முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / Sankaraiah 100 : வாழும் வரலாறாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா - சிறப்புத் தொகுப்பு

Sankaraiah 100 : வாழும் வரலாறாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா - சிறப்புத் தொகுப்பு

சங்கரய்யா

சங்கரய்யா

தனது 95வது வயதிலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராட்டக் களம் கண்டவர் சங்கரய்யா. எளிய மக்களின் குரலாக 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கும் சங்கரய்யாவின் போரட்ட குணம்.

  • Last Updated :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் என்.சங்கரய்யா, இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்... சிறைவாசம், சுதந்திர போராட்டம் என வாழும் வரலாறாக விளங்கும் அவர் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு இது.

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள்... சட்டமன்ற பணிகள், இலக்கியம், எழுத்து, மொழி உரிமை என பன்முக தளத்தில், பலருக்கு அனுபவ பாடமாக விளங்குகிறார் தோழர் என்.சங்கரய்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி பிறந்த சங்கரய்யா மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கங்கள் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். 1940-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது, மாணவர் சங்கம் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியனார்.

நேதாஜி சுபாஸ் சந்திர போசை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் விடுதலைக்கான விதையை விதைத்த சங்கரய்யா, அதற்கு பரிசாக பெற்றது, பி.ஏ., இறுதி தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாக சிறைவாசம்.. 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு சீற்றங்குறையாத சிங்கமாய், ஆங்கிலேயருக்கு எதிராக கர்ஜித்தபோது மீண்டும் சிறையில் தள்ளினார்கள். ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்க அதிர்ந்து போன ஆங்கிலேயர்கள் சங்கரய்யாவுக்கு விடுதலை கொடுத்தனர்.

அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராடியதால் 4 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் 4 ஆண்டுகள் என தனது வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தார்.

1964-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாக்கப்பட்டது. அது உருவாக மூலகாரணமாக இருந்த 32 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர்.

1967-ல் மதுரை மேற்கு தொகுதி, 1977 மற்றும் 1980-ல் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியரும், தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியரும் இவரே.

அத்தியாவசியப் பொருட்களுக்கு நகரங்களுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டியிருப்பதை கூறி, ஆளுநர் உரையில் கிராமங்களில் நியாயவிலைக் கடையை அமைக்க வேண்டும் என சேர்க்குமாறு சங்கரய்யா சொன்னதை நிறைவேற்றினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என் ஒருவனுக்கு ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால் அனைத்தையும் சங்கரய்யாவுக்கு செலுத்துவேன் என சிலாகிக்கும் அளவுக்கு சங்கரய்யா மீது பெரு மதிப்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்திவைத்தவர் சங்கரய்யா, தன் குடும்பத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

Must Read : நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களைப் போற்றுவோம் - மு.க. ஸ்டாலின்

தனது 95வது வயதிலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராட்டக் களம் கண்டவர் சங்கரய்யா. எளிய மக்களின் குரலாக 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கும் சங்கரய்யாவின் போரட்ட குணம், 100-வது ஆண்டிலும் குறையவில்லை என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

top videos

    அன்றை சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி தொடங்கி இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் பயணிக்கும் நடமாடும் வரலாறு சங்கரய்யா. அவரின் 100வது பிறந்த நாளை பதிவு செய்வதில் பெருமையடைகிறோம்.

    First published:

    Tags: Birthday, Marxist Communist Party, Sankaraiah