ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

China| சீனாவின் புதிய நண்பன் தலிபான்: ஆப்கானின் 3 ட்ரில்லியன் டாலர் கனிம வளங்களைக் குறிவைக்கும் சீனா

China| சீனாவின் புதிய நண்பன் தலிபான்: ஆப்கானின் 3 ட்ரில்லியன் டாலர் கனிம வளங்களைக் குறிவைக்கும் சீனா

சீன அதிபர் ஜின்பிங்

சீன அதிபர் ஜின்பிங்

9/11 பயங்கரவாத இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா தற்போது அந்த நாட்டை அப்படியே அத்ரதையாக விட்டுச் சென்றதையடுத்து அங்கு தலிபான்களின் ஆட்சி தலைத்தூக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்கப் படைகள் அங்கிருந்து நகர்ந்தவுடன் ஜூலை 28ம் தேதி தலிபான் குழு ஒன்று சீனா சென்று நட்புக்கரம் நீட்டியுள்ளது. இதனையடுத்து தலிபான்களே சீனாவின் புதிய நண்பர்கள் என்று அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

  தென்கிழக்கு ஆசியாவில் தன்னை ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க வைக்க சீனா பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது, அந்தப் பொறியில் சமீபத்தில் சிக்கியுள்ளவர்களே தலிபான்கள்.

  இந்நிலையில் சீனாவின் தியாஞ்ஜினில் தலிபான்களுக்கும் சீன வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைக் குறித்த புகைப்படத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் சகாவான அப்துல் கனி பரதரும் இருக்கிறார்.

  இன்னொரு புகைப்படத்தில் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் ஒட்டுமொத்த தலிபான் குழுவும் இருக்கிறது.

  இது நட்பு முறை சந்திப்பு மட்டுமே என்று இருதரப்பும் கூறினாலும் சீனாவின் வர்த்தக நோக்கங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் தலிபான்களுடன் கூட்டு சேரும் முயற்சி என்றே சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. தலிபான்களுக்கு அங்கீகாரம் அளிக்க சீனா அவசரம் காட்டுவதும் சீனாவின் உடனடியான நோக்கங்களை பறைசாற்றுவதாக உள்ளது.

  அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து புத்துயிர் பெற்ற தலிபான்கள் தங்களுக்கு அங்கீகாரம் இருப்பதாகக் கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தானை தங்கள் வசம் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

  ஏற்கெனவே ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் தலிபான்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் உலக வளர்ந்த நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  சீனாவுக்கு தலிபான்களின் மீதான புதிய பாசம் அதன் வர்த்தக நோக்கங்களுக்கு என்றே தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் 3 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கனிம வளங்கள் இருப்பதும் சீனாவின் நட்பு முயற்சியின் ஒரு முக்கிய நோக்கமாகும்.

  2014-ல் அமெரிக்க நிலவியல் ஆய்வு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி ஆப்கானில் 60 மில். டன் தாமிரம், 2.2 பில்லியன் டன்கள் இரும்புத் தாது, 1.4 மில்லியன் டன்கள் அரிதான சில கனிமங்கள் உள்ளன. மேலும் அலுமினியம், தங்கம், துத்தநாகம், வெள்ளி, பாதரசம் மற்றும் லிதியம் ஆப்கானில் கொட்டிக் கிடக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கெனவே சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு லோகார் பகுதியில் கனிம வளங்களை அகழத் தொடங்கி விட்டன. மேலும் எண்ணெயும் கிடைக்கிறதாம் இதற்கான உரிமத்தை சீன பெட்ரோலிய கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. 25 ஆண்டுகளுக்கு 3 எண்ணெய் வயல்களை அகழ ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது.

  மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்க சீனா 60 பில்லியன் டாலர்காஇ முதலீடு செய்துள்ளது, எனவே இதில் ஆப்கானிஸ்தான் முக்கிய அங்கம் வகிக்கும் என்று தெரிகிறது.

  போர் அல்ல பொருளாதாரமே ஆப்கான் தலிபான்களுடன் சீனாவின் தற்போதைய நட்புக்கரம் நமக்கு உணர்த்துவதாகும்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Afghanistan, China, Taliban