சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: தூக்குத் தண்டனை தீர்வாகுமா?

news18
Updated: May 3, 2018, 6:23 PM IST
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: தூக்குத் தண்டனை தீர்வாகுமா?
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: மரண தண்டனை தீர்வாகுமா?
news18
Updated: May 3, 2018, 6:23 PM IST
சமீப காலங்களில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பு எப்போதும் இல்லாததை விட தற்போது இந்த சம்பவங்கள் அதிகரிப்பதையொட்டி சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.  12 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை  வழங்க வேண்டும் என்ற அவசரச் சட்டத்துக்கு சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மரண தண்டனை உச்சபட்ச தண்டனை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,  மரண தண்டனை சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை தவிர்க்க உதவுமா? குழந்தைகள் பாதுகாப்புக்கு உரிய நிதி ஒதுக்கப்படுகிறதா? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

நிதி ஒதுக்கீடு குறைவு

சிறுமிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு மத்திய பட்ஜெட்டில் மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சிறுமிகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு திட்டமான ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு (ஐசிபிஎஸ்)  648 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.725 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது மொத்த பட்ஜெட் தொகையில் 1 சதவீதம் மட்டுமே இதற்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ள பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நிதி போதவில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூகத்தின் நிலை

குழந்தை மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை முதன்மையான நோக்கமாக கொண்டுவருவதற்கான சூழ்நிலையை நாம் ஏற்படுத்தவில்லை. ஆணாதிக்க சமூகம் என்று நம்பப்படும் சமூகத்தை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளையும் நாம் எடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக குழந்தை பாதுகாப்பு அமைப்பையே நாம் மறைத்தும் மறந்தும் விட்டோம். ஆனால், தற்போது அதுதொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது திடீரென கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவருகிறது. இது எந்த வகையில் தீர்வைத் தரும்.

மரண தண்டனை தீர்வாகுமா?

உலக நாடுகளில் தற்போது 58 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை உள்ளது. மீதமுள்ள நாடுகள் மரண தண்டனையை நீக்கியுள்ளது. இந்த 58 நாடுகளும் மரண தண்டனை நீக்குவது குறித்த விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன. குற்றத்துக்கு மரண தண்டனை தீர்வாகுமா? என்ற கேள்வியும் சர்வதேச அளவில் எழுந்து வருகிறது. மேலும் மரண தண்டனை வழங்குவதால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதையும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு சூழ்நிலையில், ஓவ்வொரு குற்றத்துக்கும் மரண தண்டனையை இறுதி தண்டனையாக இந்தியா கொண்டுவருவது குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
Loading...
சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் 95 சதவீதம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவே நடைபெறுகிறது என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மரண தண்டனை என்று இருக்கும் பட்சத்தில், குற்றங்கள் பதிவதற்கான வாய்ப்பு குறைவு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  ஏனெனில் ஆணாதிக்க சமூகத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை சமரச முறையில் தீர்ப்பதற்கான வழிகள்தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

தற்போது கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் ஒரு குற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டதற்கு பின்பு வழங்கப்படும் தண்டனையாக மட்டுமே இருக்கும். ஆனால் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் இருப்பதற்கு இந்த தண்டனைகள் உதவாது. சட்டங்களை கடுமையாக்கும் பட்சத்தில் சமூக ரீதியிலான மாற்றங்களை நோக்கி நகர்வதே தீர்வாக அமையும்.
First published: May 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்