ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

நில வீழ்ச்சியால் கடலில் மூழ்கப்போகும் நகரங்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

நில வீழ்ச்சியால் கடலில் மூழ்கப்போகும் நகரங்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இப்போது அனைவருக்கும் தண்ணீர்  என்ற கொள்கையால் எல்லா வீடுகளிலும் குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. இந்த வசதிக்கு நாம் கொடுக்கப் போகும் விலைதான் நில வீழ்ச்சி.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வரும் 2050க்குள் உலகம் முழுவதும் நில வீழ்ச்சியால் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நகரங்கள் கடலுக்குள் மூழ்கப் போகின்றனவாம். பொதுவாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்வதால் நகரங்கள் நீரில் மூழ்கும் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நில வீழ்ச்சி என்கிற புதிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது உலகம். அது என்ன நில வீழ்ச்சி.. பார்க்கலாம்..

  நகரமயமாக்கல் என்னும் கொள்கை உலகை புதிய, நவீனமாக மாற்றியுள்ளது. ஆனால் அதிகப்படியான நகரமயமாக்கல் இப்போது நமக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. நகர் பகுதிகளில் குறுகிய இடத்தில் அதிகப்படியான மக்கள் நெருக்கம் பல்வேறு இயற்கை சிதைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. ஆபத்தை உணராமல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம் என்று பூமியை புண்ணாக்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் நில வீழ்ச்சி என்னும் பேராபத்து இப்போது நம்மை சூழ்ந்துள்ளது.

  வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 68 விழுக்காடு பகுதிகள் நகரமயமாகும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. இது இன்னும் மிக மோசமான பேராபத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நகரமயமாக்கலின் உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கியமானது தண்ணீர் வசதி.

  கிராமப்புறங்களில் மக்கள் வசிக்கும் போது, தங்களின் உள் மற்றும் புற தண்ணீர் தேவைக்காக பெரும்பாலும் நீர் நிலைகளைத் தான் நம்பியிருந்தார்கள். அதனால் தண்ணீரின் தேவை மிக சொற்பமாகவுமு், சிக்கனமாகவும் இருந்தது.  ஆனால் இப்போது அனைவருக்கும் தண்ணீர்  என்ற கொள்கையால் எல்லா வீடுகளிலும் குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. இந்த வசதிக்கு நாம் கொடுக்கப் போகும் விலைதான் நில வீழ்ச்சி.

  1870-களில் தான் ஆழ்துளைக் கிணறுகள் அறிமுகமாகின. பூமியைத் துளைத்து குழாய் அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீரை மனிதன் என்று எடுக்கத் தொடங்கினானோ, அன்று தொடங்கியது நம் அழிவு  காலம். தற்போது நகர் பகுதிகளில் மிக நெருக்கமாக லட்சக் கணப்பான குழாய்கள் பூமிக்கடியில் புதைந்துள்ளன. அதன் மூலம் ஒவ்வொரு நாளும் பல கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பூமியின் நிலைத்தன்மையே கேள்விக்குறியாகி வருகிறது.

  பூமிக்கடியில் இருக்கும்  ஆக்யுஃபெர் என்னும் பகுதியில் இருந்து தான் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறோம். இதனால் ஆக்யுஃபெர் பகுதியில் இருக்கும் நீர் வேகமாக குறையும். அப்படி தண்ணீர் மட்டம் குறைந்தால் அதற்கு மேற்புறம் உள்ள சர்ஃபேஸ் சாய்ல் பகுதி கீழே இறங்கும். அப்படி இறங்கினால் நிலம் தன் உயரத்தை இழக்கத் தொடங்கும். ஆக்யுஃபெர் சரிவை ஒரு வழியாக இயற்கையே சரி செய்து கொள்ளும். எப்படி என்றால், மழை பெய்யும் போது மழைநீர் பூமிக்குள் சென்று ஆக்யுஃபெர் பகுதியை நிரப்பும். இதனால் ஆக்யுஃபெர் சரிவு ஓரளவு சமனில் இருந்தது.

  ஆனால் நகர்ப்பகுதியில் கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதோடு, கட்டிடங்களைச் சுற்றி உள்ள நிலப்பகுதியையும் சிமிண்டொல் மூடி விடுகிறோம். இதனால் மழை பெய்யும் போது மழைநீர் பூமிக்குள் செல்லாமல் கால்வாய்கள் வழியாக ஓடி கடலில் வீணாக கலந்து விடுகிறது. இதனால் சரியும் ஆக்யுஃபெர் தன்னை சமன் செய்து கொள்ள முடியவில்லை. எனவே தான் ஆக்யுபைர் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் சர்ஃபேஸ் சாயிலும் கீழே இறங்கி நிலத்தின் மட்டம் குறைந்து வருகிறது.

  ஒரு ஆய்வறிக்கையின் படி தற்போது ஆண்டுக்கு 6 முதல் 10 மில்லிமீட்டர் வரை நிலம் தாழ்ந்து வருகிறது. இதைத் தான் நில வீழ்ச்சி என்கிறார்கள் புவி ஆய்வாளர்கள். இது தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் நிலமட்டம் கடல் மட்டத்தை விட கீழே சென்று விடும். அப்படி நேர்ந்தால் கடல் நீர் நிலத்துக்குள் புகுந்து தரைப்பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கும். அப்படி வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகின் முக்கியமான ஆறு நகரங்கள் கடலுக்குள் முற்றிலும் மூழ்கி விடும் என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.

  அப்படி கடலுக்குள் மூழ்கப் போகும் முக்கியமான நகரங்கள் பட்டியலில் நம் மும்பையும் இருக்கிறது. ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் சராசரியாக நில மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு சரிந்துள்ளது. இத்தாலியில் 3 மீட்டர் நிலமட்டம் சரிந்துள்ளது. அமெரிக்காவின் முக்கியமான கடற்கரை நகரமான மியாமி 6 மீட்டர் அளவிற்கு நில மட்ட சரிவை சந்தித்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தா மிக வேகமாக கடலில் மூழ்கும் நரகங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறதாம். ஜகர்தா நகரில்  கடலோரத்தில் இருந்த வாலடோனா மாஸ்க் என்னும் மசூதியைச் சுற்றியிருந்த பகுதி 2001 ஆம் ஆண்டு வரை மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் இப்போது இந்த பகுதி முழுவதும் கடல் நீர் சூழ்ந்து மக்கள் வெளியேறியுள்ளார்கள்.

  ஜகார்தா மூழ்குமு் நகரங்கள் பட்டியலில் இருப்பதால் இந்தோனேஷியாவின் தலைநகரையே வேறு இடத்திற்கு மாற்றும் முடிவில் இருக்கிறதாம் அந்நாட்டு அரசு. இதே போல் அமெரிக்காவின் மியாமி, வியட்நாமின் ஹோ சி மின் சிட்டி, தாய்லாந்து நாட்டின பெரும்பாலான நகரங்கள், மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நகரமான லாகோஸ் என பல நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளன.

  இயற்கையை நாம் சீண்டிப் பார்த்தால் அதன் பதிலடி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதற்கு இந்த நிலவீழ்ச்சி மிக முக்கியமான எடுத்துக்காட்டு.. இனியும் விழித்துக் கொள்ளா விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் மொத்த உலகமும் கடலுக்குள் மூழ்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.. உஷாரைய்யா.. உஷார்

  செய்தியாளர்: ரொசாரியோ ராய்

  Published by:Murugesh M
  First published:

  Tags: International, Water