முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / நான் வியந்து பார்த்த பெண்மணி ஜெயலலிதா.. பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் பகிர்வு

நான் வியந்து பார்த்த பெண்மணி ஜெயலலிதா.. பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் பகிர்வு

பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன்

பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன்

ஒரு நாட்டில் போர் சூழல் ஏற்பட்டால் பெண்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர் என்று பத்திரிக்கையாளர் லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பெண் செய்தியாளராக பணி செய்து வருகிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். தீவிரமான அரசியல் கட்டுரைகளால் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட அவர், தன்னுடைய செய்தியாளர் அனுபவங்கள் குறித்து நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், ‘இலங்கையில் போருக்கு பின் அங்கிருக்கும் பெண்களை பார்க்கும் போது மிகவும் கவலை ஏற்பட்டது. உலகில் எந்த பகுதியில், போர் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது, பெண்களும் குழந்தைகளும்தான். ஒரு உள்நாட்டு போர் என்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும்.

பெண்கள் பொதுவாக பொறுப்புகளை அதிமாக எடுத்துக்கொள்கிறார்கள். எனவே பெண்களை போர்கள் அதிகம் பாதிக்கிறது. இலங்கைப் போருக்கு பின்தான், ஆனந்தி சசிதரனை முதல் முறையாக சந்தித்தேன். அவர் என்னிடம் முதலில் கேட்டது, இலங்கை பெண்களுக்கு இந்தியாவில் இருக்கும் என்.ஜி.ஓகளின் உதவி கிடைக்குமா என்றுதான். அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால், அடுத்தநாள் அங்கிருந்த பெண்களை சந்திக்கும் போதுதான் புரிந்தது, இலங்கை போருக்கு பின் பெண்களின் நிலை என்ன என்று.

மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன்

இலங்கையில், ஜெகதாம்மாள் என்ற பெண்மணியை சந்தித்தேன். முள்ளிவாய்க்காலில் இருந்த அவருடைய வீட்டின் ஒரு பகுதி இடிந்த நிலையில் இருந்தது. அவர் தங்கியிருந்த பதுங்கு குழியை காண்பித்தார். “பதுங்கு குழியில், இருந்த ரொட்டி காலியானதால் எடுப்பதற்காக வெளியே சென்ற மகன் திரும்ப வரவில்லை. அவரை தேடி வந்த மருமகளும் திரும்ப வரவில்லை. பேரன் மட்டும் இருக்கிறான். மகள் வெளிநாட்டில் உள்ளார். அவரிடம் பேரனை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் பணம் இல்லை. வங்கி கணக்கில் யார் பணம் அனுப்பினாலும், கண்காணித்து முடக்குகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

அவர்களது பேரனின் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. அதில், அம்மா, அப்பா, மற்றும் மற்றொரு குழந்தையும் இருந்தனர். அந்த சிறுவன் தன் அம்மா அப்பா திரும்ப வருவார்களா என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

இதில் இப்படி என்றால், அதிலிருந்து கொஞ்சம் கூடமாற்றமில்லை, சிரியாவில். அங்கு இன்னும் கொடூரமானது. ஒரு விரலை மட்டுமே காட்டுவர், அதாவது ஒரே ஒரு கடவுள் மட்டுமே என்று அந்த பெண்கள் நம்பியிருந்தனர். பெரும்பாலும் உக்ரைன், பாலஸ்தீனம், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாட்டினரும் இருந்தனர். அதில், இந்தியாவிலிருந்து பாத்திமா என்ற பெண்ணை சந்தித்தேன். அவர் அழுத்தார்.

“கணவரை நம்பி இங்கு வந்தேன். இப்படி ஆகும் என்று எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார். அவருடன், மூன்று சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்கு அரபி, ஆங்கிலம் மொழிகள் தெரியவில்லை. வெறும், இந்தி மொழி மட்டும் தெரிந்திருந்தது. கையில் பணம் இல்லாமல், கேம்பில் கொடுத்த உணவை உட்கொண்டு இருந்தார். அவருக்கு இந்திய அரசும் உதவ முன்வரவில்லை. அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட போது, அவர்களும் இந்தியாவிற்கு மகளை அழைத்து வரவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை.

இதுபோன்று எந்த ஒரு பிரச்சனை என்றாலும், அதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது, பெண்கள்தான்’ என்று தெரிவித்தார்.

பார்த்து வியந்த பெண்மணி..!

பார்த்து வியந்த பெண்மனி குறித்து பேசிய அவர், ‘நான் பார்த்து வியந்த பெண்மணி ஜெயலலிதாதான். நான் 1999 செய்தி துறையில் சேர்ந்துவிட்டேன். 2001 துவக்கத்தில், pleasant stay hotel வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வெளியானது. அதனால், தமிழ்நாட்டு சூழல் கலவரக்காடாக மாறிவிட்டது. அடுத்தநாள் செய்திதாளில் பார்த்துதான் பலவும் எனக்கு புரிந்துக்கொள்ள முடிந்தது.

அதன்பின், ஜெயா டிவியில் வேலைக்கு சேந்தேன். அப்போது, நடந்த தேர்தலில் 141 தொகுதியில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். அன்று, போயஸ் கார்டனில் பெரிய அளவில் கூட்டம். அதற்கு முன் அப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. வரும் எல்லா ஆண்களும், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா காலில், விழுந்தனர்.

ராமநாதபுரத்தில் லோக் அதாலத் மூலம் 650 வழக்குகளுக்கு சமரச தீர்வு..

அப்போது 'ஒரு பெண்மணியில் காலில், இத்தனை ஆண்கள் விழுகிறார்கள் என்றால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்! அவர்களை போன்றுதான் இருக்க வேண்டும்' என்றுதோன்றியது. ஒரு பத்திரிகையாளராக யார் இறப்பையோ பிறப்பையோ கொண்டாடவோ, வருத்தவோ கூடாதுதான். ஆனால், ஜெயலலிதா இறந்து, உடலை கொண்டு செல்லும் போது ஒரு பெண் தலைமையை இழந்துவிட்டோம் என்று மனதளவில் ஒரு சிறிய கலக்கம் உருவானது’ என்று தெரிவித்தார்.

பெண்களின் அரசியல் நாட்டம்?

தொடர்ந்து பேசிய அவர், ‘பெண்கள் அரசியலை பேசாமல் தவிர்க்கிறார்கள். தேர்தலின் போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூட அவர்கள் முடிவெடுப்பதில்லை. படித்த பெண்கள் கூட இதைதான் செய்கிறார்கள். எல்லா இடத்திலும், அரசியல் இருக்கும். அதில் மக்களுக்கு யார் எதை செய்கிறார்கள் என்பதை பெண்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வாக்குதானே, என்ன ஆகப்போகிறது என்று இருக்ககூடாது. ஒரு வாக்கு எல்லாத்தையும் தீர்மானிக்கும்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Jayalalitha, Srilanka, Syria