OPINION: விவசாயிகள் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியா மீது பினாமி யுத்தம் நடத்தும் சீனா

சீனா

மோடி ஆட்சியில் இடதுசாரிகளின் வலுவான அரண்களாகக் கருதப்படும் முக்கிய நிறுவனங்கள் மோடியின் தூய்மையாக்க நடவடிக்கைகளினால் ஆட்டம் கண்டது.

 • Share this:
  விவசாயச்சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் தங்களுக்குச் சாதகமாக மாற்றப்பார்க்கின்றனர். இதன் மூலம் இந்தியா மீது ஒரு ‘பதிலி போரை’ நடத்தி வருகின்றனர். குறிப்பாக சீனா இந்தியப் பகுதிகளில் ஊடுருவி இந்திய நிலங்களை ஆக்ரமிக்க திட்டமிட்டு வரும் நிலையில் எல்லையில் நின்று கொண்டு டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

  1962ம் ஆண்டு இந்தியா மீது சீனா போர்த் தொடுத்த போது இந்திய இடதுசாரிகளில் பலர் தாக்குதல் நடத்திய சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தது இங்கு வரலாற்றில் பதிவாகியுள்ளது. இன்று தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகளின் தோள்களின் மீது அமர்ந்து கொண்டு இந்த நக்சலைட்டுகளின் கொள்கைகள் கொண்டவர்கள் இந்தியாவின் எதிரியான சீனாவை திருப்திபடுத்தி வருகின்றனர்.

  இந்திய அரசியலில் தொலைநோக்குக் கொண்ட ஆளுமையாகப் பார்க்கப்படுபவர்களில் ஒருவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது உறுதியான கொள்கைகளுக்காக இவரை இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர். இந்த சர்தார் படேல் சீனாவிடம் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்ததையும் நாம் இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

  சர்தார் படேல் மறைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சீனா குறித்த படேலின் எச்சரிக்கை இன்றும் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படேலின் இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் சீனாவிடம் 1962 போரில் இந்தியா தோல்வி கண்டது. சில மாதங்கள் சென்ற பிறகு இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள் என்ற கோஷத்தையும் உருவாக்கப்பட்டது. படேல் இறப்பதற்கு முன்பாக 1950-ல் நேருவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதில் சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தினார். ஆனால் நேரு புறக்கணித்ததால் சுதந்திரம் இந்தியாவின் முதல் தோல்வியை எதிரி சீனாவிடம் சந்தித்தது.

  சர்தார் படேலின் பிற எச்சரிக்கைகளையும் இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இடதுசாரிகளின் சீரழிவு திட்டங்களுக்கு எதிராகவும் படேல் எச்சரிக்கை விடுத்தார். தெலங்கானாவில் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் இடதுசாரிகள் பிரச்சனைகளை உருவாக்க முயற்சி செய்து வந்தனர். இடதுசாரிகளைப் பற்றிப் படேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் அவர்களது இந்த போராட்டத்தை அவர் நசுக்கினார்.

  இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்தப் பார்க்கின்றனர். தேசத்தலைநகரையும் மற்றப்பகுதிகளையும் நிலைகுலையச் செய்யும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இடதுசாரிகளின் அடிப்படைகள் தகர்ந்து வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேற்கு வங்கத்தை ஆண்டுக்கணக்கில் ஆண்டவர்கள் இன்று அங்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டனர்.திரிபுராவிலும் மாணிக் சர்க்கார் அரசு வீழ்ந்தது. இடதுசாரிகள் வீழ்ந்தனர். காங்கிரஸுக்கு எதிராக தங்களை முன்னிறுத்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறகு அவர்களுடனேயே ஆட்சியைப் பங்குப் போட்டுக் கொண்டது. மன்மோகன் சிங் தலைமையிலான 2004-09 இடையிலான ஐமுகூ ஆட்சியில் இடதுசாரிகளின் கைதான் ஓங்கியிருந்தது.

  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சூழ்நிலை மாறிவிட்டது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ல் வந்த பிறகு அந்தச் சூழ்நிலை மாறியது. மோடி ஆட்சியில் இடதுசாரிகளின் வலுவான அரண்களாகக் கருதப்படும் முக்கிய நிறுவனங்கள் மோடியின் தூய்மையாக்க நடவடிக்கைகளினால் ஆட்டம் கண்டது. ஜேஎன்யு முதல் ஐசிசிஆர் வரை இது நடந்தது. இதனால் ஆடிப்போன இடதுசாரிகள் மோடி அரசைத் தாக்க வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். இந்தியாவில் தன் பலத்தினாலேயே ஆட்சியைப் பிடித்த முதல் வலதுசாரி அரசு மோடி தலைமை பாஜக அரசுதான். பாஜகவுக்கு ஆதரவளிப்பவர்கள் ஏழை மக்கள், நலிவுற்றவர்கள், இடதுசாரிகளின் இந்த வாக்கு வங்கியை பாஜக பிடித்தது இடதுசாரிகளின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்தது. மோடியின் வீடு மற்றும் சமையல் எரிவாயுத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் ஏழை மக்களே. இவர்கள்தான் மோடிக்குப் பின்னால் பாறை போல் தாங்குகின்றனர். பிஹார் தேர்தல் இதற்கு உதாரணம்.

