• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவின் அழகும், தனித்தன்மையும் நிறைந்த வீடு - ஒரு பார்வை

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவின் அழகும், தனித்தன்மையும் நிறைந்த வீடு - ஒரு பார்வை

நடிகர் ராஜ்குமார் ராவ்

நடிகர் ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ் உங்களை அவரது வீட்டின் ஒரு சிறப்பு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதை இங்கே காணுங்கள்.

 • Share this:
  பிரபலமான வெப் நிகழ்ச்சியான 'Asian Paints Where The Heart Is' சீசன் 4 பார்வையாளர்களுக்கு இந்தியாவின் மிகப் பெரிய பிரபலங்களின் இல்லங்கள், அவர்களின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் சிறப்பு அலங்காரத் தேர்வுகள் மற்றும் குடும்பம், அன்பு மற்றும் ஒற்றுமை குறித்த அவர்களின் கருத்துக்களுடன் எவ்வாறு இணைகிறது என்பதைப் பற்றிய தனித்துவமான பார்வையை வழங்குகிறது. இதன் ஆறாவது எபிசோடில், ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள தனது அழகிய இல்லத்திற்கு பார்வையாளர்களை அழைக்கிறார். நாம் இந்த தேசிய விருது பெற்ற நடிகருடன் இணைத்து பார்க்கும் அந்த ஆடம்பரமும் கலைத்திறனும் அவரது இல்லத்தில் உள்ள ஒவ்வொரு மூலையும் வெளிக்காட்டுகிறது.

  வேறுபட்ட தளங்களுடன் அமைந்த அவரது வீட்டின் படங்களைப் போலவே,  தமக்கு அவருடைய இல்லம் மிகச்சரியான இடமாக  அமைந்துள்ளதாய் ராஜ்குமார் ராவ் சிந்தித்து உணர்வது நம்மை பிரமிக்க வைக்கிறது.தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இடையேயான இடைவெளி மற்றும் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் உள்ள இடத்தை நிர்ணயிப்பதில் - மற்றும் இணைப்பதில் உதவும்- அவர் வீட்டில் அமைந்த அமைதி மற்றும் நிம்மதியின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. ராஜ்குமாரின் இல்லத்தில் அமைந்த அரவணைப்பும் ஆறுதலும், அவர் வீட்டிலேயே இருந்து,  படைப்பு நோக்கங்களில் ஈடுபடுவதற்கான அவரது ஆசையை உணர்த்துகிறது.

  அதேவேளையில், ஒரு குர்கான் வீட்டில், 16 உறுப்பினர்களுடன் ஒரு கூட்டு குடும்பத்தில் தொடங்கிய அவரது பயணத்தில் ஒரு மைல்கல்லையும் குறிக்கிறது. இப்போது இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ராஜ்குமார் ராவ்வின் வீடு, அவருக்கு கிடைக்கக்கூடிய சிந்தனை மற்றும் சுயநிறைவுக்கான பரந்த நோக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

  வேறுபட்ட தளங்களுடன் அமைந்த அவரது அபார்ட்மென்ட்டின் மேல் பிரிவில்,  ராஜ்குமார் விருந்தினர்களை மகிழ்விக்கவும், தொழில் சார்ந்த பணிகளை  நடத்தவும் விரும்புகிறார்.மேலும் வீட்டின் கீழ்பகுதியில், வசதியான மற்றும் நெருக்கமான தனிப்பட்ட இடம் அமைக்கப்பட்டுள்ளது.வடிவமைப்பு நுட்பங்கள், கவர்ச்சியானவற்றை அதிநவீனத்துடன் சிரமமின்றி ஒன்றிணைக்கின்றன.கவனமாக நிர்வகிக்கப்பட்ட கலைப்படைப்புகள், கண்களைக் கவரும் சாதனங்கள் மற்றும் வண்ண வடிவங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தி நிற்க வைக்கிறது. வீட்டின் அலங்கரிப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பு கூறுகளுடன் பொருந்துகிறது. இதனால் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தனித்துவமான ஸ்டைல் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ளது.அவை ராஜ்குமார் ராவ்வின் பல மனநிலைகளைக் கவர்ந்து கைப்பற்றுகின்றன.மேலும் வண்மையுளம் உடையவர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு வீடாக அமைகிறது.

  ராஜ்கும்மர் ராவ் மற்றும் அவரது அன்பான நாய் காகாவுடன், உங்களை அவரது வீட்டின் ஒரு சிறப்பு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதை இங்கே காணுங்கள்.

   

  <>

  'Asian Paints Where The Heart Is - சீசன் 4' இல் இடம்பெற்ற மற்ற பிரபலங்களான ஷங்கர் மகாதேவன், தமன்னா பாட்டியா, அனிதா டோங்ரே, ஸ்மிருதி மந்தனா, பிரதீக் குஹாத், மற்றும் உடன்பிறப்புகளான சக்தி மற்றும் முக்தி மோகன் ஆகியோர் தமது இல்லக் கதவுகளைத் திறந்து, நினைவுகளைப் பகிர்ந்து, மற்றும் தாங்கள் வாழும் இடத்துடன் அவர்கள் வைத்திருக்கும் சிறந்த உணர்ச்சி தொடர்புகளை பகிர்கின்றனர். பிரபலங்கள் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றிய இந்த வடிகட்டப்படாத, தனிப்பட்ட பார்வைதான் ‘Asian Paints Where The Heart Is’ இன் முந்தைய மூன்று சீசன்களில் கிட்டத்தட்ட 250 மில்லியன் வியூக்களை பெற உதவியது. இப்போது சீசன் 4 உடன் இன்னும் சில இல்லங்களின் மாயங்களை உயிர்ப்பிக்க நாங்கள் தயாராக உள்ளோம்!

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: