கிய கார்களின் ஜன்னல்களை உருட்டிக்கொண்டு செல்ல, மற்றொருபுறம் ஜன்னல்களின் வெளியே மற்றவர் துன்பத்தில் இருப்பதை காணுவது ஒரு மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமா?

இது அந்த ராஜாவின் சட்டை போன்ற எந்தவொரு நிலையான தீர்வுமற்றது. குறைந்தபட்சம் இப்போதிலிருந்தாவது நம்முடைய வாழ்க்கையை எப்பொழுதும் மிகவும் விழிப்புணர்வுடன் வாழ்வது நல்ல முடிவாகும். இந்த கிரகத்தில் வாழும் சக மனிதர்கள் கருத்துடனும், அர்த்தமுள்ள அணுகுமுறையுடனும் இருக்க வேண்டும். நம்மால் முடிந்தவரை அரசாங்கத்தை ஆதரிப்பதும், இதுபோன்ற காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்குவதும் சிறந்தது. எப்போது நம் தொழிற்சாலையை, நம் நிறுவனத்தை மறுதொடக்கம் செய்வது மற்றும் கல்லாவை மீண்டும் திறப்பது என்ற எல்லா எண்ணங்களையும், இப்போதைக்கு நம் ‘செயல் உணர்வையும்’ நிறுத்துவது மிக அவசியம். உண்மையான உணர்வுடன், கஷ்டப்படும் மக்கள் அனைவரையும் பற்றி சிந்திக்கவும், அவர்களுக்கு உதவ நினைப்பதற்குமான நேரம் இது. வாழ்க்கையின் உண்மை இதுதான் - நாம் ஒன்றுமில்லாமல் பிறந்தோம், ஒன்றும் இல்லாமல் இறப்போம். அசோகர் சக்கரவர்த்தி அவரது மரணப்படுக்கையில் இருந்தபோது, புத்த சங்கத்திற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது அமைச்சர்கள் அவருக்கு மாநில கருவூலத்திற்கு அனுமதி மறுத்தனர். அவர் தனது தனிப்பட்ட செல்வத்தை கொடுக்க முயற்சித்தபோது, அதுவும் தடைசெய்யப்பட்டது. வரலாற்றின் கூற்றுப்படி இறுதியாக, அவர் இறப்பதற்கு சற்று முன்பு, தன்னிடம் வைத்திருந்த ஒரே ஒரு அரை கடுக்காயை, அவர் தாராளமாகவும் நன்றியுணர்வுடனும் அதை சங்கத்திற்கு தனது இறுதி நன்கொடையாக வழங்க முடிந்தது.

Also see:
Published by:Karthick S
First published:

Tags: CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி