• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • OPINION: போராட்டங்களின் பெயரில் இந்தியாவின் தூண் போன்ற நிறுவனங்களை இழிவுபடுத்தலாமா? வர்த்தகச் சொத்துக்களை அழிக்கலாமா?

OPINION: போராட்டங்களின் பெயரில் இந்தியாவின் தூண் போன்ற நிறுவனங்களை இழிவுபடுத்தலாமா? வர்த்தகச் சொத்துக்களை அழிக்கலாமா?

போராட்டம்

போராட்டம்

மோடி அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சீனாவின் கையை ஓங்கச் செய்கின்றனரா? - இதை நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.

 • Share this:
  பொய்யுரைகளையும் பொய்ச்செய்திகளையும் திட்டமிட்டு பரப்புவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு எதிராக பழிதூற்றலும், இழிவுபடுத்தலும் செய்தால் யார் பயனடைவார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

  விவசாயப் போராட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டெலிகாம் கோபுரங்களை அழித்தால் பயனடையப்போவது யார்? ஐபோன் ஒப்பந்த உற்பத்தி தொழிற்சாலையில் மூளைக்கெட்டத்தனமாக வன்முறைகளை நடத்துவதன் மூலம் யார் அதிகம் பயனடைவார்கள்? இத்தகைய செயல்கள் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு அயல்நாடுகள் தங்கள் முதலீடுகளைத் திருப்ப அரசு மேற்கொண்டு வரும் ஓய்வுஒழிச்சலில்லா முயற்சிகளை இத்தகைய வன்முறைகள் இடையூறு செய்யலாமா?

  2030-32-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உயர்த்தப் பாடுபடும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் மதிப்பு மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் பயனடையப்போவது யார்? உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்க்கும் இடமாக இந்தியா இருக்கும் போது அதனை இடையூறு செய்து அழிக்கும் செயல்களால் யாருக்கு நன்மை? யார் பயனடைவார்கள் என்ற கேள்விக்கு ஒரே பதில், சீனாதான் என்பதாகவே இருக்கும்.

  இதைப் பரிசீலியுங்கள்: சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் அக்டோபர் 2020-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த மாதத் தொடக்கத்தில் இந்திய மொபைல் மாநாட்டில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி நெட்வொர்க்கை 2021க்குள் கொண்டு வரும் என்று அறிவித்தார். இந்தியத் தொலைத் தொடர்பு துறை வரலாற்றிலேயே இந்திய நிறுவனம் ஒன்று புதுயுக புதிய தலைமுறை தொழில்நுட்பத்தை அறிவித்ததோடு முதல்முறையாக சீனாவின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தாமல் நெட்வொர்க்கை வளர்த்தெடுக்கும் முயற்சியாகும். இது இந்தியாவின் பெருமை.

  கோவிட்-19 வைரஸ் உச்சத்திலிருந்த போது கூட ரிலையன்ஸ் ஜியோ தனது 25% பங்குகளை ரூ.1.18 லட்சம் கோடிக்கு விற்று ரூ.5.16 லட்சம் கோடி மதிப்பை உருவாக்கி இந்திய நிறுவனம் ஒன்றில் சாதனையான அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்து பெரிய சாதனை படைத்தது.

  இவையெல்லாமே சீனா உலக நாடுகள் மத்தியில் தன் மதிப்பை இழந்த போதும் சீனாவின் பெரிய நிறுவனமான ஹூவே பலநாடுகளில் கரும்பட்டியலிலும் இணைக்கப்பட்ட போது நடந்தது. பெரிய அளவில் முதலீடுகளை ரிலையன்ஸ் ஜியோ ஈர்க்கும் முன்பாக டெலிகாம் கட்டணங்களை ரிலையன்ஸ் ஜியோ இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடிக் குறைப்பு செய்தது. இதன் மூலம் பிராட்பேண்ட் அனைத்து இந்தியர்களுக்கும் மலிவாகக் கிடைக்க வழிவகை செய்தது. இன்றுகூட இந்த மலிவு விலை பிராட் பேண்டைப் பயன்படுத்தியே இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் மூளையற்ற விதத்தில் எதிர்ப்பிராச்சாரம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வரும் முரணைக் கண்கூடாகக் காண்கிறோம்.

  இதைவிட அதிர்ச்சிகரமான து போராட்டம் என்ற பெயரில் இத்தகைய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் சேதம் செய்யப்படுவதே. 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக இந்தியா மாறுவதன் மீது இந்தச் செயல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் மதிப்பென்ன தெரியுமா? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதன் 5ஜி இலக்குகளுக்காகத் தாக்கப்படுகின்றன.

  எனவே, 1500 மொபைல் கோபுரங்களைத் தகர்ப்பது, ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை சூறையாடுவது போன்றவை உடனடியாக திட்டமிடாத செயல்களா அல்லது இந்த இரண்டு சம்பவங்களும் இதோடு கடந்த ஓராண்டாக திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் பொய்களின் ஒரு பகுதியா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்துக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டுவரும் பரப்புரையாகும். சீனாவிடமிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் மிகவும் தந்திரமாக நெய்யப்பட்ட சதித் திட்டங்களாகும் இது. இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாற்றுவதில் சில தொழில்துறைகளின் பெரிய நிறுவனங்கள், சேவைத்துறையில் மிகப்பெரிய பெயர்கள் முக்கியப் பங்காற்றும். பிரதமர் மோடி தலைமையிலான தேஜகூ ஆட்சி பாதுகாப்பான முதலீடுகளை உறுதி செய்யவில்லை எனில் அன்னிய முதலீடுகளை வரவேற்பதில் பெரும் சிக்கல்தான் ஏற்படும்.

  எனவேதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள் உள்நாட்டுக் குழப்பங்களை தூண்டி விடுகின்றனர். கும்பல் வன்முறை, பொதுவாழ்க்கையில் சகஜ நிலையின்மை போன்றவற்றை தூண்டி விடுகின்றனர். முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் அது இந்தியாவையும் இந்திய மக்களையும் பெரிய அளவில் பாதிக்கும்.

  இரண்டாவதாக புதிய விவசாயச் சட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தை பெரிய அளவில் முன்னேற்றி பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்யும். நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ மாதிரியில் இந்திய விவசாயம் நடந்து வருவதால் இடைத்தரகர்களின் ஆட்சி விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயம் செய்வதில்லை.

  விவசாயச்சட்டங்களினால் பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் இடைத்தரகர்கள்தான், கமிஷன் ஏஜெண்ட்கள்தான். இதனால் புதிய பிரச்சாரம் தொடங்கியுள்ளனர், அதாவது கார்ப்பரேட்கள் விவசாயிகளின் நிலத்தை அபகரித்து விடுவார்கள் என்று புதிய பொய் பரப்பப்பட்டு வருகிறது.

  இந்தியாவின் எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே இந்திய ஊரக வளர்ச்சியில் அக்கரை கொண்டிருந்தால், இந்திய விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டியதல்லாமல் உள்கட்டமைப்பு வசதிகளைத் தாக்கி அழிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இத்தகைய போக்கு இந்தியாவின் எதிரிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும். மோடி அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சீனாவின் கையை ஓங்கச் செய்கின்றனரா? - இதை நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.

  (கட்டுரையாளர் பதிகிரித் பய்னே. கட்டுரையில் இடம்பெற்றவை கட்டுரையாளரின் சொந்த கருத்துகள் )

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: