பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்த முடியுமா? விளக்குகிறது நியூஸ்18

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியான புல்வாமாவில் தீவிரவாதிகளை நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வியாழக்கிழமை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்த முடியுமா? விளக்குகிறது நியூஸ்18
இந்து நதி
  • News18
  • Last Updated: February 22, 2019, 9:35 PM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியான புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் இழந்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வியாழக்கிழமை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே வெள்ளிக்கிழமை “இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தால் எந்த வகையில் எல்லாம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நீரை நிறுத்த வாய்ப்புகள் உள்ளதற்கான அறிக்கையைத் தாயாரிக்க தனது கட்டுப்பாட்டிற்கு உள்ள நீர்வளத்துறையிடம் கூறியுள்ளேன்” என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியாவால் சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி பாகிஸ்தான் செல்லும் நீரை நிறுத்தமுடியுமா? இதற்கான சாதனங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.


சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் என்றால் என்ன?


இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. உடனே 1948-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரை பல்வேறு வகையில் தடுத்து நிறுத்தியது இந்தியா. உடனே தங்கள் நாட்டிற்கு வர வேண்டிய நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டத் தொடங்கியது. இந்தப் பிரச்னையில் தலையிட்டுச் சமரசம் பேசிய உலக வங்கி, சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது.

அதன் படி இந்தியா, பாகிஸ்தான் இடையில் பாயும் சிந்து, செனாப், ஜீலம், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் என்ற 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ளும் விதிகள் வகுக்கப்பட்டன.இந்தச் சமரசப் பேச்சுவார்த்தை நடந்து 1960-ம் ஆண்டு முடிந்து அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்கலால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அய்யூப் கான் இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பாயும் பீஸ், ரவி மற்றும் சட்லஜ் நதி நீரை இந்தியாவுடன் பகிரந்துக்கொள்வும், அதே நேரம் இந்தியாவிலிருந்து பாயும் சிந்து, செனாப், ஜீலம் நதி நீரை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ள சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

என்ன தான் பாகிஸ்தானுடன் நீரை பகிர்ந்துகொண்டாலும் அதில் 94 சதவீதம் நீரை இந்தியாவே பயன்படுத்திவருகிறது. மீத உபரி நிர் மட்டுமே பாகிஸ்தானுக்குப் பாய்கிறது.

இந்த ஒப்பந்தம் எப்படி இவ்வளவு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது?


சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்து நீர் பகிர்வு தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து விவாதித்து, சுமூகமான முடிவுகள் எடுக்க வேண்டும். அதன்படியே நீரை முறையாக இரண்டு நாடுகளும் பகிரிந்துக்கொள்ள முடியும்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நதி நீரை நிறுத்த வேண்டும் என்று கூறுவது இது தான் முதல் முறையா?

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நதி நீரை நிறுத்த வேண்டும் என்று கூறுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. 2016-ம் ஆண்டு உரி தாக்குதலின்போது இந்திய அரசு இதே போன்று பாகிஸ்தான் செல்லும் நதி நீரை நிறுத்த வேண்டும் என்று கூறியது.

பாகிஸ்தான் செல்லும் நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியுமா?


சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்தின் படி தனியாக முடிவெடுத்து நிறுத்த முடியாது. இந்தியா பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு உபரி நீர் மட்டுமே செல்கிறது. ஆனால் தற்போது செல்லும் உபரி நீரை வேண்டுமென்றால் குறைக்க முடியும். அதாவது கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரை அணைகள் கட்டி தடுக்கிறதே அப்படிதான்?

இதுபோன்று பாகிஸ்தான் செல்லும் நீரைக் குறைக்க மத்திய அரசு ஷாபூர் - காண்டி, சட்லெஜ்-பியாஸ் இணைப்பு, UJH அணை என மூன்று திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்குப் பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வியாழக்கிழமை இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நதி நீரை நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக டிவிட் செய்துள்ளார்.

சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற முடியுமா?


சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்திலிருந்து பாகிஸ்தானால் தனிப்பட்ட முறையில் விலக முடியாது. ஆனால் இந்தியாவுக்கு மட்டும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக விலக அனுமதியளிக்கும் படி சில விதிகள் சாதகமாக உள்ளன. இதற்கு அப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, பாகிஸ்தான் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் சில நிர்ப்பந்தங்களால் ஏற்றுக்கொண்டது.

இதேபோன்ற ஒப்பந்தங்கள் இந்தியா, நேபால், வங்க தேசம், சீனா இடையிலும் இருக்கின்றன. ஒருவேலை இந்தியா தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தை மீறினால் பாகிஸ்தானின் நட்புறவு நாடான சீனா பிரம்மபுத்திரா நீரை இந்தியாவுக்கு அனுப்பவதை நிறுத்த வாய்ப்பிருக்கிறது.

சர்வதேச சட்டங்களின் படி, மேலேயிருந்து கீழே பாயும் நதி நீரை, கீழ் பகுதி வரை அனைவரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறுகிறது.

இந்நிலையில் “தங்கள் நாட்டிற்கு கிழக்கு பகுதியிலிருந்து வந்துகொண்டிருக்கும் நீரை இந்தியா வேண்டுமென்றால் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும். சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்தில் அதற்கான உரிமைகள் அவர்களுக்கு உள்ளது. ஆனால் மேற்கு பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் நதி நீரை தடுத்து நிறுத்த இந்தியாவுக்கு உரிமையில்லை” என்று பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் கவாஜா சுமாயில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: News18 English
தமிழாக்கம்: தமிழரசு

 செல்போனை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்... சாம்சங் கலக்கல்

First published: February 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்