  இவையெல்லாம் சேர்ந்துதான் இடதுசாரிகளை கோபாவேசப்படுத்தியுள்ளது. கடைசியில் வேறு வழி தெரியாமல் சில இடங்களில் மொபைல் கோபுரங்களை தகர்க்கின்றனர். மேலும் சில இடங்களில் கடைகளை சேதப்படுத்துகின்றனர், சாலை மறியல் செய்கின்றனர். இவர்கள் என்னதான் விவசாயிகளுக்காக காட்டுக்கூச்சல் போட்டாலும் விவசாயிகள் இவர்கள் பக்கம் திரும்புவதாக இல்லை. விவசாயிகள் தங்கள் தொழில்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் இடது சாரிகளுக்கு பஞ்சாப் விவசாயிகள் மூலம் இலக்குக் கிடைத்துள்ளது. பஞ்சாபின் அப்பாவி விவசாயிகள் சிலர் இவர்கள் கைகளில் விழுந்து விடுகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கான ஆயுதமாக இடதுசாரிகள் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

  இது எதிரிநாடான சீனாவுக்கு மிகவும் உகந்ததான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. பாகிஸ்தான் எப்படி இந்திய ராணுவத்தைச் சமாளிக்க முடியாமல் பினாமி யுத்தம் நடத்துகிறதோ அதே போல் சீனாவும் தற்போது விவசாயிகள் போராட்டத்தின் மூலமும் அதற்கான இடதுசாரிகள் ஆதரவு மூலமும் இந்தியாவுக்கு எதிராக பினாமி யுத்தத்தை நடத்த முயன்று வருகிறது, காரணம் டோக்லாம் முதல் லடாக் வரை இந்திய ராணுவம் சீனாவை என்ன சேதி என்று கேட்டதே.

  மோடி அரசு இடதுசாரிகள் உள்ளிட்ட சக்திகளுக்கு நிதி வரும் வாசலை மூடிவிட்டது, இதனையடுத்து அரசை நிலைகுலையச் செய்ய இவர்கள் விவசாயப் போராட்டங்களைக் கையில் எடுக்கின்றனர். டெல்லியைத் தங்கள் கைவசம் கொண்டு வர இந்தச் சக்திகள் பார்க்கின்றன, ஆனால் மோடி அரசு அவர்களை முறியடித்து வருகிறது. இப்போது இவர்கள் விவசாயிகளைத் தூண்டி விட்டு வருகின்றனர். பஞ்சாப் தேர்தல் வருவதையடுத்து ஆம் ஆத்மி, அகாலிதளம், காங்கிரசும் இந்தப் போராட்டங்களை தங்களுக்குச் சாதகமாக வளைக்கப்பார்க்கின்றன. போராட்ட நெருப்பை அணைப்பதற்கு பதிலாக அதை விசிறி விட்டு தூண்டி விடுகின்றனர்.

  இவர்கள்தான் முன்பு விவசாயச் சீர்த்திருத்தங்கள் கோரினர், இப்போது மோடி அரசு அதைச் செய்து காட்டியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலைகளை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.

  இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்ப்புச் சேவை நிறுவனங்கள் சீனாவின் நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கின்றன. தொலைத்தொடர்பு மட்டுமல்ல, சில்லரை வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா சீனாவுக்கு சவால் அளித்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கையிலெடுத்து சீனா இந்தியாவை நிலைகுலையச் செய்ய பினாமி யுத்தத்தை தொடங்கியுள்ளது. மோடியின் தற்சார்பு இந்தியா என்ற கனவு நிறைவேறி விட்டால் சீனா பெரும்பகுதி சந்தைகளை இழந்து விடும். கோவிட்-19க்குப் பிறகு சீனாவை பலரும் எதிர்நாடாக பார்த்து வரும் நிலையில், பல நாடுகளுக்கும் உதவும் இந்தியா நட்பு நாடாக செல்வாக்குப் பெற்று வருகிறது. எனவே நாளுக்குநாள் வலுப்பெற்று வரும் இந்தியாவை உள்ளிருந்தே அடுத்துக் கெடுக்க சீனா திட்டமிட்டு பினாமி யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிதியளிப்பது சிலபல கொள்கை ரீதியான செய்திகளுக்கு வெளியீடுகளுக்கு விளம்பரம் கொடுப்பது அல்லது சிலபல தலைவர்களை சீனாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது என்று பினாமி யுத்தத்தை சீனா தொடங்கியுள்ளது.

  இவையெல்லாம் மோடிக்கு புதிதல்ல, காந்திநகர் முதல் டெல்லி வரை இந்த டிசைன்களை அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மோடி போன்ற ஒருவரை வளைக்க முடியாது, ஆகவே தான் தங்கள் கோபங்களை அவர்கள் இப்படி காட்டுகின்றனர். நாட்டு மக்கள் இதனைப் பார்த்து வருகின்றனர்.

  (கட்டுரையாளர் பிரஜேஷ் குமார் சிங். கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் சொந்த கருத்தாகும்)
  Published by:Muthukumar
  First published: