பிக்பாஸ் 2: போட்டியாளர்கள்தான் புதுசு...கேரக்டர்கள் பழசு!

news18
Updated: June 19, 2018, 10:00 AM IST
பிக்பாஸ் 2: போட்டியாளர்கள்தான் புதுசு...கேரக்டர்கள் பழசு!
பிக்பாஸ்
news18
Updated: June 19, 2018, 10:00 AM IST
பிக் பாஸ் சீசன் 2 விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், அதிலுள்ள கதாபாத்திரங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. 

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் நிகழ்ச்சிகள், நாடகங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அவற்றுடன் மக்கள் ஒன்றிப் போய் விடுவதுதான். பொதுவாக மனிதர்களுக்கு மற்றவர்களின் விஷயங்களை கேட்பதிலும், தெரிந்துக்கொள்வதிலும் ஆர்வம் அதிகம். ஆதிகாலத்தில் தற்காப்புக்காக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த பழக்கம் காலம் செல்ல செல்ல மருவி, புரளி பேசவில்லை என்றால் தூக்கமே வராது என்பது போன்ற கதையாகி விட்டது.

அழகிய கிராமங்கள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாறுவதற்கு முன்பு ஊர் திண்ணையில் உக்கார்ந்து நம் பாட்டிமார்கள் பேசும் கதைகள்தான், தற்போது மருவி சமூக வலைதளங்களின் விவாதங்களாக மாறிவிட்டன. "நாட்டின் பொருளாதாரம் சரிவு" என்ற தலைப்பில் போடப்படும் செய்திகளை விட "கள்ளக்காதலால் பெண் வெட்டி கொலை" என்ற செய்திக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நம்முடைய ஆழ்மனது குரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

பத்திரிகைகள் போடுவதாலும், நாடகங்களில் காட்டுவதாலும் இந்த மாதிரியான செய்திகளையும், காட்சிகளையும் நாங்கள் பார்க்கிறோம் என்று மக்களும், நாட்டில் நடப்பதை தானே போடுகிறோம் என்று ஊடகங்களும் மாறி மாறி பரஸ்பர புகார்கள் தெரிவித்துக்கொண்டாலும் இந்த இருதரப்பினரிலும் விதிவிலக்குகள் இருக்கதான் செய்கிறார்கள்.

வேகமாக பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது சாலையில் கூட்டத்தை பார்த்தால் நிற்பதை போல, உள்ளே இருக்கும் பரிசு பொருட்கள் என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதை போல, பக்கத்து வீட்டில் கேட்கும் அழுகுரலுக்கு காரணம் தெரிந்துக்கொள்ளாமல் தலைவெடித்து போடுவது போல..... மனிதர்களின் ஆழ்மனது ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும், குரோதங்களுக்கும், சுயபரிசோதனைக்கும், அன்பிற்கும், தீனிப்போடுவது தான் பிக்பாஸின் வெற்றியாக கருதப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் அனிமேஷன் படமான 'ஐஸ்-ஏஜ்' படத்தை பார்த்தால் உலகத்தில் சக்திவாய்ந்த குழுவாக விளங்குவது எது என்பது அழகாக உணர்த்தப்பட்டிருக்கும். பலசாலியான மேமூத் யானை, முட்டாள் ஸ்லாத், கோபக்கார சிங்கம், புத்திசாலியான வீசெல் இந்த கூட்டணி இருந்தால் அங்கு சுவாரஸ்யம், சண்டை, நகைச்சுவை, கோபம், சாகசங்கள் என்று அனைத்திற்கும் பஞ்சம் இருக்காது. இந்த கதாபாத்திரங்களின் கலவை தான் அந்த கூட்டணிக்கு பலம். யோசித்து பார்த்தால் நம்முடைய நண்பர்கள் வட்டத்திலும் இந்த மாதிரியான ஒரு கூட்டணி இருக்கும்... இது வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.

இதே பாணியை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் போன சீசனில் இடம்பெற்ற போட்டியாளர்களின் குணாதிசயங்களை ஒத்த போட்டியாளர்களே இந்த முறையும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த சீசனிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என பேசப்படுகிறது.

ஓவியா - யாஷிக்கா (சென்ஷேஷ்னல்)

வையாபுரி - தாடி பாலாஜி (போற போக்கில் போட்டு கொடுப்பது)

கஞ்சா கருப்பு - சென்ராயன் (வெகுளித்தனமான பேச்சு)

ஆரவ் - ஷாரிக் ஹாசன் (ஆண் அழகன்)

காய்திரி ரகுராம் - மமதி சாரி (அதிரடியான பார்ட்டிகள்)

பரணி - போப் டானி (எமோஷ்னல் ஜாலி பேக்கேஜ்)

நமிதா - மும்தாஜ் (கவர்ச்சி)

ஸ்நேகன் - பொன்னம்பலம் (அறிவுரை பார்ட்டிகள்)

அனுயா - ஐஸ்வர்யா தத்தா (கூட்டத்தில் கோவிந்தா)

ரைசா - ஜனனி ஐயர் (அழகும் திமிரும்)

ஜூலி - நித்யா (கனவுலகத்தில் மாட்டிக்கொண்ட நிகழ்காலங்கள்)

ஹார்த்தி - ரம்யா, வைஷ்ணவி (என் தங்கம்... என் உரிமை)

ஷக்தி - மஹத் (திரையுலகில் முடிவுரை எழுதப்பட்ட ஹீரோக்கள்)

கணேஷ் - அனந்த் வைத்தியநாதன் (யார் எப்படி போனா எனக்கென்ன...?)

ஸ்ரீ - ரித்விக்கா (எதுக்குடா உள்ளே வந்தோம்...)

 

- எஸ்.பி.தக்ஷ்ணாமூர்த்தி, சீனியர் சப்-எடிட்டர்
First published: June 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...