அழைத்த பாஜக.. அலறிய அஜித்..

ஆன்மீக அரசியல் என்பது பா.ஜ.கவிற்கு ஆதரவான ஒன்றாகப் பார்க்கப்பட்டதோடு, ரஜினியின் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக விமர்னங்கள் எழுந்தன.

அழைத்த பாஜக.. அலறிய அஜித்..
அஜித் குமார்
நடிகர் அஜித்தைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் அவர்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இனி மோடியின் தொண்டர்களாக மாறி, மோடியின் திட்டங்களை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழிசை பேசிய அடுத்த நாளே, சில அரசியல் நிகழ்வுகளுடன் தன் பெயரையோ, தனது ரசிகர்களின் பெயரையோ சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளைத் தான் விரும்பவில்லை என்றும், அதனாலேயே தான் ரசிகர்மன்றங்களைக் கலைத்ததாகவும், தேர்தல் நேரத்தில் வரும் இதுபோன்ற செய்திகளை தான் விரும்பவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தன் ரசிகர்களை நிர்பந்தித்து இல்லை. இனியும் மாட்டேன் என்று அஜித்திடம் இருந்து வெளியாகியிருந்த அறிக்கை வாழு… வாழ விடு என்று நிறைவுபெற்றது.

ரஜினிகாந்த், மோடி சந்திப்பு


அஜித் ரசிகர்கள் பா.ஜ.கவில் இணைப்பு என்ற செய்தியையும் அந்த விழாவில் தமிழிசையின் பேச்சையும் அஜித் விரும்பாததன் விளைவே, இந்த அறிக்கை என பார்க்கப்படுகிறது.


இதற்கு முன்பு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக இணையும்படி மோடி விடுத்த அழைப்பை நடிகர் கமல் ஏற்றுக் கொண்டபோது, நடிகர் கமல் மூலமாக தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக கமல்ஹாசன்


பின்னர், மாட்டிறைச்சி விவகாரம் போன்றவற்றில் கமல் தெரிவித்த கருத்துக்கள், மத்திய அரசின் மீதான விமர்சனங்கள், இறுதியில் அவர் தனிக்கட்சி தொடங்கியது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியபோது, தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு கமலைப் பயன்படுத்த எண்ணிய அக்கட்சியின் உத்தி தோல்வியில் முடிவடைந்ததாகவே விமர்சனங்கள் எழுந்தன.
பிரதமர் மோடி, விஜய் சந்திப்பு


கமலைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அவரது அரசியல் வருகை குறித்து அறிவித்தபோது கூறிய ஆன்மீக அரசியல் என்பது பா.ஜ.கவிற்கு ஆதரவான ஒன்றாகப் பார்க்கப்பட்டதோடு, ரஜினியின் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக விமர்னங்கள் எழுந்தன.

ரஜினி தரப்பில் இருந்து நேரடியாக இதற்கு எந்த மறுப்போ, விளக்கமோ கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட, ரஜினி அவரது சமீபத்திய திரைப்படங்களான கபாலி, காலா, பேட்ட போன்றவற்றில் பயன்படுத்தும் காட்சிகள், வசனங்கள் மூலமாக அவர் தனது நிலைப்பாட்டை சொல்ல விரும்புவதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம் என்று அவர் சொல்லியிருப்பதே பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளோடு அவர் கூட்டணிக்குக் கூட தயாராக இல்லை என்பதையே காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி, கமல் ஆகிய உச்ச நட்சத்திரங்கள் தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்ற நிலையில், அடுத்த தலைமுறையின் உச்ச நடிகர்களான விஜய், அஜி்த் மீது அப்பார்வை விழுந்தது. இதில், கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழகம் வந்த மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்ததன் தொடர்ச்சியாக கோவையில், நடிகர் விஜயைச் சந்தித்தார்.

மிகப்பெரிய தலைவர் மோடி, அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் நான் அவரைச் சந்தித்தேன் என்று நடிகர் விஜய் பின்னர் கூறியபோது, நடிகர் விஜய் மூலமாக பா.ஜ.க வளர முயற்சிப்பதாக செய்திகள் பரவின. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி ஆட்சியின் திட்டங்கள் குறித்து அதே விஜயின் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகளுக்காக விஜயை, ஜோசப் விஜய் என்று விமர்சித்தார் ஹெச்.ராஜா. ஜோசப் விஜய் என்ற பெயரில் விஜயிடம் இருந்து வந்த அறிக்கையும், பா.ஜ.கவின் தீவிர எதிர்ப்புக்குப் பிறகும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்படாத காட்சிகளும், விஜய் மூலமாக பா.ஜ.கவை தமிழகத்தில் வளர்க்கத் திட்டம் என்று பரவிக்கொண்டிருந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தமிழகம் வந்த மோடி, ரஜினி, விஜய் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் கமலைச் சந்தித்தார். இந்நிலையில் விரைவி்ல் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், அதுபோன்றதொரு சூழல் தற்போது இல்லை என்ற நிலையிலேயே, மற்றுமொரு உச்ச நட்சத்திரமான அஜித் ரசிகர்களை நோக்கி தமிழக பா.ஜ.க தங்கள் பார்வையைத் திருப்பியதாகவும், ஆனால் அஜித்திடமிருந்து வந்த உடனடி அறிக்கை ,ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜித் ரசிகர்களை கவர நினைத்த பா.ஜ.கவின் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Also see:

First published: January 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்